இடுகைகள்

நாகர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது நண்பனைக் கொன்றதற்கு பழிவாங்க நாகர்களை தேடி பயணிக்கும் சிவன்! - நாகர்களின் ரகசியம் - சிவா முத்தொகுதி 2

படம்
  நாகர்களின் ரகசியம் அமிஷ் திரிபாதி பவித்ரா ஸ்ரீனிவாசன் வெஸ்ட்லேண்ட் அமிஷ் திரிபாதி குணாக்களின் பிரதிநிதியான சிவா, நீலகண்டராக மெலூகா நாட்டினரால் வணங்கப்படுகிறார். இந்த நேரத்தில் அவருக்கு அவர் செய்யும் செயல்பாடுகளை விளக்க கோவிலில் வாசுதேவர்கள் உதவுகின்றனர். இவர்கள் சிவாவின் மனதில் எழும் கேள்விகளுக்கு கூட பதில் சொல்லும் வல்லமை பெற்றவர்கள். இந்த நேரத்தில் ப்ரஹஸ்பதி என்ற ஞானி ஒருவரை சிவா சந்திக்கிறார். இவர்தான் மந்த்ரமலை என்ற இடத்தில் சோமரஸத்தை ஆய்வு செய்து தயாரிக்கிறார். அதை மேம்படுத்த முயன்றுவருகிறார்.  சதியை மணம் செய்துகொள்ள சிவன் விரும்புகிறார். இதற்கான வழிமுறையை வாசுதேவர் தான் சொல்லித் தருகிறார். அதன்படி சிவா சதியின் மனத்தை வெல்கிறார். திருமணம் நடைபெறுகிறது. விகர்மாவான சதியை மணந்துகொள்ள மெலூகாவில் உள்ள விகர்மா சட்டத்தை மாற்றுகிறார். சட்டத்தை எப்போதும் மீறாத சதி, காதல் வந்தபிறகு அவளால் சிவனை தவிர்க்க முடியாமல் போகிறது.  இந்த நூலில் முக்கியமான விஷயம் நாகர்கள் யார் என்பதுதான். நாகர்களை மெலூகர்கள், ஸ்த்பவ நாட்டைச் சேர்ந்த மக்கள், காசி மக்கள் என பலரும் நாகர்களை வெறுக்கிறார்கள். இத்தனைக்கும