இடுகைகள்

இறைச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒருவர் சாப்பிட்ட மாட்டிறைச்சியைக் கண்டுபிடித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பும் ஆப்!

படம்
24 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்ட மாட்டிறைச்சி!- சஞ்சார் பாட்டி ஆப் பயங்கரம்! அண்மையில், ஒன்றிய அரசு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள கண்காணிப்பு ஆப்களைப் போல ஒன்றை வடிவமைத்தது. தொடக்கத்தில் இந்த ஆப், சிம்களை தவறாக பயன்படுத்துபவர்களைக் கண்டுபிடிப்பது. அதை முடக்குவது என்றே வலைத்தளமாக இயங்கியது. பிறகு, திடீரென போன்களுக்கு ஆப்பை தரவிறக்கி பதியுங்கள் என மிரட்டும் தொனியில் குறுஞ்செய்திகள் வரத் தொடங்கின. இறுதியாக, தகவல்தொடர்புதுறை அமைச்சர் புதிதாக தயாரிக்கும் போன்களிலும், பழைய போன்களிலும் கண்காணிப்பு ஆப் இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டார். ஆப்பிள் நிறுவனம், முடியாது என்ற ஒற்றைப் பதிலை சொல்லிவிட்டது. மற்றவர்கள் அமைதி காத்தனர். அமலாக்கத்துறை பயமாக இருக்கலாம். இணையத்தில், சர்வாதிகார நாடாக மாறிவிட்டதா இந்தியா என கேள்வி எழும்ப அமைச்சர் எப்போதும் போல ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தைப் பின்பற்றி மன்னிப்பு கோரி, உத்தரவை திரும்ப பெற்றுள்ளார். காலில் விழுவது, மன்னிப்பு கோருவது ஆர்எஸ்எஸ் ஆட்களுக்கு புதிதல்ல. ஆனால், அவர்களிடம் பொறுக்கித் தின்பவர்களுக்கு இன்னும் அந்த சடங்குகள் புரிபடவில்லை. சரி, இப்போது அந்த ஆப்...

சீனாவின் பன்மைத்தன்மை கொண்ட உணவு கலாசாரத்தை சுவாரசியமாக விளக்கும் நூல்!

படம்
  A History of Food Culture in China By Rongguang Zhao Translated by Gangliu Wang and Aimee Yiran Wang 2015 இந்த நூல், சீனாவில் உள்ள உணவு வகைகள், அதன் தெற்கு, வடக்கு கலாசார வேறுபாடுகள், தின்பண்டங்கள், அறுசுவை பதார்த்தங்கள், மதுபான வகைகள், வெளிநாட்டு உணவு வகைகள், கலாசாரம் ஏற்படுத்திய தாக்கம், பல்வேறு நாடுகளுக்கு மன்னர் அனுப்பி வைத்து பிரதிநிதிகள் சேகரித்து வந்த அறிவியல், சமையல் தொடர்பான அறிவு என ஏராளமான விஷயங்களைப் பற்றி விளக்குகிறது.  நூலில் பல்வேறு உணவு பதார்த்தங்களுக்கான பெயர்களை சீன மொழியில் வாசிக்க முடிவது மகிழ்ச்சி. ஒரு தின்பண்டத்தை குறிப்பிட்ட திருவிழாவுக்கென தயாரிக்கிறார்கள். அதன் பின்னாலுள்ள கதை. அதில் மையமாக உள்ளது ஆணா, பெண்ணா என ஏராளமான விஷயங்களை நூலாசிரியர் விளக்கி கூறுகிறார். அவற்றை வாசிக்கும்போதே ஆச்சரியமாகிறது. உண்மையில் சீனாவில் உணவு கலாசாரம் ஒற்றைத்தன்மையானது அல்ல. பன்மைத்தன்மை கொண்டது. அந்த கலாசாரம், மேற்கத்திய உணவு, மதுபானங்களைக் கூட உள்ளே ஏற்றுக்கொண்டு வளர்ந்து வருகிறது. நூலின் இறுதிப்பகுதியில் பிரெஞ்சு நாட்டினர் ஆண்ட பகுதிகளில் இருந்த உணவுப்பழக்கவழக்கம், மத...

