கண்ணாடி மூலமே வீடியோக்களை எடுக்க வழி செய்யும் பேஸ்புக் கண்ணாடி! - ஸ்டோரிஸ் கண்ணாடி

 









கடந்த செப்டம்பர் 2021 அன்று பேஸ்புக்கும், ரேபான் நிறுவனமும் இணைந்து ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் ஒன்றை அறிவித்தனர். இந்த கண்ணாடியை அணிந்து படம் எடுக்க, பாடல்களை பதிவு செய்ய, வீடியோக்களை எடுக்க பாடல்களை கேட்க முடியும். 

ஸ்டோரிஸ் என்ற கண்ணாடி வெளியானபோது, அதன் தகவல் பாதுகாப்பு பற்றி பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்கள். பயனர்களின் விருப்பப்படி வீடியோக்களை படங்களை எடுக்கலாமா, இதனை கட்டுப்படுத்துவது யார், இதனை பிற சமூக வலைத்தளங்களிலும் பயன்படுத்துவார்களா என நிறைய கேள்விகள் உருவாயின. 

இந்த கண்ணாடியில் இரண்டு கேமராக்கள் இருக்கும். ஸ்பீக்கர்கள் இருக்கும். மூன்று மைக்குகளும் கூட. இதனை குரல் மூலம் கட்டுப்படுத்தலாம். ஹலோ பேஸ்புக் சடாரென வீடியோ எடு என்றால் கண்ணாடி இயங்கத் தொடங்கும். நன்றாக சார்ஜ் செய்த கண்ணாடி மூலம் 30 நொடி நீளமுள்ள 50 வீடியோக்களை எடுக்கலாம் என்று பேஸ்புக் கூறியுள்ளது. 



இதில் எடுக்கும் படங்கள் ஸ்மார்ட்போனில் எடுக்கும் புகைப்படங்களை விட குறைந்த தரமே கொண்டவை. வீடியோக்களை எடுத்தபிறகு அதனை எடிட் செய்து பேஸ்புக்கில் போடலாம். மெட்டாவின் பிற கம்பெனி தளங்களிலும் பதிவு செய்யலாம். கண்ணாடியை ஸ்டைலாக எடுத்து போடுவதற்கு முன்னர், பேஸ்புக் கணக்கில் பிற சமூக வலைத்தள கணக்குகளில் கணக்கு தொடங்கி இணைவது முக்கியம். ஒருமுறை வீடியோவை எடுத்துவிட்டால் போதுமானது. அதனை பேஸ்புக் பார்த்துக்கொள்ளும். இதனை நேரடியாக கையாளும் திறனை இந்த நிறுவனமே கொண்டிருக்கும். எனவே தகவல் பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டுக் கொண்டே நிறைய வீடியோக்களை சுட்டுப்போடுங்கள். இப்போதே இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ்க்கு விளம்பரம் வந்துவிட்டது. மெட்டா கம்பெனிக்கும் நிறைய கன்டென்ட் தேவைப்படுகிறதே?


bbc sf

கருத்துகள்