தானியங்களின் காந்தி - வந்தனா சிவா!

 

 

 

மண்ணுக்கு வந்தனம் | Places to visit, Places, Visiting
இயற்கை செயல்பாட்டாளர் டாக்டர் வந்தனா சிவா

 

 உலகிற்கே ஆபத்து மான்சான்டோ வடிவில் வருகிறது என்று சொன்ன துணிச்சலான இயற்கை செயல்பாட்டாளர் வந்தனா சிவா. மான்சான்டோவின் தற்போதைய பெயர் பேயர். பெயர் மாறினாலும் இவர்களின் விவசாய பேராசையும், வணிகமய புத்தியும் மாறவில்லை. இதற்கு எதிராக வந்தனா சிவா போராடி வருகிறார். இன்றைய விவசாயத்தில் பெரு நிறுவனங்கள் உள்ளே நுழைந்து அதனை வன்முறையாக்கி உள்ளனர் என பேசி வருகிறார். 

Vandana Shiva: The Pandemic Is a Consequence of the War ...
வந்தனா சிவா

உலக மய கொள்கைகளுக்கு எதிராகவும் உணவு தற்சார்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார் வந்தனா சிவா. மரபணு பொறியியல் பற்றிய படிப்பை படித்த வந்தனா சிவா, 1960ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கிய பசுமை புரட்சி அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை இன்றுவரை தீவிரமாக விமர்சித்தும் அதற்கான தீர்வுகளை முன்வைத்தும் வருகிறார். மரபணுமாற்ற பயிர்களை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறார். 

1991ஆம் ஆண்டு நவதான்யா எனும் நிறுவனத்தை தொடங்கினார். இதன் பொருள் ஒன்பது தானியங்கள் என்பதாகும். பெரு நிறுவனங்கள் குறிப்பிட்ட பணப்பயிர்களை மட்டுமே விவசாயிகளை விதைக்க கட்டாயப்படுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலை வேளாண் சூழலை கெடுக்கும் என்பதை வந்தனா சிவா உணர்ந்தார். இதை எதிர்த்து வெறுமனே பேசிக்கொண்டே இருக்காமல் செயல்பாட்டைக் கையில் எடுத்தார். இதன்படி மக்களை குழுவாக திரட்டி அவர்களின் மூலமாக 150 விதை வங்கிகளை நாடெங்கும் உருவாக்கியுள்ளார். இதற்கு முப்பது ஆண்டுகளை செலவிட்டிருக்கிறார். 

 

Vandana Shiva Wiki, Biography, Age, Videos, Images - News Bugz

மாற்று நோபல் பரிசு எனப்படும் ரைட் லிவ்லிஹூட் எனும் பரிசை 1993 ஆம் ஆண்டு பெற்றார். இதனை ஸ்வீடன் - ஜெர்மன் வள்ளல் ஜேக்கப் வான் உயெக்குல்  என்பவர் வழங்குகிறார். இவர் ஐடியாஸ் எனும் பௌண்டேஷனின் உறுப்பினராக இருக்கிறார். இந்த அமைப்பு ஸ்பெயின் நாட்டின் சோசலிச கட்சியின் சிந்தனை சார்ந்த அமைப்பு ஆகும். 


டெல் மீ வொய் இதழ்



கருத்துகள்