மதவாத சமூகம் புறக்கணித்த தலித்துகளின் சமையலறை!

படம்
 தலித் கிச்சன்ஸ் ஆப் மராத்வடா சாகு படோல் ஆங்கிலம் ஹார்பர் கோலின்ஸ் இந்த நூலில், எழுத்தாளர் சாகு படோல் மும்பையில் உள்ள தலித் மக்களின் வாழ்க்கை, சாதிமுறை, கொண்டாடும் பண்டிகைகள், நம்பிக்கை, உணவுமுறை, அதை செய்வது எப்படி என ஏராளமான தகவல்களைக் கொண்டு விளக்கியுள்ளார். பெரும்பாலும் அசைவ உணவுகள்தான். சைவ உணவு செய்முறைகளும் இறுதியில் உள்ளன. அதை தவிர்த்துவிடுவோம். அசைவ உணவுகளை எப்படி சமைக்கிறார்கள் என்பதே நம்மை பெரிதும் ஆச்சரியப்படுத்துகிறது. அசைவ உணவு செய்முறைகளில் பலவும் மிகச்சில பொருட்களை வைத்தே செய்கிறார்கள். நிறைய அசைவ பொருட்களை சமைக்க நீர் கூட பயன்படுத்தப்படுவதில்லை. சட்டியில் கறியை போட்டு அதை சூட்டில் வறுப்பதே பெரும்பாலான உணவு செய்முறையாக உள்ளது. விலங்கின் ரத்தத்தை ஊற்றி அதை வேக வைக்கும் முறை தொடங்கி, தலித்துகளின் உணவுமுறை பற்றிய வியப்பு தொடங்குகிறது. மும்பையில் உள்ள சாதிமுறை, சாதி மேலாதிக்கம், தெய்வ வழிபாடு பற்றியும் விரிவாக கூறியுள்ளார். அவர்களின் வழிபாட்டில் தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் தெய்வ கதைகளும் உள்ளன. சாதிமுறையில் தலித்துகளுக்கும் நிறைய பிரிவினைகள் உள்ளன. நூலில், மக...

வணிக சந்திப்பிற்கு உணவகங்களை தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன?

படம்
        இன்று வணிக ரீதியாக கூட்டாளிகளை, ஒப்பந்தக்காரர்களை விடுதியில் சந்திப்பது இயல்பாகிவிட்டது. சிலர் எழுத்தாளர்களுக்கென தனி கபே நடத்துகிறார்கள். காபி கடைகளில் இணைய வசதியைக்கூட வழங்குகிறார்கள். வெளிநாடுகளில் நேர்காணல்களை நடத்துகிறார்கள். இப்படியான சூழ்நிலையில் ஓரிடத்தில் முக்கியமான நபரை சந்திக்கச் செல்கிறீர்கள். அப்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும். ஹோட்டல்களில் முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது. உரிமையாக குறிப்பிட்ட மேசையைக் கேட்கலாம். அங்கே உட்கார்ந்து பேசிவிட்டு சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கொடுத்துவிட்டு வரலாம். பதிவு  செய்யவில்லை என்றால் சந்திப்பை உகந்ததாக அமைய வாய்ப்பு குறைவு. ஹோட்டல்கள், உணவு, பணியாளர்களது நடத்தை பற்றிய மதிப்பீடுகளை இணையத்தில் பார்த்துவிட்டு வரலாம். சமீபத்திய விமர்சனங்களைக் கவனியுங்கள். ஓராண்டுக்கு முந்தையது வேண்டாம். குறைகள், புகார்களுக்கு எப்படி பதில் அளித்துள்ளார்கள் என பாருங்கள். நிறைய புகழ்பெற்ற உணவகங்கள் என பீற்றிக்கொள்பவர்கள் கூட குறைகளை, புகார்களை வாடிக்கையாளர் முன்வைத்தால் மௌனமாக அதை கடந்துசெல்வதை இணையத்தில் கமெண்டுகளைப் ப...

அசைவ - சைவ இந்தியாவின் சாப்பாட்டுக் கணக்கு!

