இடுகைகள்

பைக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊருக்கு நல்லது செய்யும் மோட்டார் சைக்கிள் கிளப்புகள்!

படம்
  யமஹா, கவாசாகி நின்ஜா, ஹீரோ இம்பல்ஸ், பல்சர் என பைக்குகளை ஓட்டும் இளைஞர்கள் எப்போதும் சமூகத்தில் ஆபத்தான ஆட்களாகவே பொறுப்பற்றவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் நடந்துகொள்ளும் ‘எரிமலை எப்படி பொறுக்கும்’ என்ற அவசரமான மனநிலையும் முக்கியமான காரணம்.   ராபர்ட் எம் பிர்சிக் என்பவர், ஸென் அண்ட் தி ஆர்ட் ஆஃப் மோட்டார்சைக்கிள் மெயின்டனன்ஸ்   என்ற நூலை எழுதியிருக்கிறார். ‘’மோட்டார்சைக்கிளில் பயணம் செய்வது என்பது தெரபி போலத்தான். பைக் பயணம் மூலம் ஒருவர் உலகத்தின் மீதும் சமூகத்தின் மீதும் கவனம் கொள்கிறார்’’ என்று பேசுகிறார். இங்கு நீங்கள் படிக்கப்போவது மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டு பீச்சில் பந்தயத்திற்கு போய் வாக்கிங் வரும் தொப்பை அங்கிள்கள் மீது மோதுபவர்கள் அல்ல. சமூகத்திற்கு கொஞ்சமே கொஞ்சம் நன்மை செய்யும் ஆட்களைப் பற்றித்தான். ஊர்வதி பத்தோலுக்கு இப்போது வயது 35 ஆகிறது. அவர் முதன்முதலில் தனது அக்காவின் தோழி ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்தார். அதனால், பின்னாளில் ராயல் என்பீல்ட் பைக் ஒன்றை வாங்கி ஓட்டத் தொடங்கினார். முதன்முதலில் பைக் ஓட்டத் தொடங்கியபோது அவருக்கு வயது

திருடப்படும் பைக்குகள் எங்கு செல்கின்றன? - அலசல் ரிப்போர்ட்

படம்
  சென்னை பெருநகரில் மாதம்தோறும் அறுபது பைக்குகள் திருடப்படுகின்றன. இதனை பதிவு செய்வதில் காவல்துறை பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இப்படி திருடப்படும் பைக்குள் என்னாவாகின்றன என்று அந்த உலகைப் பார்க்க உள்ளே நுழைந்தால் பொல்லாதவன் பட அனுபவம் இன்னும் பெரிய கான்வாஸில் கிடைக்கிறது.  குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்படும் பைக்குளை திருடர்கள் நோட்டமிட்டு பார்த்து வைத்துக்கொள்கின்றனர். பின்னர், அதன் லாக்கை லாவகமாக உடைத்து திறந்து விடுகின்றனர். இதற்கு மாஸ்டர் கீ உதவுகிறது. இந்த நேரத்தில் காவல்துறை ரோந்து வருமே, அதற்கு சமாளிக்க அருகிலுள்ள தியேட்டரில் சினிமா டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். பிரச்னையாக இருக்கும் கேமராக்களிடமிருந்தும் தப்பித்தான் பைக்கை திருடி கொண்டு செல்கிறார்கள்.  இந்த வியாபாரம் இரண்டு வகையில் நடைபெறுகிறது. ஒன்று, பத்தாயிரம் ரூபாய் தருகிறேன். எனக்கு பைக் வேண்டும் என்று சொல்லும் கல்லூரி மாணவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இந்த சட்டவிரோத செயலுக்கு முக்கியமான ஆட்கள்.  இந்த பிராண்ட் பைக் வேண்டும் என ஏஜெண்டுகளிடம் சொல்லி சிலர் வாங்குகிறார்கள். இந்த வியாபாரம் நம்பகமானது. இ

சாலையில் சில கதாபாத்திரங்கள்- இதுதாங்க சென்னை

படம்
சாலையில் சில கதாபாத்திரங்கள்... தினசரி சாலையில் நீங்கள் பயணிக்கும்போது, பல்வேறு மனிதர்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் சில குறிப்பிட்ட மனிதர்களை மறக்கவே முடியாது. காரணம், அவர்கள் சாலையில் நடந்து கொள்ளும் விதம்தான். வெரைட்டி கதாபாத்திரங்கள் இதோ! ஹெலிகாப்டர் ஆட்டோ! தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு தனி அடையாளம் உண்டு. அது என்ன? ஹெலிகாப்டர் போல எந்த இடத்திலும் லேண்ட் ஆகும் வசதிதான் அது. பின்னே வருபவர்கள் இதனைக் கவனிக்காவிட்டால் புத்தூர் கட்டு நிச்சயம். இடதுபக்கம் இன்டிகேட்டர் போட்டு வலது பக்கம் கைகாட்டி நேரே செல்லும் பாணியை உருவாக்கியது நம்ம ஆட்டோஜிக்கள்தான். இன்று இவர்களையும் லெஃப்டில் ஓவர்டேக் செய்து பறக்கிறது உணவு டெலிவரிப் படை. ஸ்கூட்டி ராணி! ஸ்கூட்டர் கம்பெனியே, காம்போ பிரேக் வைத்து தந்தாலும், நம்பிக்கையின்றி கால்களை  ஊன்றலாமா என்ற கேள்வியுடன் பயணிப்பவர்கள்தான் இவர்கள். இடதா, வலதா என அவர்களுக்குமே புரியாமல் சாலையில் உத்தேசமாக ஒரு திசையில் நிற்பார்கள். ஸ்கூட்டி பெண்கள், பச்சை விழுந்ததும் எஃப் 1 வேகத்தில் பறப்பதைப் பார்த்து இளம் பைக்கர்களுக்கே புரையேறுகிறது. சாலைச்