இடுகைகள்

சிரிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நினைவுகளின் சேமிப்பு காலத்தை தீர்மானிக்கும் உணர்ச்சிகள்!

படம்
  1950ஆம் ஆண்டு, மனிதர்களின் மூளை, அதில் பதிவாகும் நினைவு பற்றிய ஆராய்ச்சிகள் வேகம் பிடித்தன. மூளையில் குறைந்தகால நினைவுகள், அதிக காலம் உள்ள நினைவுகள் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. 1970ஆம் ஆண்டு, கற்றல் கோட்பாடு, நினைவுகள் பற்றிய ஆய்வுகள் தொடங்கியது. சில நினைவுகளை நாம் எளிதாக நினைவுகூர்ந்து மீட்டெடுப்போம். அப்படி திரும்ப மீட்கும் நினைவுகள் பற்றித்தான் உளவியலாளர்கள் ஆர்வமாக தெரிந்துகொள்ள நினைத்தனர். உளவியலாளர் கார்டன் ஹெச் போவர், மூளையில் சேமித்து வைக்கும் நினைவுகளை உணர்ச்சிகள் பாதிப்பதைக் கண்டுபிடித்தார். அதாவது நினைவுகளை குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கும்போது அந்த நேரத்தில் உள்ள உணர்ச்சிகளும் அதோடு இணைந்துவிடுகின்றன. திரும்ப அதே நினைவில் நாம் இருக்கும்போது அந்த நினைவுகளை எளிதாக மீட்டெடுக்க முடிகிறது.  துயரமான நிலையில் உள்ளவர்கள், தங்கள் வாழ்க்கையில் நடந்த துயரமான வலி, வேதனை பெருக்கும் நினைவுகளை துல்லியமாக அன்று நடந்தது போல கூற முடியும். ஆனால் அதே மனிதர்கள் மகிழ்ச்சியான நிலையில் இருக்கும்போது துயர நினைவுகளை முன்னர்போல தெளிவாக கூற முடியாது. இதை மூட் கான்க்ரன்ட் புரோசஸிங் என்று

வினோதரச மஞ்சரி - சிம்பன்சிகள் பற்றிய சுவாரசியங்கள்

படம்
  பறவைகள் தம் அலகை, நாம் கைகளைப் பயன்படுத்துவது போலவே பயன்படுத்துகின்றன. கூடுகளைக்கட்ட, இறக்கைகளை சுத்தம் செய்ய, உணவு தேட என பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. மக்காவ் கிளி இனத்தின் அலகு, கொட்டைகளை உடைத்து தின்னும் அளவுக்கு உறுதியானது. மரங்கொத்திகள், தனது அலகினால் மரத்தை கொத்தி துளையிட்டு பூச்சிகளை உண்ணுவதை அறிந்திருப்பீர்கள்.  ஃபிரில் லிசார்ட் (Frill lizard) என்ற பல்லி இனம் உள்ளது. இது, தான் உண்ண  நினைத்துள்ள இரையை அச்சுறுத்த, தன் சவ்வைப் பயன்படுத்துகிறது. தலைக்கு பின்புறம் குடை போல விரியும் மெல்லிய சவ்வு இதற்கு உண்டு.  பிறந்தவுடனே சிம்பன்சி குட்டிகளால் நடக்க முடியாது. ஏறத்தாழ குழந்தைகள் போலத்தான். எனவே, தாய் சிம்பன்சியின் மார்பில் ஒட்டிக்கொண்டு இருக்கும். சிம்பன்சிகள் பத்து உறுப்பினர்கள் கொண்ட குழுவாக வாழ்கின்றன.  சில மாதங்களில் சிம்பன்சி குட்டிகள் நிற்க முயல்கின்றன. இதற்காக மரத்தைப் பிடித்தபடி நிற்கும். அவை கீழே விழாதபடி அதன் பின்பகுதியை தாய்க்குரங்கு பிடித்துக்கொள்ளும்.  சிம்பன்சிகள் பழம், விதைகள், பூக்கள், தேன் ஆகியவற்றை உண்கின்றன. குச்சிகளையும் கற்களையும் விளையாட்டுப் பொருட்களாக சிம்

ஜாலிப்பக்கம் - சிரித்து இறந்துபோன ஸ்பெயின் மன்னர்! - சிரிப்பே சிறப்பு!

