இடுகைகள்

பத்திரிக்கையாளர் சமஸின் நேர்காணல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
                                            ஆங் லீ  நேர்காணல் க டலில் ஒரு படகு ; அதில் ஒரு பையன் ; கூடவே ஒரு புலி. இதுதான் ' லைஃப் ஆஃப் பை ’ படத்தின் கதை. ஆனால் , இதை வெற்றிகரமான ஒரு புத்தகமாக்குவதையோ , சினிமாவாக்குவதையோ யோசித்துப்பாருங்கள். பெரிய சவால்!   பாண்டிச்சேரியைச் சேர்ந்தவன் பை. மிருகக்காட்சி சாலை நடத்தும் அவனுடைய தந்தை , அரசியல் சூழல் காரணமாக , விலங்குகளை விற்றுவிட்டு வெளிநாட்டில் குடியேற நினைக்கிறார். பையின் குடும்பம் விலங்குகளுடன் ஒரு சரக்குக் கப்பலில் பயணப்படுகிறது. வழியில் பெரும் புயல். இறுதியில் , உயிர் தப்பும் படகில் ஐந்து பேர். ஒரு கழுதைப்புலி , ஒராங்குட்டான் , வரிக்குதிரை , புலி , பை. முதலில் வரிக்குதிரையையும் ஒராங்குட்டானையும் கழுதைப்புலி கொல்கிறது. அடுத்து கழுதைப்புலியைப் புலி கொல்கிறது. இப்போது மிச்சம் இருப்பது இரண்டே பேர். புலியும் பையும். ஒரு பக்கம் ஆள் அரவமற்ற நடுக்கடல். இன்னொரு பக்கம் இரையாக்கிக்கொள்ளத் துடிக்கும் புலி. 227 நாட்கள். பை எப்படி எதிர்கொள்கிறான் ?                              இதை எழுத்தாளர் யான் மார்டெல் நாவலாக்கிப் பதிப்பிக்க அணுகி