இடுகைகள்

ஏன்?எதற்கு?எப்படி ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவையா பூனை, நாய்கள்?

படம்
giphy மிஸ்டர் ரோனி சூழலைக் கெடுக்கும் வளர்ப்பு பிராணிகள்! ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான். ஏனெனில் மத்திம சைசில் உள்ள நாய், எஸ்யூவி கார் வெளியிடும் அளவுக்கு கார்பன் வாயுக்களை வெளியிடுகிறது.இது பூமிக்கு ஏற்புடையதல்ல. பூனைகள், நாய்கள் மனிதர்களுக்கு அடங்கி நடப்பது போல தெரிந்தாலும். அது உண்மையல்ல. அவைகளுக்குத் தான் நாம் சேவை செய்கிறோம். அவை, பல்வேறு காட்டு விலங்குகளை வேட்டையாடுவதையும் பெடிகிரி சாப்பிட்டுக்கொண்டே செய்கின்றன. இப்பாதிப்பு இங்கிலாந்தில் அதிகம். இதன் பொருள் நீங்கள் வளர்ப்பு பிராணிகளை வளர்க்க கூடாது என்பதல்ல. அதன் உணவுக்கான ஏற்பாடுகளை எதிர்காலத்தில் சரியாக வடிவமைத்துக்கொள்ள வேண்டும் இல்லையெனில் சிக்கல்தான். நன்றி - பிபிசி 

ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவழிக்கிறீர்களா?

படம்
மிஸ்டர் ரோனி என்னால் ஸ்மார்ட் போனின் நோட்டிபிகேஷனை பார்க்காமல் இருக்க முடியவில்லை? இப்பிரச்னைக்கு தீர்வு என்ன? உங்களுக்கு அந்த பிரச்னை. எங்கள் குழுவுக்கு போயபட்டி ஸ்ரீனு படங்கள் பார்ப்பது எனக்கு பிரச்னை. அதை விடுங்கள். இதை எப்படி கட்டுப்படுத்துவது? சிம்பிள். ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸில் நோட்டிஃபிகேஷன் செட்டிங்கில் சென்று அதனை ஆஃப் செய்யுங்கள். பிரச்னை பாதி தீர்ந்தது. பாக்கெட்டில் வைத்தால் தொலைபேசி அழைப்புகளை மட்டும் பெறும்படி மாற்றுங்கள். கை அரிக்குது எஜமான் என்று புகார் சொன்னால் வேறு வழியில்லை. உளவியல் மருத்துவரைச் சந்திக்க அப்பாய்ன்மென்ட் வாங்குவதே ஒரே வழி. இப்பழக்கத்தை மாற்றுவது நீண்ட கால நோக்கில் யோசித்தால்தான் முடியும். எளிதல்ல. நன்றி - பிபிசி 

மைக்ரோவேவ் ஓவன் பாதிக்குமா?

படம்
மிஸ்டர் ரோனி மைக்ரோ ஓவனில் சமைக்கும்போது, அதிலிருந்து நாம் சற்று தள்ளி நிற்க வேண்டுமா? மூடநம்பிக்கையை இப்படியும் ஏற்படுத்தலாம் என்பதற்கு உங்கள் பதிலே சாட்சி. மைக்ரோ ஓவனில் பயன்படும் அலைகள் உங்கள் உடலை பாதிக்காது. அப்படி பாதித்தால் உணவு என்னாகும்? மறைமுகமாக அது உணவுப்பொருட்களை சூடாக்கி உங்களுக்கு தேவையான உணவை உருவாக்குகிறது. ஓவன் பற்றிய கையாளும் குறிப்பை படித்தாலே இதுபோன்ற குழந்தைதனமான கேள்விகளை நீங்கள் கேட்க மாட்டீர்கள். நன்றி - பிபிசி 

உலகிலேயே அதிக விலைமதிப்பு கொண்ட நாணயம்!

