இடுகைகள்

கண்ணாடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணாடிக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் மர இழை நுட்பம்!

படம்
  கண்ணாடிக்கு மாற்றாக பசுமைத் தீர்வு! அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கண்ணாடியைப் போன்ற  ஒளி ஊடுருவும்  தன்மையில்  இருக்கும் மர இழைகளை  உருவாக்கியுள்ளனர்.  தற்போது, நவீனமாக கட்டும் கட்டடங்களுக்கு மெருகூட்டுவதாக கண்ணாடியே பயன்படுகிறது. இதனை ஜன்னல்களுக்கு மட்டுமல்லாமல் கட்டடம் முழுக்கவே பயன்படுத்தி புதுமையாக கட்டுமானங்களை உருவாக்கி வருகின்றனர். அழகாக இருந்தாலும் ஆற்றல் அதிகமாக செலவழித்து உருவாக்கப்படுவதும், எளிதாக மறுசுழற்சி செய்யமுடியாத தன்மையும் இதன் முக்கியமான பாதக அம்சங்கள்.  அமெரிக்காவிலுள்ள மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தீர்வை மரத்திலிருந்து கண்டுபிடித்துள்ளனர். கண்ணாடியைப் போன்றே  ஒளி ஊடுருவும் மர இழைகளை  சோதனையில் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சோதனை மூலம் இயற்கைச் சூழலுக்கு பாதிப்பு வராதபடி மர இழைகளை பக்குவப்படுத்தி கண்ணாடி போலாக்கி வீடுகளில் பொருத்த முடியும். கண்ணாடியில் ஒளி ஊடுருவும். ஆனால் மரத்தில் ஒளி ஊடுருவமுடியாதே அதனை எப்படி கண்ணாடியாக பயன்படுத்துவது என பலரும் நினைப்பார்கள். இதற்கு முக்கியமான காரணம், மரத்திலுள்ள லிக்னின், செல்லுலோஸ்

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த திரவ வடிவிலான கண்ணாடி! - புதிய நீள்வட்ட வடிவிலான மூலக்கூறுகள் கொண்ட பொருள்

படம்
                ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த திரவ வடிவிலான கண்ணாடி ! ஜெர்மனி , நெதர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கான்ஃபோகல் மைக்ரோஸ்கோப்பி எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரவ வடிவிலான கண்ணாடியை கண்டறிந்திருக்கிறார்கள் . கண்ணாடி என்பது உறுதியாக இருந்தாலும் அதன் அமைப்பு பற்றி விஞ்ஞானிகள் அறியவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன . நீள்வட்ட கூழ்மமான இதிலுள்ள துகள்கள் அலைந்தபடி உள்ளன . குளிர்சாதனப்பெட்டியில் உள்ள ப்ரீசரில் உறைதல் எப்படி நடக்கிறது என கவனித்திருக்கிறீர்களா ? பிளாஸ்டிக் தட்டில் உறைதல் என்பது குறிப்பிட்ட வரிசைப்படி நடைபெறும் . நடுவிலிருந்து ஐஸ்ட்ரே உறையத்தொடங்கும் . ஆனால் கண்ணாடி கிரிஸ்டல் வடிவில் அமைந்தது அல்ல . இதன் காரணமாக கண்ணாடி திரவ வடிவிலிருந்து திட வடிவிற்கு மாறும்போது செயல்பாடுகள் வரிசைப்படியாக நடைபெறுவதில்லை . எனவே , கண்ணாடி பற்றி அறிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் . ஜெர்மனியைச் சேர்ந்த கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கான வேதிக்கலவையை உருவாக்கி சோதித்து திரவ வடிவிலான கண்ணாடியை அடையாளம்

உலகை மாற்றிய மனிதர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள்! - கண்ணாடி, பசை, மேப், சோப், சக்கரம்

