குற்றங்களுக்கு மரபணுக்கள் காரணமா?



ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி


ஒருவர் மோசமான குற்றவாளி ஆக மரபணுக்கள் காரணமா?

இப்படி கேள்வி பிறக்க, தந்தி கட்டுரைகளை தொடர்ந்து படித்தால்போதும். ரத்தம் தெறிக்க ஒன்லைனை வைத்துக்கொண்டு கொலை செய்தவர்களே படித்து சிரிக்கும் கதைகள் அங்குள்ள உதவி ஆசிரியர்கள் எழுதும் திறன் பெற்றவர்கள். சரி அறிவியல் முறைக்கு வருவோம்.


வெளிப்படையாக சொல்வதென்றால், சமூகம் எப்படி நடந்துகொள்கிறதோ அதன் வெளிப்படை அவர்கள் குற்றச்செயல்களாக வெளிக்காட்டுகிறார்கள். தீவிர தொடர் கொலைகார ர்களை போலீசாரும், உளவியலாளர்களும் ஆராய்ந்தபோது, சிதைந்துபோன அவர்களது குடும்பமும்,  வன்முறையான பெற்றோரின் குணாதிசயங்களும் அவர்களின் மனதை இரும்பாக்கி உணர்ச்சிகளே இல்லாதவர்களாக மாற்றுகிறது. மேலும் சிறுவயதில் தீவிர அவமானங்களை சந்திப்பவர்கள், அதற்கு நிச்சயம் பின்னால் பழிவாங்குவது உறுதி. அது குறிப்பிட்ட சம்பவத்திற்கு காரணமானவர்களாக இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை. அதற்கு சமூகம் பதில் சொல்ல வேண்டும்.

தவறான நடத்தைகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுத்து, குற்றவாளிகளை சமூகத்தோடு இணைத்துக்கொள்வதே நல்லது. காரணம், அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து குற்றங்களை செய்ய வரவில்லை என்பதுதான்.

நன்றி: பிபிசி

பிரபலமான இடுகைகள்