படம்
டாப் 5 கேள்விகள்  மிஸ்டர் ரோனி @ ஏன்?எதற்கு? எப்படி? காய்கறிகளை பழங்களை அப்படியே பச்சையாக சாப்பிடுவது நல்லதா? பண்ணைக் காய்கறிகள் என்பதன் அர்த்தம், அதில் மண் ஒட்டியிருக்க சாப்பிடுவது அல்ல. அம்முறையில் சில சத்துகள் உண்டுதான். ஆனால் சத்துகள் உடலால் செரிக்கப்பட அவை சமைக்கப்படுவது அவசியம். மேலும் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் நேரடியாக சாப்பிட்டால் உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. மெட்ரிக் அளவீட்டை ஏற்காத நாடுகளும் உண்டா? ஏன் இல்லாமல்? அமெரிக்கா, மியான்மர், லைபீரியா ஆகிய நாடுகள் உலக மெட்ரிக் அளவீட்டை ஏற்கவில்லை. அமல்படுத்தவில்லை. ஜப்பான் மன்னருக்கு பெரும் அதிகாரம் உண்டா? இரண்டாம் உலகப்போர் தோல்வி வரை இருந்தது. அதற்குப் பிறகு மன்னர் என்பது மரியாதைக்குரிய அடையாளமாக மாறி விட்டது. பெரிய அதிகாரங்கள் ஏதுமில்லை. செவ்விந்தியர்கள் கத்துவது போல படங்களில் நாம் கேட்கும் ஒலி உண்மையானதா? சுத்த டுபாக்கூர். செரோக்கி மற்றும் அபாசே ஆகிய பழங்குடிகள் தமக்குள் போர் நேரும்போது சிலவகை ஒலிகளை தகவல் தொடர்புக்காக எழுப்புவார்கள். ஆனால் அது படத்தில் காட்டியுள்ளது போல் அல்ல. படத்தில் ஒரே மாதிரிய

ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி - டாப் 5 கேள்விகள்!

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - பேக் டூ பேக் கேள்விகள் மிஸ்டர் ரோனி பதில் சொல்லுகிறார்! வாத்தின் கால்கள் ஏன் ஆரஞ்சு நிறத்தில் இருக்கின்றன? வாத்துக்கறி சாப்பிடும்போது இப்படியெல்லாம் யோசிக்கிறீர்களா என்ன? எனிவே, வாத்தின் கால்கள் ஆரஞ்சு நிறத்தில் இருக்க காரணம் அதன் உடலிலுள்ள விட்டமின்கள் மற்றும் ஹார்மோன்கள்தான்.விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை இனப்பெருக்க காலத்தில் அதிகம் சுரக்கின்றன. இதன்விளைவாக, பெண் வாத்துகளுக்கு ஆண் வாத்துகள் சரியான இணை என நம்பிக்கை பிறக்கிறது. அப்புறம் என்ன, ரொமான்ஸ் றெக்கை கட்டிப்பறக்கும். உயரமான மனிதர்களுக்கு உடலில் அதிக செல்கள் இருக்கும் என்பது உண்மையா? நிஜம்தான். உடனே நீங்கள் என்பிஏ விளையாட்டு வீரர்களை கற்பனை செய்திருப்பீர்கள். அப்படி உயரமாக இருப்பது விளையாட்டுகளுக்கு உதவும் என்பது சரிதான். ஆனால் அதேசமயம் புற்றுநோய் ஆபத்தும் அதிக செல்களைக் கொண்டவர்களுக்கு உண்டு. உங்கள் உடலில் பத்து செ.மீ உயரம் கூடினாலே பத்து சதவீத புற்றுநோய் ஆபத்து உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். யோசித்து யோசித்து உடலின் கலோரிகளைக் கரைக்க முடியுமா? லேஸ் சிப்ஸ் தின்றுக

