இடுகைகள்

மூடநம்பிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவிகள் மதிப்பெண் பெறுவது தொடர்பான மூடநம்பிக்கைகளை தகர்த்த ஆய்வாளர்!

படம்
  மாணவிகள் அதிக மதிப்பெண் பெறுவது முயற்சியாலும் உழைப்பாலும்தான்! மாணவிகள் பத்தாவது, பனிரெண்டாவது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது நாளிதழ்களில் ஆண்டுதோறும் பார்க்கும் செய்தி. இதை சமூகம் எப்படி பார்க்கிறது? காதலை ஆயுதமாக பயன்படுத்தி மாணவர்களை வீழ்த்தி மாணவிகள் வெற்றி பெறுகிறார்கள் என்று திரைப்பட பாடல்கள் வெளிவந்துள்ளன.  முயற்சியும், உழைப்பும் கைகோக்க வெற்றி என்பது எவருக்கும் கிடைப்பதுதான். இதில் ஆண், பெண் என வேறுபாடு ஏதும் கிடையாது. ஆனால், ஆண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் சமூகத்தில் பெண்களின் வெற்றி இழிவு, அவதூறுகளுக்கு உள்ளாகிறது. பள்ளியில் மட்டுமல்ல பெண்கள் சாதிக்கும் அனைத்து இடங்களிலும் அவர்களின் திறமையை பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உடல் என பலதையும் இழிவுபடுத்தி வெளியேற்ற முயல்வதும் சமூக வழக்கமாகிவிட்டது. உண்மையில் பெண்கள் மதிப்பெண்களைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் இல்லையா? அவர்களின் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் கிடைத்ததுதானா என்பதை அமெரிக்க உளவியலாளர் எலினார் மெக்கோபை ஆராய்ந்தார். இவரது ஆராய்ச்சியே ஆண், பெண் பாகுபாடு சார்ந்த மூடநம்பிக்கைகளை வேரோடு களைந்தெற

பதில் சொல்லுங்க ப்ளீஸ் 2 - மிஸ்டர் ரோனி - புதிய மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ 2 அட்டைப்படம்

நிழலின் சிறகு! - மொழிபெயர்ப்பு அறிவியல் நேர்காணல் - மின்னூல் வெளியீடு

படம்
  அறிவியல் நேர்காணல் நூல் என்ற வகையில் ஆராபிரஸ் - கோமாளிமேடை தனது இரண்டாவது நூலை வெளியிடுகிறது. இந்த நூலில் உள்ள மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் அனைத்துமே உலக அளவில் முக்கியமான நியூ சயின்டிஸ்ட், பிபிசி சயின்ஸ்ஃபோகஸ் ஆகிய இதழ்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.  இந்தியாவில் அறிவியல் பார்வை குறைந்து மூடநம்பிக்கைகள் தலைதூக்கும் நேரத்தில் ஆய்வுகள், அதுபற்றிய கருத்து பகிர்தல் நிறைய நடக்கவேண்டும். அந்த நோக்கில்தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள், சூழலியலாளர்கள் அனைவருமே சமூகம் செல்லும் பாதையில் நடப்பவர்களல்ல.  தாங்கள் விரும்பிய பாதையில் நடந்து அதனால் புகழ்பெற்றவர்கள். வானியல், உளவியல், மருத்துவம், செயற்கை நுண்ணறிவு, பெண்களின் நலன், காட்டுயிர் வளம், காலநிலை மாற்றம் என நிறைய விஷயங்களை மனதில் பட்டபடியே அறிவியலாளர்கள் பேசியுள்ளனர். அதனை நான் படித்து உள்வாங்கி தமிழில் எழுத முயன்றுள்ளேன். நூலை இணையத்தில் வாசிக்க... https://www.amazon.in/dp/B0B4PQJ6KQ

சூரிய ஒளி ஹார்மோன்களை பெருக்குமா? நிஜமா? நிழலா?

படம்
  ஒலிம்பிக்கில் ஒவியம் மற்றும் இசைப் பிரிவில் பரிசை வெல்ல முடியும்! உண்மையல்ல.  இன்றைக்கு ஒலிம்பிக்கில் கலைப்பிரிவுகள் கிடையாது. 1912 முதல் 1948ஆம் வரையிலான காலகட்டத்தில் ஒலிம்பிக் கமிட்டி, கலைப்பிரிவுகளில் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கிக்கொண்டிருந்தது. ஓவியம், இசை  என்பது அதனை உருவாக்குபவரின் எண்ணம், செயல் பொருத்து மாறுபடும். இதனை போட்டி வைத்து தீர்மானிப்பது மிக கடினம். எனவே, ஒலிம்பிக்கில் தொடக்கத்தில் இடம்பெற்ற ஓவியம் மற்றும் இசைப்பிரிவுகளை நிர்வாகத்தினர் விலக்கிவிட்டனர். மத்திய காலத்தில் தயாரிக்கப்பட்ட ஷூக்கள் இரண்டு அடி நீளம் கொண்டிருந்தன!  உண்மை. 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டில் காலணிகள் இரண்டு அடி நீளத்தில் உருவாக்கப்பட்டன. அன்றைய காலத்தில் இருந்த நாகரிகப்படி காலணிகள் அப்படி வடிவமைக்கப்பட்டன. நீட்டப்பட்ட முனையில் பாசி, புற்கள், முடி, கம்பளி ஆகியவை நிரப்பப்பட்டிருந்தன. இவற்றை இன்றும் இங்கிலாந்தின் லண்டனினுள்ள விக்டோரியா ஆல்பெர்ட் அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.  டான்சில்ஸ் கட்டி மீண்டும் வளரும்!  சிலசமயங்களில் என்று கூறலாம். தொண்டையில் உள்ள அதிகப்படியான சதை வளர்ச்சியை, அறுவைசிகிச்