படம்
                அசைவ - சைவ இந்தியாவின் சாப்பாட்டுக் கணக்கு! உலகில் சைவம், அசைவம் என்பதெல்லாம் வியாபாரத்திற்கு உண்டான சமாச்சாரங்கள். உணவைச் சாப்பிடும் மக்கள் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவது கிடையாது. பசிக்கு சாப்பிடும் உணவு கூட இன்று அரசியல்மயமாகி சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படும் அளவில் உள்ளது. உண்மையில் இந்தியாவில் சைவம் சாப்பிடும் பழக்கம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். இங்கு தீவிர சைவம் என்றால் பருப்பு, காய்கறிகள், பழங்கள் மட்டும்தான் என்பதைக் குறிப்பிட்டுவிடுகிறோம். சிலர் சைவத்தில் பால், முட்டை இன்னும் பல பொருட்களை சேர்த்து அதற்காக விவாதம் செய்யவும் முயல்கிறார்கள். தீவிர சைவத்தில் பாலை சேர்க்க முடியாது. பால், விலங்கிடமிருந்து பெறும் பொருள். எனவே, அதை தீவிர சைவ பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்தமுடியாது. ஆனால், அனுபவ அடிப்படையில் ஒருவர் பாலை தனது உணவில் சேர்த்துக்கொள்வது அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தயிர், வெண்ணெய், நெய் ஆகிய பால் பொருட்களைப் பயன்படுத்தலாம் என்று மகாத்மா காந்தி எழுதியிருக்கிறார். அண்மையில் இந்திய மாநிலங்களில் கிராம...

வீகன் உணவுமுறையில் இருந்து தாவர உணவுமுறை மாறுபட்டது!

படம்
  தாவர உணவுமுறை இன்று தாவரங்களைச் சார்ந்த உணவு எடுத்துக்கொள்வபவர்கள் அதிகரித்துள்ளனர். தாவர உணவுகள் என்றால் தலையில் கொம்பு முளைக்குமளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதல்ல. உணவு வகைகளில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பங்கு எழுபது முதல் எண்பது சதவீதம் இருக்கும். இறைச்சியைக் கூட சிறிது சேர்த்துக்கொள்ளலாம். தாவர உணவுமுறையில் சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்டு உணவுப்பொருட்கள் சேர்க்க கூடாது. மற்றபடி ஊட்டச்சத்துகளைக் கொண்ட காய்கறிகள் பழங்களை சாப்பிடலாம். தாவரம் சார்ந்த உணவுமுறைக்கு மாற்றாக வீகன் உணவுமுறையை சிலர் கூறுகிறார்கள். ஆனால், அதை இதையோடு ஒப்பிட முடியாது. ஒப்பீட்டளவில் மிகவும் மாறுபட்டது. வீகனில் விலங்கிலிருந்து பெறும் இறைச்சி, முட்டை, பால் என எதையும் சேர்ப்பதில்லை. அவர்கள் தங்களது உணவு சார்ந்த தீவிர கவனம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களது உடை, பயன்படுத்தும் பொருட்களில் கூட விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் இருக்காது. சைவ உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள் பால், முட்டையை எடுத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இந்த உணவுகளைப் பெற விலங்குகள் கொல்லப்படுவதில்லை என்பது நியாயமான காரணம...

ஆதரவற்றோரைக் கொன்றால் உடையும் லாபம், உடலும் லாபம்!