குழந்தை அழும்போது கண்ணீர் வருவதில்லையே ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி குழந்தை பிறந்தவுடனே அழுகிறது. ஆனால் கண்களிலிருந்து கண்ணீர் வருவதில்லையே ஏன்? குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை அழுகை மூலமாக அறியலாம். தாயின் கருப்பையில் உள்ள குழந்தை மெல்ல வெளிவந்தவுடன் வெளியிலுள்ள காற்றை சுவாசிக்கத் தொடங்கும்போது, அது முன்னிருந்த பாதுகாப்பில் குறைபாட்டை உணர்கிறது. உடனே அழுகிறது. ஆனால் அதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அழும்போது சத்தம்தான் பெருமளவில் ஊரையே உலுக்கும்படி வரும். ஆனால் ஒரு சொட்டு கண்ணீர் கூட வராது. காரணம், கண்ணீர் சுரப்பி அப்போது உருவாகி முதிர்ச்சி அடைந்திருக்காது என்பதே. மேலும் குழந்தையின் உடலில் வியர்வைச்சுரப்புக்கு காரணமான எக்கிரைன், அபோகிரைன் ஆகிய சுரப்பிகளும் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது. எனவே சில வாரங்களுக்கு குழந்தைக்கு வியர்வை சுரக்காது. அதேசமயம் குழந்தைக்கு பாலூட்டும்போது, அவர்களின் உடலில் வியர்வை உருவாகும். இதன் அளவு நினைத்து பார்க்க முடியாத அளவு அதிகமாக இருக்கும். பலரும் பீதியாவார்கள். அது இயல்பானதுதான். தாயின் உடலிலிருந்து உடற்சூடு குழந்தைக்கு மாற்றப்படுகிறது என்கிறார் கலிஃபோர்னியா ப

சர்க்கரையால் சத்தம் குறையுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சர்க்கரை கலக்கும்போது, ஸ்பூனில் எழும் சத்தம் குறைவாக இருக்கிறதே ஏன்? அநேகமாக நீங்கள் தனியாக காபி சாப்பிடும் பேச்சிலராக இருப்பீர்கள என டவுட்டாகிறது எனக்கு. இதையெல்லாம் கவனித்து கேள்வி கேட்கத்தோன்றுகிறதே ப்பா. பிரமிப்பாக இருக்கிறது. காபியில் ஏதும் கலக்காதபோது அங்கு ஒலிக்கு தடை ஏற்படுத்தும் பொருட்கள் ஏதுமில்லை. ஆனால் சர்க்கரை இதற்கு முதல் தடையாக வருகிறது. எனவே, சர்க்கரையற்ற டம்ளரில் ஸ்பூனால் கலக்கும்போது சத்தம் அதிகமாகவும், சர்க்கரை கலந்த கலக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது ஸ்பூன் டம்ளரில் மோதினால் ஒலி குறைவாக எழுகிறது. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

விமானத்தில் குழந்தைகள் அழுவது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி குழந்தைகள் விமானப்பயணத்தில் அழுவது ஏன்? சாதாரண குழந்தைகள் முதல் ஆட்டிசக் குழந்தைகள் வரை பஸ், விமானம் என வாகனம் எதுவானாலும் செல்லும்போது மெல்லத் தொடங்கி பயணிகளை உசுப்பி எழவைக்கும் அளவு அழுவார்கள். ஏன்? காரணம் விமானத்தில் சாதாரணமாக அனுபவிக்கும் அழுத்தம் நம்மாலே பொறுத்துக்கொள்ள முடியாது. குழந்தைகள் எப்படி தாங்கும். விமானம் உயரத்தில் பறக்கும்போது, காது அடைக்கும். அந்த அழுத்தம் குழந்தைகளுக்கு தனியாக இருப்பது போலத் தோன்றும். இதனால்தான் அழுகை எல்லை மீறுகிறது. அறிவியல்ரீதியான காரணம், குழந்தைகளின் காதில் உள்ள அமைப்புதான். அஸ்டாசியன் குழாய் எனும் அமைப்பு நம் காதில் உள்ள நடுவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு முழு வளர்ச்சி அடைந்தது அல்ல. வயது வந்தோருக்கும் குழந்தைகளுக்கும் இது வேறுபட்ட வளர்ச்சியில் உள்ளது என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த  சைமன் பேயர். பொதுவாக நாம் பயணிப்பதை மூளை உணர்வது நம் காதில் செல்லும் காற்று மூலமாகத்தான். விமானம் ஏறி இறங்கி 9,100 மீட்டர் உயரத்தில் பறக்கிறது. இது பொதுவான உயரம். இதில் வயதுவந்தோர் காற்றழுத்த த்திற்கு ஏற்றவாறு தம்மை