தூங்கும் கோணத்தை வைத்து ஒருவரின் ஆளுமையைக் கணிக்கலாம்!

படம்
  நிழலா, நிஜமா? முதலைகள் நீரில் குதிரைபோல பாய்ந்து செல்லும்! ஒப்பீட்டுக்காக இப்படி உயர்த்தி சொல்லுகிறார்கள். உண்மையில், குதிரைகள் நிலத்தில் பாய்ந்தோடுவதைப்போல முதலை நீரில் வேகமாக செல்லுமா என கேட்காதீர்கள். அது சாத்தியமில்லை. முதலை மணிக்கு நீரில் 11 கி.மீ. வேகத்தில் பாய்ந்து இரையைப் பிடிக்கும்  என 2019இல் வெளியான நேச்சர் இதழ் கட்டுரை கூறுகிறது. முதலை நான்கு கால்களுடன்  நீரைக் கிழித்து வேகமாக செல்வதைப் பார்ப்பது நன்றாகவே இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் குதிரையை நினைக்க கூடாது அவ்வளவுதான்!  பிறந்த குழந்தையின் உடலில் முக்கால் பங்கு நீர்தான்! உண்மைதான். பிறந்த குழந்தையின் உடலில் 78 சதவீத நீர் இருக்கும் என அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தகவல் அளித்துள்ளது. வயது வந்தவர்களுக்கு உடலில் உள்ள நீரின் அளவு  55 முதல் 60 சதவீதம் இருக்கும்.  கண்ணின் கண்மணியை ஒருவர் கட்டுப்படுத்த முடியும்!  மிக  அரிதாக இப்படி நடக்கலாம். பொதுவாக உடலில் நடக்கும் நிறைய செயல்பாடுகள், நாம் கட்டுப்படுத்தாமலேயே நடக்கும். இருட்டில் இருந்துவிட்டு திடீரென ஒளியைப் பார்த்தால் அதனை எதிர்கொள்ள முடியாமல் கண்களை சுருக்குவோம். அதாவத

மாதவிடாய் பற்றிய தயக்கத்தை களைய உதவிய அதிதி குப்தா! - மென்ஸ்ட்ரூபீடியா

படம்
  அதிதி குப்தா, மென்ஸ்ட்ரூபீடியா அதிதி குப்தா எழுத்தாளர், துணை நிறுவனர் - மென்ஸ்ட்ரூபீடியா பெண்களுக்கு ஏற்படும் அந்த மூன்று நாட்கள் அவதி தான் அதிதி குப்தாவை நிறுவனம் தொடங்க வைத்திருக்கிறது. மாத விலக்கு, மாத விடாய் பற்றிய பல்வேறு புனைகதைகளை தவறு என்று தனது மென்ஸ்ட்ரூபீடியா நிறுவனம் மூலம் நிரூபணம் செய்து வருகிறார். அனைத்து மக்களுக்கும் மாதவிடாய் பற்றிய உணமைகளை எளிமையான விதத்தில் விளக்கி வருகிறார்.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்வா எனும் இடத்தில் பிறந்தவர் அதிதி. இவர் பிறந்த இடத்தில் மாதவிடாய் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை. அதிதிக்கு முதன்முறையாக 12 வயதில் மாதவிடாய் வந்தபோது அவருக்கு ஏதும் புரியவில்லை. அடிவயிற்றில் பெருகிய ரத்தத்தைப் பார்த்தவர், உடனே அலறியடித்துக்கொண்டு ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அவர் அம்மா உடனே அதிதியை குளிக்கச்சொல்லியிருக்கிறார். இப்படி ரத்தப்போக்கு வருவதும் நிற்பதுமாக இரண்டரை நாட்கள் சென்றிருக்கிறது.  மாதவிடாய் வந்த தினம் தொட்டு அதிதி தனி அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். அது அசுத்தமான இடம். கூடவே ரத்தப்போக்கை துடைக்க கொடுத்த துணியும் சுத்தமாக இல்லை