படம்
  சிரித்தால் சிறப்பு! சிரிப்பு என்பது வாழ்க்கையின் அழுத்தங்களை குறைக்க உதவுகிறது.  ஆனால் அதுவே ஓவர் டோஸாக போனால் என்னாகும் என்பதற்கு கீழேயுள்ள மனிதர்கள்தான் எடுத்துக்காட்டு.  சண்டையும் காமெடிதான்! 1975 ஆம் ஆண்டு அலெக்ஸ் மிட்செல், பிரிட்டிஷ் காமெடி நிகழ்ச்சியான தி குடிஸ்(The goodies) பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்நாக்ஸை பரவசமாக தின்றுகொண்டே பார்த்தவருக்கு, அதில் வரும் சண்டைப் பயிற்சிக் காட்சிகளைப் பார்த்ததும் கொல்லென்று சிரிப்பு வந்தது.   வாயைப் பொத்தி, உதடுகளை மூடி ... ம்ஹூம் நான்ஸ்டாப் சிரிப்பில்  காப்பாத்துங்க என்றுகூட சொல்லமுடியால் மாரடைப்பில் இறந்துபோனார். மரபுவழியாக க்யூடி(Qt Syndrome) பாதிப்பு கொண்டவருக்கு சிரிப்பு அட்ரினல் சுரப்பைத் தூண்டி இறப்பை ஏற்படுத்தியுள்ளது பின்னர் தெரிய வந்தது. அவரது மனைவி, என் கணவர் இறக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தார். அதுவே எனக்கு போதும் என்று பேட்டி தட்டினார்.  நிற்காத சிரிப்பு 1792 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த திருமதி ஃபிட்ஸெர்பெர்ட்,  ட்ரூரி லேன் எனுமிடத்திற்குச் சென்றார். அங்கு நடைபெற்ற இசைநாடகத்தை ஆசையாகப் பார்த்தார். நாடகத்தின் ஒரு காட்சியில் ல

சிரிப்பு சமூகத்திற்கு உதவுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சிலரைப் பார்த்து நாம் பற்கள் தெரியாமல்  புன்னகைக்கிறோம். சிலரோடு வெடித்து சிரிக்கிறோம். இது எதனால் நேருகிறது? வி.ஐ.பி உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்க பணம் நீட்டுகிறீர்கள். சரவணபவன் விலையில் அவ்வளவு திருப்தி தராத உணவு அது என உங்கள் மனசு சொல்லுகிறது. தினசரி அங்கு வந்து சாப்பிட்டாலும அது உங்கள் மனதில் குறையாக இருக்கிறது. கல்லாப்பெட்டியில் உட்கார்ந்திருப்பவரிடம் காசு கொடுத்துவிட்டு மீதிச் சில்லறையை வாங்கிவிட்டு லைட்டாக புன்னகைத்து விட்டு தலையாட்டிவிட்டு நகர்கிறீர்கள். இது வற்புறுத்தலாக புன்னகை. கிரிக்கெட் வீரர் தோனியைப் பார்த்திருப்பீர்கள். சிரிக்காத சூழலில் அவர் முறைப்பது போல தெரியும். இதனால் அவர் புன்னகையுடன் இருப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார். பொதுவாக உளவியல் ரீதியாக பாருங்களேன். உங்களுக்குப் பிடித்த ஒருவருடன் பேசும்போது இயல்பாக உதடுகளைப் பிரித்து பற்கள் தெரிய சிரிப்பீர்கள். ஆனால் அதுவே பொதுவான ஒருவருடன் பேசும்போது அது சாத்தியமில்லை. மரியாதையான எளிய புன்னகை மட்டுமே செய்வீர்கள். காரணம் சமூகரீதியாக புன்னகை என்பது பிறருடன் பழகுவதற்கு அடிப்படையா

பொடியனை அடக்கிய லக்கி லூக்! - ஜாலி அட்வென்ச்சர்

படம்
லக்கி ஸ்பெஷல்  லக்கி லூக் கலக்கும் சூப்பர் சர்க்கஸ், பொடியன் பில்லி! சன்ஷைன் லைப்ரரி ரூ.100 சீரியஸாக நாம் நிறைய காமிக்ஸ்களைப்  படித்தாச்சு ப்ரோ என விரக்தியாக நின்றோம். என்ன செய்யலாம் என யோசித்தோம்.  ஸோ, காமெடிதான் இனி என சுந்தர்.சி யாக காமிக்ஸ் குவியலுக்குள் பாய முயன்றோம். அதற்கு ஓனரான  ஓவியக்கலைஞர் பி உடனே தடுத்து, எடுத்து நீட்டிய புத்தகம்தான் லக்கி லூக். சூப்பர் சர்க்கஸ் கதையில், பழம் பஞ்சாங்கமான வயதான மிருகங்களை வைத்து சர்க்கஸ் என்ற பெயரில் ஏதோ ஒன்று செய்கிறார் கேப்டன் மோரிஸ். அவருக்கு உதவுகிறார் லக்கி லூக். காரணம்? அதையெல்லாம் நீங்கள் கேட்டால் காமிக்ஸ் ருசிக்காது. ஜாலிக்காக அட்வென்சருக்காக செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்களேன். லக்கியின் நோக்கம், அருகிலுள்ள நகரில் நடைபெறும்  குதிரை சாகசப் போட்டி. அங்கு செல்லுவதாக சொல்ல கேப்டன் மோரிஸ் நாங்களும் வருகிறோம் என்று வருகிறார். அங்கு பார்த்தால், அங்கு உள்ள தொழிலதிபரான ரீகன் என்பவருக்கும் லக்கி, கேப்டன் மோரிஸ ஆகியோருக்கும் மோதல் ஏற்படுகிறது. ரீகன், அந்த ஊரின் தொழிலதிபர். விஸ்கி, காய்கறிக்கடை, இடுகாடு, மின்சார