சாப்பிட்டபிறகு உடனே குளித்தால் ஆபத்தா? - மிஸ்டர் ரோனி

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி சாப்பிட்ட பிறகு ஒரு மணிநேரம் கழித்தபிறகு குளிக்க வேண்டுமா? நாம் அப்படி நினைத்து வருகிறோம். ஆனால் அது தேவையில்லை என்று பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகள் கூறி வருகின்றன. 1960ஆம் ஆண்டு அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், இதுபற்றிய நமது கருத்து தவறு என்று கூறியது. இக்காலகட்டத்தில் நீச்சல் வீரர்களுக்கு பல்வேறு நேரங்களில் உணவு வழங்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதன்மூலம், அவர்களின் உடல்நலனுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்று ஆராய்ந்தனர். ஆனால் உடல்நலன் பாதிப்பிற்கு எந்த ஆதாரமுமில்லை என்று நிரூபணமானது. 2005, 2011 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற ஆராய்ச்சிகளும் இதனை நிரூபித்தன. எனவே சாப்பிட்டபிறகு ஒரு மணிநேரம் காத்திருந்து குளிக்க வேண்டியதிலை. அதற்கு முன்பே குளித்துவிட்டு சாப்பிடுங்கள். மேற்சொன்ன ஆராய்ச்சிகளைப் படிக்க வேண்டிய தொல்லை மிச்சம் பாருங்கள். நன்றி: பிபிசி

திசை தெரியாமல் போகிறதா? - உங்கள் பிழை அல்ல!

படம்
Cartoon Connie Comics Blog ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சிலருக்கு வழி தேடும் திறன் ஏன் மிக குறைவாக உள்ளது? மூளையிலுள்ள முன்புறப்பகுதி வழிதேடும் திறனுக்கானது. ஆனால் இது அனைவருக்கும் அப்படியே செயல்படாது. சிலர், பிறரிடம் வழிகேட்டு ஒரு இடத்தை எளிதாக சென்று சேர்வார்கள். சிலர் அலைந்து திரிந்துதான் சரியான இடத்திற்கு செல்வார்கள். என்னைக்கூட தொலைந்து போய்விடுவான் என எங்கேயும் போக அனுமதிக்க மாட்டார்கள். என்னைக் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையால் நான் புதிய இடங்களுக்கு மிகச்சரியாக, தவறாகச் செல்வேன். தட்டுத்தடுமாறித்தான் அந்த இடங்களை சென்று சேர்ந்துள்ளேன். அதனால் கவலைப்படாதீர்கள். உடனே எக்ஸ்ட்ரோவர்ட், இன்ட்ரோவர்ட் என கிளம்புவார்கள். உள்ளூரில் ஓரிடத்திற்கு ஒரு பெயரைச் சொல்லுவார்கள். நமக்கு காகித த்தில் திருத்தமான பெயர் இருக்கும். எனவே தவறுகள் நடப்பது சிரமம். இதை சாக்காக வைத்து நாலைந்து மனிதர்களோடு பேசுகிறீர்கள். முன்னே பின்னே பார்க்காத கட்ட டங்களை அறிந்துகொள்கிறீர்கள் என்றால் லாபம்தானே? நன்றி:பிபிசி எர்த்

காகிதங்கள் மஞ்சள் நிறமாவது ஏன்? - மரத்தில் உள்ளது காரணம்!

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நாட்பட காகிதம் ஏன் மஞ்சளாக மாறுகிறது? நடிகைகளின் புளோஅப் புகைப்படத்தை வைத்து என் நண்பன் சித்தாந்த ரத்னம் செந்தில், செய்யும்  வேலைகளில் அதில் வெள்ளை நிறம் ஏற்படுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் மஞ்சள் நிறம் ஏற்படுவது ஏன்? கண்டுபிடிச்சாச்சு. அதில் லிக்னைன் எனும் பொருள் உள்ளது. எகனாமிக் டைம்ஸ் பேப்பரை எட்டு ரூபாய் கொடுத்து வாங்கினாலும், இந்திராகாந்தி காலத்து பேப்பர் போல மஞ்சளாக,சிவப்பாக இருக்கும். காரணம் அதிலுள்ள லிக்னைன் எனும் இந்த வேதிப்பொருள்தான். மரத்தின் வலுவை அதிகமாக்குகிற பொருள்தான் லிக்னைன். ஆனால், அது காற்றுடன் வினைபுரிந்து காகித த்தை மஞ்சளாக்குகிறது. தரமான ஜிஎஸ்எம் தாள் ப்ளீச் செய்யப்பட்டு உருவானால் சிறிது நாட்கள் தாக்குப்பிடிக்கலாம். ஆனால் மரத்தில் செய்யப்பட்ட காகித தாள்கள் அனைத்தும் மஞ்சள் ஆவதைத் தடுக்க முடியாது. நன்றி: பிபிசி

ஏ4 தாளை எத்தனை மடிப்புகள் மடிக்கலாம்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஏ4 தாளை எத்தனை விதமாக மடிக்க முடியும்? ஒரே ட்யூனில் பாட்டு இமான் பாட்டு போட்டாலும் கேட்கிறோம் இல்லியா? அதேபோல்தான் இந்தக்கேள்வியும். என்னடா கேள்வி என்றுதான் தோன்றியது. ஆனால் மடிப்பு என்று பேப்பரை மடித்தபோதுதான் ஆகா வசமான கேள்வி என்று தோன்றியது. தியரியாக பேப்பரை மடிப்பதில் நிறைய கணக்குகள் சொல்லுவார்கள். இந்த இடத்தில் நீங்கள் ஓரிகாமி போன்ற கலைகளை கைவிட்டு விடுங்கள். 26 முறை என்று சிலபல  கணித சூத்திரங்கள் படி சொல்லுவார்கள். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமல்ல. தற்போது சாதனையாக இருப்பது, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மாணவர் பிரிட்னி கலிவன் செய்த துதான். 1.2 கி.மீ நீளமுள்ள டிஷ்யூ பேப்பரை பனிரெண்டு முறை மடித்து சாதனை செய்துள்ளார். நன்றி: பிபிசி 

மூக்கு தினந்தோறும் வளருகிறதா? - அறிவியல் என்ன சொல்லுகிறது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி எனக்கு என் பெரிய மூக்கைப் பிடிக்கவேயில்லை. அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்குமா? உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதுதான். மூக்கும், காதும் தொடர்ந்து நம் வாழ்நாள் முழுக்க வளர்ந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் அனிமேஷன் படங்களில் வருவது போல, படுவேகமாக அல்ல; நிதானமாகத்தான். மிலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 65 வயதுடையவர்களையும், இளைஞர்களையும் ஆராய்ச்சி செய்தார்கள். இதன் விளைவாக, வயதானவர்களுக்கு இளைஞர்களை விட 20 சதவீதம் மூக்கு நீளமாக வளர்ந்துள்ளது தெரிய வந்தது. மூக்கின் அமைப்பு வயதாகும்போது நிறையவே மாறும். ஆனால் என்ன பெரிய குடைமிளகாய் மூக்குள்ளவர்கள் புத்திசாலிகள் என்று வதந்தியைக் கிளப்பிவிடுங்கள். அவ்வளவுதான். துப்பறியும் சாம்பு போல தானாகவே விஷயங்கள் அனுகூலமாக நடக்கும் பார்த்துக்கொள்ளலாம். நன்றி: பிபிசி

