இடுகைகள்

ஷங்கர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனிநபர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக செல்வாக்கும், அழுத்தங்களும்!

படம்
  மக்கள் கருத்தே நமது கருத்து இயக்குநர் ஷங்கர் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர். இதனால் அவரது படங்களில் பிராமணர்கள் விதியை மீறாத அப்பாவிகளாக நல்லவர்களாக வருவார்கள். ஆனால் கருப்பாக இருப்பவர்கள் சேரியில் இருப்பவர்கள் தவறான செயல்களை செய்பவர்கள் என காட்சிரீதியாக வலுவாக மக்களது மனதில் பதிய வைக்க முயல்வார். கூடவே ஊழல் என்றால் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள் லஞ்சம் வாங்குபவர்களாக, நேர்மை இல்லாதவர்களாக காட்டப்படுவார்கள். மிக மேலோட்டமான அரசியல் பார்வை கொண்ட படங்கள் அவை. மக்கள் கருத்துகளின்படி அரசு இயங்குவதாக காட்டுவார்கள். இதன் பின்னணி பற்றிய உளவியல் ஆய்வைப் பார்க்கலாம்.  பொதுவாக ஒருவரின் செயல்பாடு என்பது காலத்தை கடந்ததாக இருந்தால், அதை அடையாளம் கண்டு அங்கீகரிப்பவர்கள் மிக குறைவானவர்கள்தான். தொலைநோக்காக யோசித்து புதுமை செய்பவர்களை சமூகம் எப்போதும் கேலியும் கிண்டலும் அவமரியாதையும் செய்து வந்திருக்கிறது. புதிய செயலை செய்கிறோம் என்றால், அதை செய்யும்போது அதில் ஈடுபட்டுள்ள மனிதர்களின் தனிப்பட்ட கருத்து, அதைப்பற்றிய மக்களின் பொதுக்கருத்து  என நிறைய விஷயங்கள் உள்ளே வரும். முன்னர் சினிமாவைப் பார்த்தோ