மருந்து = நஞ்சு ஹோமியோபதி மருத்துவம் பற்றிய அனுபவங்கள்
மருந்து = நஞ்சு ஹோமியோபதி மருத்துவம் பற்றிய அனுபவங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஹோமியோபதி மருத்துவம் புழக்கத்தில் உள்ளது. ஒப்புநோக்கில், தெற்கை விட வடக்கில் ஹோமியோ மருத்துவர்கள் அதிகம். இதற்கு காரணம், ஆங்கில மருத்துவர்கள் அங்கு குறைவு. அவர்களை ஏனோ அரசு சரியான சம்பளத்தில் நியமனம் செய்யவில்லை. அரசின் அடிப்படை நோக்கமே அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதுதானே? மக்களுக்கு உதவ வேண்டும் என்பது அவசியமா என்ன? நாட்டின் ஆட்சித்தலைவரே போலி அறிவியலை மனமுவந்து ஊக்குவிக்கும்போது, அலோபதி பின்தங்குவதில் ஆச்சரியமென்ன? சமுதாய மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளில் ஒன்றிய அரசு கொடுக்கும் நிதி குறைந்துவிட்டது. எனவே, தமிழ்நாடு அரசு மட்டுமே நிதி கொடுத்து குறைந்த மருத்துவர்களை வைத்து அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சிகிச்சை செய்கிறார்கள். அடிப்படை தேவைகளுக்கான நிதியை கோவில்களைகட்ட, சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களை இடிக்க, மதக்கலவரங்கள் செய்ய வடக்கு தேசம் பயன்படுத்துகிறது. அதேபோக்கு, தெற்கிலும் தொடங்க அச்சாரம் ஆந்திரத்தில் போடப்பட்டுள்ளது. அடிப்படையாக நாம் தெரிந்துகொள்ள வேண்டி...