சிறந்த தமிழ் சிறுகதைகளின் தொகுப்பு! - நூல் அறிமுகம்
புத்தகம் புதுசு!
தி கிரேட்டஸ்ட் தமிழ் ஸ்டோரிஸ்
எவர் டோல்டு
தொகுப்பு
சுஜாதா விஜயராகவன்
மினி கிருஷ்ணன்
ஆலெப்
699
கடந்த நூற்றாண்டில் தொடங்கி நடப்பு ஆண்டு வரையிலான சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு. பாரதியார், சா.கந்தசாமி, பாமா, பெருமாள் முருகன், பூமணி ஆகியோரின் கதைகள் இதில் உள்ளன.
பெட்டர் ஆப் டெட்
லீ சைல்ட் - ஆண்ட்ரூ சைல்ட்
பாந்தம் பிரஸ்
699
ஜேக் ரீச்சரை மையமாக கொண்ட சாகச நாவல். இதில் அரிசோனாவில் விபத்துக்குள்ளான காரிலிருந்து எழும் ரீச்சர், தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்து சூழும் பிரச்னைகளிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதே கதை. கூடவே ஃஎப்பிஐ ஏஜெண்ட் மிச்செலா ஃபென்டன் தனது சகோதரியை தேடிக்கொண்டிருக்கிறார்.
தி ஷாடோஸ் ஆப் மென்
ஆபிர் முகர்ஜி
ஹார்வில் செக்கர்
699
1923ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெறும் கதை. ஆங்கிலேயர் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு இந்து தத்துவவாதி ஒருவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவரைக் கொன்றது யார் என மதக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஊரில் உருவாகிறது. அதனை தடுக்க குற்றவாளியை போலீசார் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதுதான் கதை.
இந்தியா அண்ட் தி பங்களாதேஷ் லிபரேஷன் வார்
சந்திரசேகர் தாஸ் குப்தா
ஜக்கர்நட்
625
1971ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் கூட வங்கதேச விடுதலைக்கு உதவிய இந்தியாவின் நோக்கம், கொள்கை என்ன என்பது பற்றி நூல் விவரிக்கிறது. வங்கதேச விடுதலை பற்றிய இந்தியாவின் செயல்பாடு, ஆவணங்கள், அதன் பின்னணி ரகசியங்கள் என நூல் நிறைய விஷயங்களைச் சொல்லுகிறது.
லுக்கிங் ஃபார் தி எனிமி முல்லா ஓமர் அண்ட் தி அன்னவுன் தாலிபன்
பெட்டே டாம்
ஹார்ப்பர் கோலின்ஸ்
599
முல்லா ஓமர் தொடங்கி தாலிபன் அமைப்பின் விரிவான தன்மை வரையில் பல்வேறு தகவல்களை பத்திரிகையாளர் பெட்டே டாம் எழுதியிருக்கிறார். தீவிரவாத அமைப்பு பற்றி ஏராளமான தகவல்களை நூல் கொண்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக