மூக்கு தினந்தோறும் வளருகிறதா? - அறிவியல் என்ன சொல்லுகிறது?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
எனக்கு என் பெரிய மூக்கைப் பிடிக்கவேயில்லை. அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்குமா?
உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதுதான். மூக்கும், காதும் தொடர்ந்து நம் வாழ்நாள் முழுக்க வளர்ந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் அனிமேஷன் படங்களில் வருவது போல, படுவேகமாக அல்ல; நிதானமாகத்தான்.
மிலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 65 வயதுடையவர்களையும், இளைஞர்களையும் ஆராய்ச்சி செய்தார்கள். இதன் விளைவாக, வயதானவர்களுக்கு இளைஞர்களை விட 20 சதவீதம் மூக்கு நீளமாக வளர்ந்துள்ளது தெரிய வந்தது. மூக்கின் அமைப்பு வயதாகும்போது நிறையவே மாறும். ஆனால் என்ன பெரிய குடைமிளகாய் மூக்குள்ளவர்கள் புத்திசாலிகள் என்று வதந்தியைக் கிளப்பிவிடுங்கள். அவ்வளவுதான். துப்பறியும் சாம்பு போல தானாகவே விஷயங்கள் அனுகூலமாக நடக்கும் பார்த்துக்கொள்ளலாம்.
நன்றி: பிபிசி