இடுகைகள்

சதுப்புநில நண்பன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சதுப்புநிலத்தைக் காக்கும் இந்திய அரசின் திட்டம்!

படம்
  சூழலைக் காக்கும் சதுப்புநில நண்பன்  திட்டம்! இந்தியா முழுவதும் உள்ள சதுப்பு நிலங்கள், சூழலின் பல்லுயிர்த்தன்மைக்கு உதவுகின்றன. இவற்றை பாதுகாப்பதும், ஆக்கிரமிப்பிலிருந்து தடுப்பதும் சவால் நிறைந்ததாக உள்ளது. இதற்கான தீர்வை வெட்லேண்ட் மித்ரா (Wetland Mitra) எனும் திட்டத்தை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.  தற்போது, சென்னையில் 'சதுப்புநில நண்பன்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதன்படி, சூழலியலில் ஆர்வம் உள்ளவர்கள், தன்னார்வலராக இதில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட இடைவேளையில் ஏரி, சதுப்பு நிலங்களைக் கண்காணிக்க வேண்டும். இதுதான் அவர்களது பணி. இதன்மூலம் ஏரி, சதுப்புநிலங்களின் பாதுகாப்பு உறுதிப்படுகிறது. அங்கு வரும் பறவைகள், பட்டாம்பூச்சிகள் பற்றிய துல்லியமான தகவல்களும் சதுப்புநில ஆணையத்திற்கு கிடைத்துவிடுகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியர் உள்ளார். தேவையான அரசு அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க தன்னார்வலர்களின் தகவல்கள் உதவுகின்றன.  “தற்போது சென்னையில் 106 சதுப்பு நில நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களைப் பெற்று சதுப்புநிலங்களைப் ப