ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரின் வன்முறையை உலகிற்கு சொன்ன பெண்! - நாடியா முராத்
நாடியா முராத் |
நாடியா முராத் எழுதிய நூல் |
நாடியா முராத்
மனித உரிமை செயல்பாட்டாளர்
யாசிடி என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர். நாடியா. இவரது இனக்குழு சிரியா, இராக், ஈரான் ஆகிய நாடுகளில் வசிக்கிறார்கள். 1995 ஆம் ஆண்டு கோச்சோ, ஈராக்கில் பிறந்தவர் இவர்.
விவசாயத்தை நம்பி வாழ்ந்த குடும்பம் நாடியாவினுடையது. இவர் தனது கிராமத்தில் வாழ்ந்து வந்தபோது, ஐஎஸ் தீவிரவாதிகள் இவர்களது கிராமத்தை தாக்கி அழித்தனர். 600 ஆண்களை கொன்றனர். ஐ.நா தீவிரவாதிகள் அமைப்பு என ஐஎஸ்ஐஎஸ்ஸை அறிவித்துள்ளது. யாசிடி என்ற இனக்குழுவைச் சேர்ந்த நிறைய பெண்களை தீவிரவாதிகள் பிடித்து சென்று செக்ஸ் அடிமைகளாக வைத்து சித்திரவதை செய்தனர். ஒருநாள் இருநாளல்ல மூன்று மாதங்கள் அந்த நரகத்தை நாடியா பிறருடன் சேர்ந்து அனுபவித்தார்.
ஒருநாள் அவரை பிடித்து அடைத்து வைத்திருந்த அறை திறந்து கிடக்க, அங்கிருந்து தப்பினார். அகதிகள் முகாம் உள்ள இடத்திற்கு அவர் சென்றார். அங்குள்ள குடும்பம் ஒன்று, நாடியாவிற்கு உதவிகளை செய்தனர். பின்னாளில் அவர் ஜெர்மனிக்கு செல்ல அங்கேயே உதவிகள் கிடைத்தது.
யாசிடி இனக்குழு பெண்களின் பாதிப்பிற்கு நாடியா முராத் முக்கியமான அடையாளமாக இருந்தார். இதன் காரணமாக மனிதர்களை கடத்தி கொடுமை செய்வதற்கு எதிராக பிரசாரம் செய்யும் தூதராக (2016) நாடியாவை ஐ.நா நியமித்தது.
நாடியா முராத் |
நாடியா இனிஷியேட்டிவ் என்ற பெயரில் அமைப்பைத் தொடங்கி சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக உழைத்து வருகிறார். உலக நாடுகளின் தலைவர்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வை வழங்கி வருகிறார்.
தனது ஐஎஸ்ஐஎஸ் அனுபவங்களை தி லாஸ்ட் கேர்ள் - மை ஸ்டோரி ஆப் கேப்டிவிட்டி அண்ட் மை ஃபைட் அகெய்ன்ஸ்ட் தி இஸ்லாமிக் ஸ்டேட் என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக