சிறுவயது குடும்ப வன்முறையால் உளவியல் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும் உளவுத்துறை அதிகாரி!
சிறுவயது குடும்ப வன்முறையால் உளவியல் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும் உளவுத்துறை அதிகாரி! மராஸ்லி துருக்கி தொடர் இருபத்தாறு எபிசோடுகள் யூட்யூப் பழைய புத்தக கடையை முன்னாள் ராணுவ வீரர் நடத்திக்கொண்டு இருக்கிறார். அவர் பெரிதாக யாரிடமும் பேசுவதில்லை. டீ கொண்டு வருபவரிடம் கூட அவர் அதிகமாக பேசுவதால், காசைக் கொடுத்துவிட்டு தன்னுடைய உலகில் மூழ்கிவிடுகிறார். அவர் கையில் நாளிதழில் வெளியான துப்பாக்கிச்சூடு செய்தி இருக்கிறது. அதை படித்துக்கொண்டிருக்கும்போது, இளம்பெண் ஒருவர் வந்து நூல் ஒன்றைக் கேட்கிறார். அதற்கு, ராணுவ வீரர் அதுமாதிரியான நூல் என்னுடைய கடையில் கிடையாது என திட்டவட்டமாக கூறிவிடுகிறார். அந்தப்பெண் எரிச்சல் அடைந்தாலும் சமாளித்து பேசி புகைப்படம் எடுக்க செல்லவேண்டிய இடத்தை அறிந்துகொள்கிறார். அவர் அங்கு செல்லும்போது, அங்கு யாரோ ஒருவரை கட்டி வைத்து சித்திரவதை செய்கிறார்கள். அதை பார்த்து புகைப்பட கலைஞரான இளம்பெண் பதறி ஓடுகிறார். அதேநேரம், அவரைக்கொல்ல கொலைகாரர்கள் துரத்துகிறார்கள். நாயகன், தனது செல்ல நாயை தேடி அங்கு வரும்போது நாயகி மாஹூரைக் காப்பாற்றுகிறான். கொலைகார கூட்டம், முன்னாள் ராணு...