பீ மாக் - 2013
தாய்லாந்து
இயக்குநர் - பன்ஜோங் பிசாந்தனாகுன்
கதை -
|
இசை - Chatchai Pongpraphaphan
Hualampong Riddim
ஒளிப்பதிவு - Narupon Sohkkanapituk
பேய் கதைதான். ஆனால் ட்விஸ்ட் நீங்கள் பயப்பட அவசியமில்லை என்பதுதான்.
போரில் கலந்துகொண்டு குண்டுபட்டு குற்றுயிரும் குலையுயிருமாக வீடு திரும்புகிறார்கள் ஐந்து நண்பர்கள். இடையில் நண்பர் ஒருவர், தன் வீட்டில் தங்கிச்செல்லுங்கள் என்கிறார். சரி என அவரின் வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கு நடக்கும் பகீர், பகபக சிரிப்பு சம்பவங்கள்தான் படம்.
ஒளிப்பதிவு பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். நாயகனுடன் நடிக்கும் நண்பர்கள் கூட்டத்தின் நடிப்பும், ஏடாகூட வசனங்களும் பயத்திலும் சிரிக்க வைக்கின்றன. நாயகி தேவிகா பேரழகி. அந்த நண்பர் கூட்டத்தில் பேய் என்றாலும் கூட அழகிடா என வழிவதைப் போல.. அவ்வளவு அழகு. நடிக்கவும் செய்கிறார். போதாதா----
போர், போரின் பாதிப்பில் இறப்பு, நீர்நிலை மீது கிராமம், கொண்டாட்டம் என பிரேமில் அனைத்து இடங்களிலும் கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர் உழைப்பு பளிச்சிடுகிறது.
சீரியசான காஞ்சனா காட்சியில் நெகிழ்ச்சி, அழுகை, காமெடி என அத்தனையும் பார்க்க முடியுமா என்றால் முடியும் என சவால் விட்டு ஜெயித்திருக்கிறார் இயக்குநர் பன்ஜோங் மற்றும் கதை இலாகாவினர்.
பேய் பயம் குறைத்து அன்பு பாசத்தையும் திடமாக உணர்ந்து ரசிக்க இந்தப்படம் உங்களுக்கு உதவும்.
- கோமாளிமேடை டீம்
|