படம்
        pixabay             சிறந்த கண்டுபிடிப்புகள் அடிப்படைக் கருவிகள் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு… ஆதிகாலத்தில் மனிதர்கள் கற்களை கூர்மையாக்கி கருவிகளாக பயன்படுத்தினர். இந்த கண்டுபிடிப்பு வேட்டையாடுதல், விலங்குகளை தோல்களை உரிப்பது ஆகிய வேலைகளை எளிமையாக்கின. கற்கருவிகளை கூர்மையாக்குவதற்கான முறைகளையும் மனிதர்கள் மெல்ல கண்டுபிடித்தது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய புரட்சி என்றே கூறவேண்டும்.   வரைபடங்கள் 6500 கி.பி இன்று சாப்பிடசெல்ல, மளிகைக்கடையில் பொருட்கள் வாங்க, பார்மசியைத் தேட என  அனைத்துக்கும் கூகுள் மேப் ஆப் உள்ளது. ஆனால் அன்று வரைபடங்களே கிடையாது. அந்த நிலையை யோசித்து பாருங்கள் எப்படி இருக்கும் என்று. கி.பி 6500 ஆண்டுகளாக மனிதர்கள் வரைபடங்களே இல்லாமல்தான் வாழ்ந்து வந்தார்கள். தொன்மையான பாபிலோனியாவில்தான் வரைபடங்கள் முதன்முதலில் உருவாயின. இதற்கு உதாரணமாக துருக்கியில் தற்போது அறியப்பட்டுள்ள கடல்ஹோயுக் எனும் சுவர் வரைபடங்களை சான்றாக பார்க்கலாம். இப்படம் நகரம் அதைச்சுற்றியுள்ள பகுதிகளை சிறப்பாக காட்சிபடுத்தியிருந்தது. பசை கி.பி 4000 இன்று பெவிஸ்டிக், க்ளூஸ்டிக், உள்ளூர் டிய

மனிதர்கள் உருவாக்கிய வலிமையான அமிலம்! - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி பேக் டூ பேக் பதில்கள் டால்பின் கடலுக்கு அடியில் எப்படி தூங்க முடியும். அது அடிக்கடி சுவாசிக்க கடலின் மேற்பரப்பிற்கு வரவேண்டியிருக்குமே? லாஜிக் கேட்கிறீர்கள். விஷயம் என்னவென்றால், அவை தூங்கும்போது இயல்பாக இருக்கும்போது சுவாசிப்பதைவிட 75 சதவீதம் குறைவாகவே சுவாசிக்கும். இதனால் தூங்கும் போது பாதித்தூக்கத்தில் அவை கடலின் மேற்பரப்புக்கு வரவேண்டிய அவசியமில்லை. அப்படி வந்தாலும் தன் எதிரிகளை கவனித்துக்கொண்டேதான் சுதாரிப்பாக மூச்சு வாங்கும். ஹீலியம் பலூன்கள் எவ்வளவு உயரத்திற்கு பறக்கும்? 2005 ஆம் ஆண்டு மும்பையில் ஹீலியம் பலூனில் ஒருவர் 21,027 மீட்டர் உயரத்தில் பறந்து சாதனை செய்தார். அவர் பெயர். விஜய்பட் சிங்கானியா. பூஞ்சை என்பது என்ன விதமான தாவரவகை? பூஞ்சை என்பது தாவர வகையில் சேராது. அவை காளான்களில் ஒட்டுண்ணியாக படர்ந்து வளர்கின்றன. காளான்களுக்கு இயல்பில் ஒளிச்சேர்க்கை செய்யும் திறன் கிடையாது. அதனை பூஞ்சைகள் நிறைவு செய்து அதனை வளரச்செய்கின்றன. 1969ஆம் ஆண்டு இவை வகைப்படுத்தப்பட்டன. ஈக்கள் எப்படி சுவர்களில் கிரிப்பாக ஏறுகின்றன? ஸ்பைடர் மேன் படத்தில் சில

கண்ணாடி போடடால் புத்திசாலித்தோரணை வநதுவிடுகிறதே ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி கண்ணாடி போட்டால் புத்திசாலியா? எல்லாம் மற்றவர்கள் உருவாக்குகிற மனப்பிராந்திதான். பள்ளியில் மாறுவேடப்போட்டி நடக்கிறது. அதில் விஞ்ஞானி வேடம் கொடுததால் தாடி, கண்ணாடிதானே தேவை. அதேதான். அங்கிருந்துதான் கண்ணாடிபுத்திசாலிததனம் வாழ்க்கை முழுக்க வருகிறது. பொதுவாக ஹாரி பாட்டர் போன்ற படங்களில் நாயகன் கண்ணாடி அணிந்து வருவதும் மற்றொரு காரணம். சின்ன வயதில் கண்ணாடி போடடால் என்ன காரணம்? சத்துக்குறைவு. படிப்பு காரணமாக இருக்கும். அதனால்தான் அவர்கள் புத்திசாலியாக சமூகத்தில் கருதப்படுகிறார்கள். கிறுக்குத்தனம் என்பது பேசினால்தானே தெரியும்? கண்ணாடி போட்டவர்களைப் பார்த்தால் எப்படி தெரியும்?எனவே, கொஞ்சம் பேசிப்பார்த்து அவர்களின் புத்தி பறறி முடிவு செய்யுங்கள். நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்