நமக்கு நாமே கிச்சுகிச்சு மூட்டமுடியாதா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி நம்மால் நமக்கு நாமே  கிச்சுகிச்சு மூட்டிக்கொள்ள முடியாதது ஏன்? இப்படியெல்லாம் யோசித்து கேள்வி கேட்க முடியும் மூளையின் சக்தி அபாரமானதுதான். பதில் சிம்பிள். உங்கள் மூளைக்கு உங்களுடைய கைகளின் தொடுகையும், பிறரின் தொடுகையும் தெரியும். பிரித்துணர முடியும். அதனால்தான் உங்களுடைய கிச்சு கிச்சு மூட்டும் காரியத்தை மூளை புரிந்துகொள்கிறது. இதனால் பிறரின் தொடுகையில் ஏற்படும் கிச்சுகிச்சு சந்தோஷம் நம் கைமூலம் நமக்கு ஏற்படுவதில்லை. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

பௌர்ணமி மனிதர்களுக்கு பைத்தியம் பிடிக்கச் செய்யுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி பௌர்ணமி நிலவு நம்மை பைத்தியமாக்குமா? நிலவுக்கும் மனநிலைக்குமான தொடர்பு இன்று தொடங்கவில்லை. குறிப்பிட்ட தினத்தன்று மனநிலை மருந்துகளை சாப்பிடுவது என்பது சிலரின் பழக்கம். ஆனால், கிரேக்கர்கள்தான் இதிலும் முன்னிலை வகிக்கிறார்கள். 2300 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் அரிஸ்டாட்டிலின் கருத்தான நிலவு, நம் எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது என்பதை நம்பினர். அதோடு, தொழுநோய் போன்றவற்றுக்கும் நிலவுக்கும் தொடர்புள்ளதாக கூறிவந்தனர். ஆனால் இதற்கு வலுவான எந்த அறிவியல் ஆய்வும் கிடையாது. ஆனால், மூளையிலுள்ள நீர்மத்தில் நிலவின் ஈர்ப்புவிசை பௌர்ணமியன்றி மாறுதல்களை ஏற்படுத்துவது உண்மைதான். ஆனால் அது குணநலன்களில் மாறுபாடு ஏற்படுத்தும் அளவு வலிமையானதல்ல என்கிறது அறிவியல்துறை. தற்போது நடைபெற்றுவரும் ஆராய்ச்சிப்படி, பௌர்ணமி தினத்தன்று ஒப்பீட்டளவில் கொலைகள் குறைந்து வருவதாக கூறுகிறது. எப்படிங்க ப்ரோ என்று கேட்டுவிடாதீர்கள். ஆய்வுகள் அப்படித்தான் டக்கென ஒரு விஷயம் சொல்லிவிட்டு செல்லும். பௌர்ணமி அன்று முடிந்தவரை உற்சாகமாக இருக்க முயற்சியுங்கள். அப்படியாவது பக்கத்து சீட

கண்ணாடி போடடால் புத்திசாலித்தோரணை வநதுவிடுகிறதே ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி கண்ணாடி போட்டால் புத்திசாலியா? எல்லாம் மற்றவர்கள் உருவாக்குகிற மனப்பிராந்திதான். பள்ளியில் மாறுவேடப்போட்டி நடக்கிறது. அதில் விஞ்ஞானி வேடம் கொடுததால் தாடி, கண்ணாடிதானே தேவை. அதேதான். அங்கிருந்துதான் கண்ணாடிபுத்திசாலிததனம் வாழ்க்கை முழுக்க வருகிறது. பொதுவாக ஹாரி பாட்டர் போன்ற படங்களில் நாயகன் கண்ணாடி அணிந்து வருவதும் மற்றொரு காரணம். சின்ன வயதில் கண்ணாடி போடடால் என்ன காரணம்? சத்துக்குறைவு. படிப்பு காரணமாக இருக்கும். அதனால்தான் அவர்கள் புத்திசாலியாக சமூகத்தில் கருதப்படுகிறார்கள். கிறுக்குத்தனம் என்பது பேசினால்தானே தெரியும்? கண்ணாடி போட்டவர்களைப் பார்த்தால் எப்படி தெரியும்?எனவே, கொஞ்சம் பேசிப்பார்த்து அவர்களின் புத்தி பறறி முடிவு செய்யுங்கள். நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

முத்தமிடத் தோன்றுகிறதா? பரிணாம வளர்ச்சியும் ஒரு காரணம்!

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி முத்தம் கொடுப்பது எதற்கு? நான் இப்போதுதான் டியர் காம்ரேட் படத்தில் ராஷ்மிகாவுக்கு சடாரென விஜய் தேவர்கொண்டா முத்தம் கொடுப்பதைப் பார்த்தேன். இதனை காமத்திற்கு தாம்பூலமாக பார்க்காமல் எப்படி முத்தம் பழகியிருக்கும் என்றால் சற்று ஆச்சரியமாகவே இருக்கிறது.  1915 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் சிம்பன்சிகள் முத்தம் மூலம் உணவைக் குட்டிகளுக்குக் கொடுப்பதைப் பார்த்து முத்தத்தை இதற்காகத்தான் வந்திருக்கும் என்று கூறினர். இந்திய புராணமான மகாபாரதத்தில் முத்தம் வந்திருப்பதாக டெக்சாஸ் ஆராய்ச்சியாளர்  ஏஅண்ட் எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் கூறுகிறார். கிஸ் என்ற ஆங்கில வார்த்தை கஸ் (KUS)  என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்கிறார். வேதமொழி எழுத்துகளில் இதனை ஒருவரின் ஆன்மாவை இன்னொருவர் சுவாசிப்பது என்று கூறுகின்றனர். உலகம் முழுக்க அலைந்து திரிந்த அலெக்சாண்டர் தன் படையுடன் இந்தியாவுக்கு வந்து, முத்த த்தை உலகம் முழுக்க எடுத்துச்சென்றிருக்க வாய்ப்புண்டு. ரோம் மக்கள் கைகள், கன்னம், உதடுகள் ஆகியவற்றில் முக்கிய நிகழ்ச்சிகளின் போது அன்பை வெளிக்காட்ட முத்தமிட்டனர் எ

சாலையில் ஆம்லெட் போட முடியுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சாலையில் முட்டையை ஆம்லெட் போடுமளவு வெப்பம் உருவாகுமா? வெயில் கொடுமையை விளக்க சிலர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள். நீங்கள் அதனை நினைத்துத்தான் இப்படி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னதான் வெயில் உங்களை படுத்தினாலும், முட்டையை முழுமையாக வேக வைக்க முடியாது. உங்களுக்கு முட்டையை முழு மையாக வேக வைக்க வேண்டுமெனில் அதற்கு 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவை. ஆனால் இதற்கும் தரை உதவாது. அதற்கு பாதாளச்சாக்கடை இரும்பு மூடி பயன்படும். உலோகம் கான்க்ரீட் அல்லது தார் சாலையை விட வேகமாக சூடேறும் என்பதால் இந்த ஐடியா. மற்றபடி இந்த சோதனையைச் செய்து முட்டையை வீணாக்காதீர்கள். முட்டை 5 ரூபாயை பச்சை குதிரை போல தாண்டிக் குதிக்கும் போது இதுபோன்ற சோதனைகள் வேண்டாமே ப்ரோ. நன்றி: பிபிசி

மூளையை கணினியுடன் இணைத்து உணர்ச்சிகளையும் உருவாக்கலாமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நாம் நம்முடைய மூளையை கணினியில் இணைக்கும்போது நம்முடைய உணர்ச்சிகளும் அதில் பதிவாகுமா? எலன்மஸ்க் ஏற்கனவே தன் எண்ணத்தைச் சொல்லி நியூராலிங்க் எனும் நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார். எனவே நிச்சயம் எதிர்காலத்தில் நம்முடைய மூளை ஏதோவொரு கணினியில் இணைக்கப்படும். அப்போது நம் மூளையிலுள்ள கருத்துகள் எண்ணங்கள் உணர்ச்சிகளும் கணினியில் பதிவாகுமா? மூளையில் நியூரான்கள், கிளியல் செல்கள், ரத்தசெல்கள் இவற்றில் நடக்கும் வேதிவினைகள்தான் நம் எண்ணங்களுக்கு காரணம். ஒருவரின் உடலை விட்டு உயிர் பிரிந்தபின்னரும் கூட அவரின் மூளை மூலம் அவரின் எண்ணங்களை உயிரோடு வைத்திருக்க முடியும். இதனை பின்னர் இன்னொருவரின் உடலோடு கூட பொருத்தமுடியும் என்று வையுங்களேன். நினைவில் கொள்ளுங்கள். இயற்கையான மூளையிலிருந்து டிஜிட்டல் பிரதி உருவான பிறகு, இயற்கை மூளை குப்பையில் எறியப்பட்டு விடும். அதுவே உண்மை. அதற்குப்பிறகு மனித உடலை டிஜிட்டல் முறையில் செயற்கையாக நாமே வடிவமைத்துக்கொள்ள முடியும். இதற்கான சாட்சிகளை நாம் விரைவில் பார்க்கத்தான் போகிறோம். நன்றி: பிபிசி 

குற்றங்களுக்கு மரபணுக்கள் காரணமா?

ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஒருவர் மோசமான குற்றவாளி ஆக மரபணுக்கள் காரணமா? இப்படி கேள்வி பிறக்க, தந்தி கட்டுரைகளை தொடர்ந்து படித்தால்போதும். ரத்தம் தெறிக்க ஒன்லைனை வைத்துக்கொண்டு கொலை செய்தவர்களே படித்து சிரிக்கும் கதைகள் அங்குள்ள உதவி ஆசிரியர்கள் எழுதும் திறன் பெற்றவர்கள். சரி அறிவியல் முறைக்கு வருவோம். வெளிப்படையாக சொல்வதென்றால், சமூகம் எப்படி நடந்துகொள்கிறதோ அதன் வெளிப்படை அவர்கள் குற்றச்செயல்களாக வெளிக்காட்டுகிறார்கள். தீவிர தொடர் கொலைகார ர்களை போலீசாரும், உளவியலாளர்களும் ஆராய்ந்தபோது, சிதைந்துபோன அவர்களது குடும்பமும்,  வன்முறையான பெற்றோரின் குணாதிசயங்களும் அவர்களின் மனதை இரும்பாக்கி உணர்ச்சிகளே இல்லாதவர்களாக மாற்றுகிறது. மேலும் சிறுவயதில் தீவிர அவமானங்களை சந்திப்பவர்கள், அதற்கு நிச்சயம் பின்னால் பழிவாங்குவது உறுதி. அது குறிப்பிட்ட சம்பவத்திற்கு காரணமானவர்களாக இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை. அதற்கு சமூகம் பதில் சொல்ல வேண்டும். தவறான நடத்தைகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுத்து, குற்றவாளிகளை சமூகத்தோடு இணைத்துக்கொள்வதே நல்லது. காரணம், அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்த