படம்
  ‘’பழைய துணிகளை ஆதரவற்றோருக்காக கொடுங்கள்’’ என சிலர் வந்து வீட்டு படியேறி கேட்டிருப்பார்கள். அப்படி பெற்ற துணிகளை சலவை செய்து ரோட்டோரக்கடையில் போட்டு விற்பார்கள். இதுபோல மோசடிகள்   உலகமெங்கும் நடப்பவைதான். அதைத்தான் ஹார்மன் செய்தார். இவர் ஆதரவற்றோரை கொலை செய்து உடலை கறிக்கடைக்கும். உடைகளை பழைய துணிகள் விற்கும் சந்தையில் விற்றார். 1879ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹனோவரில் பிறந்தவர் ஹார்மன். ரயில்வேயில் தீயணைப்புத்துறையில் பணியாற்றும் தந்தைக்கு ஆறாவது பிள்ளை. அம்மா செல்லமாக வளர்ந்தார். இதனால், அப்பாவின் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டார். சக நண்பர்கள் விளையாட்டு என வெளியில் சுற்றும்போது ஹார்மன் பொம்மைகளை வைத்து வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தார். பதினாறு வயதில் ராணுவப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், வலிப்பு இடையறாமல் வந்த காரணத்தால் படிப்பை தொடர முடியவில்லை. திரும்பி ஹனோவருக்கு வந்த பிறகு சிறு குழந்தைகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த காரணத்தால், காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். ஆறே மாதங்களில் அங்கிருந்து தப்பி ஓடினார். சிறு குற்றங்கள், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது...

நீதிபதியிடம் பிணத்தின் இடதுகாலை ஸ்னாக்ஸாக சாப்பிடக் கேட்ட குற்றவாளி

படம்
  மனித இறைச்சியை உண்பது என்பது டெலிகிராம், டெய்லி புஷ்பம் நாளிதழ்களில் கலோக்கியலாக எழுதப்படுவதாக் பரபரப்பாகிறது. ஆனால் இதெல்லாம் வரலாற்றுக்கு புதிதல்ல. பல்வேறு மக்களின்   இனக்குழுக்களில் கன்னிபாலிசம் எனும் மனித இறைச்சி உண்ணும் பழக்கம் உண்டு. தொடர் கொலைகாரர்களைப் பொறுத்தவரை பாலியல் ரீதியாக, செக்ஸ் ரீதியாக தீவிரம் கொண்டவர்களுக்கு மனித இறைச்சி உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது. இதற்கான எடுத்துக்காட்டுகளை குற்றம் சார்ந்த செய்திகளில் எளிதில் பார்க்கலாம்.   மெக்ஸிகோ நாட்டில், ஆஸ்டெக் இனக்குழுவினர் பதினைந்தாயிரம் மக்களுக்கும் மேல் பலியிட்டு, அதை உணவாக உண்டிருக்கிறார்கள். பேரரசர் மாக்டெஸூம்பா தான் தேர்ந்தெடுத்து உடலுறவு கொண்ட சிறுவர்களைக் கொன்று உணவாக்கி சாப்பிட்டிருக்கிறார்.அதை விருந்தாக படைத்திருக்கிறார். இப்படி இறந்தவர்களை தியாகிகளாக அந்த மக்கள் கருதினர். சங்க காலத்தில் கூட போரில் வெற்றி பெறுவதற்காக கழுத்தை அறுத்து கொன்று கொல்வதை உறுதிமொழியாக ஏற்கும் வீரர்கள்   தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றனர். மேட் மேக்ஸ் ப்யூரி ரோட்டில் கூட தலைவருக்காக வீரமரணம் என ஒரு கூட்டம் நாயகனை க...

காந்தியின் அரசியலைச் சொன்ன அவரின் உணவுமுறை

படம்
              காந்தியின் அகிம்சை , சுய சிந்தனை அனைவரும் அறிந்த ஒன்றுதான் . இதைக்கடந்த ஒன்றை அவர் செய்தார் . அதுதான் , நேர்த்தியான உணவு பண்டங்களைக் கொண்ட உணவுமுறை . காந்தி , வைஷ்ண குடும்பத்தில் பிறந்தவர் . சைவ உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினார் . அவர் சிறுவயதில் ஒருமுறை ஆட்டின் இறைச்சியை ரகசியமாக சாப்பிட்டுப் பார்த்தார் . பிறகு வாழ்வெங்குமே இறைச்சியை அவர் சாப்பிடவில்லை . அதற்கு மாற்றாக கிடைத்த பொருட்களை உண்டார் . அவை அனைத்துமே எளிமையான உணவுதான் . கோதுமை , சோளம் , சோயாபீன்ஸ் அல்லது வேர்க்கடலை பால் ஆகியவற்றை காந்தியின் உணவு என ஆப்பிரிக்க அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் உருவாக்கினார் . இது இன்று வீகன் என்று கூறப்படுகிறது ., பசுவின் பாலை தானே பயன்படுத்தி வந்தாலும் கூட ஒரு கட்டத்தில் அப்படி விலங்கிடமிருந்து பெற்று குடிப்பது அறமல்ல என்று தோன்றியிருக்கிறது .. உடனே அதை நிறுத்திவிட்டார் . ஆனால் அந்த பால் கொடுத்த நிறைவை அதற்கு பதிலீடான உணவுகள் ஏதும் கொடுக்கவில்லை . எனவே , வேறுவழியின்றி பாலுக்கு மாற்றாக பாதாம் பாலை காய்ச்சி குடிக்கத் த...

பசித்த வயிற்றின் மீது எதற்கு கோபம்? - உணவு அரசியலால் தவிக்கும் குழந்தைகள்

படம்
  உணவை மக்களுக்கு விநியோகிப்பவர்கள் அதன் மீதான ஆதிக்கத்தை செலுத்துகின்றனர். எந்த உணவை மக்கள் சாப்பிடவேண்டுமென அறிவியல் பூர்வமான ஆய்வுகளை புறக்கணித்து தங்கள் மனதில் உள்ள நம்பிக்கையை புகுத்த தொடங்கிவிடுகின்றனர். இலவசமாக கொடுக்கும் உணவுகள் பெரும்பாலும் சைவமாகவே இருப்பது தற்செயலானது அல்ல.  கடந்த ஆண்டு, கர்நாடகத்தில் எம்என்எம் மகளிர் பள்ளியில் மதிய உணவுத்திட்டத்தில் இருந்து முட்டை திடீரென நீக்கப்பட்டது. இதற்கு உள்ளூரைச்சேர்ந்த அரசியல்வாதிகளே காரணம் என மாணவிகள் அறிந்தனர். கர்நாடகத்தில் கொப்பல் மாவட்டத்தில் அமைந்துள்ள அப்பள்ளியின் சுற்றுவட்டாரத்தில் ஊட்டச்சத்து சார்ந்த பிரச்னை நீங்காமல் இருக்கிறது. இந்த நிலையில் மதிய உணவுத்திட்டத்தில் இருந்து முட்டையை நீக்கினால் எப்படி? இதை அங்குள்ள மாணவி அஞ்சலி தீவிரமாக எதிரொலித்தார்.  தற்போது மத்திய அரசின் மதிய உணவுத்திட்டத்திற்கு பிஎம் போஷான் என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதை பெருமைப்படுத்தும் விதமாக இதுவரை உணவில் இருந்த முட்டையை நீக்கிவிட்டனர். இப்போது மதிய உணவில் சமைத்த காய்கறிகள் சேர்த்த உணவு மட்டுமே வழங்கப்படுகிறது.  நாங்கள் என்ன...

புரதச்சத்தை உடலுக்கு பெறும் ஒரே வழி - கறி சாப்பிடுவதுதான்!

படம்
                        finger licking good -Meat இப்படி நிறையப் பேர் சொல்லுவார்கள். புரத தேவைக்கு ஒரே எளிதான வழி இறைச்சி என பலரும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.  ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை. காய்கறிகள், பிற தானியங்கள் என பல்வேறு உணவுப்பொருட்களிலும் புரதம் உள்ளது. இறைச்சியை பட்டினி கிடந்தவர்கள் சாப்பிடுவது போல சாப்பிட்டால், உடல் கெட்டுவிடும். இதயம்., நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் உறுதியாக ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆதிக்காலத்தில் நாம் இறைச்சியைத்தான் சாப்பிட்டோம் என ஐந்துவீட்டு சாமி துணை பக்தர்கள் கொந்தளிக்கலாம். ஆனால் அன்று உணவுக்கு வேட்டையாடி சாப்பிடும் தேவை இருந்தது. பயிர் விளைவித்து சாப்பிடும் புத்தி உருவாகவில்லை. அப்படி ஒரு ஒப்பீட்டை எடுத்தாலும் கூட இன்று ஆண்டுக்கு ஒருவர் சாப்பிடும் இறைச்சி அளவு அதிகம். புரதம். விலை குறைவு என நிறைய காரணங்களை லாஜிக்காக சொல்லலாம். இதனை நாம் மறுக்கவில்லை. இறைச்சியில் எளிதாக நுண்ணுயிரிகள் தொற்றிக்கொள்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு எளிதாக வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இறை...

இறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டால் மக்களுக்கு உணவு வழங்கலாம்! பமீலா

படம்
  பமீலா டி மெக் எல்வீ பேராசிரியர், ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழகம் மனிதவள சூழலியல் பற்றி பாடம் எடுத்து வருகிறீர்கள். அதன் அடிப்படை என்ன? பல்வேறு வித இயற்கை சூழல்கள் நமது வாழ்க்கையை பாதிக்கின்றன. மாற்றுகின்றன. நான் இந்தக் கோணத்தில் மனிதவள சூழலியலைப் பார்க்கிறேன். மனிதர்கள் இயற்கை சூழலுக்கு எதிராக அல்லது ஆதரவாக இருக்கவேண்டும். இந்த இரு நிலைகள்தான் நமக்கு எதிரே உள்ளன. இயற்கை சூழல்களின் மாற்றம் எப்படி மனிதர்களை ஆபத்துக்குள்ளாக்கிறது என்பது பற்றி நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.  பருவச்சூழல் மாற்றம் உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுக்கிறதா? நிச்சயமாக. ஐபிசிசி கூட்டத்தில் பங்கெடுத்து இதுபற்றி நான் பேசியுள்ளேன். எந்த பயிர் எந்த இடத்தில் வளரவேண்டும் என்பதை தீர்மானிப்பது இயற்கைச் சூழல்தான். வெப்பம் அதிகமாகும்போது குறிப்பிட நிலத்தில் பயிர் வளரும் வாய்ப்பு குறைவு. வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் திறன் கொண்ட பயிர் மட்டுமே அங்குவாழும். மேலும் காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து வந்தால் பயிர்கள் பெறும் ஊட்டச்சத்துகள் குறையும். இப்போதே கோதுமை போன்ற பயிர்களின் உற்பத்தி மெல்ல...

இந்திய மேப்பில் அட்டகாசமான இன்போகிராபிக் தகவல்கள்! - ஆச்சரியப்படுத்தும் இளைஞர்!

படம்
  ஆல் இன் ஆல் மேப்- கேள்விகள் அனைத்துக்கும் விடை உண்டு! இந்தியாவில் எத்தனை பேர் சைவ உணவு சாப்பிடுகிறார்கள், எத்தனை கேஎப்சி உணவுக்கடைகள் உள்ளன,  ஒருவரை அண்ணா என இந்தியில் அழைப்பவர்கள் எத்தனை பேர் என பல்வேறு கேள்விகளை நமக்கு கேட்கத் தோன்றும். ஆனால் இதற்கான விடைகளை மேப் வடிவில் கொடுத்தால் எப்படியிருக்கும்? இந்தியாவில் சைவம் சாப்பிடுபவர்கள் அதிகமாக இருப்பது போல பிம்பம் உருவாக்கப்பட்டாலும், அசைவம் சாப்பிடுபவர்களின் சதவீதம் 80ஆக உள்ளது. பொதுவாக மாநில மக்களின் சாப்பாட்டு பழக்கத்தை பார்த்தால், பஞ்சாபியர்கள் இறைச்சியை அதிகம் சாப்பிடுகிறார்கள் என்பதும், தென்னிந்தியர்கள் குறைவாக சாப்பிடுகிறார்கள் என்பதும் தெரிய வரும். இதை மேப்பாக பார்க்க என்ன செய்வது? இந்தியா டுடே இன்போகிராபிக்ஸ் போடுவதற்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை. மென்பொருள் வல்லுநரான அஸ்ரிஸ் சௌத்ரியிடம் சொன்னால் போதும். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைவ உணவு சாப்பிடுபவர்கள், அசைவ உணவு சாப்பிடுபவர்கள் என தனித்தனியாக பிரித்து காட்டுகிறார். இதற்கு மத்திய அரசு வெளியிட்ட 2014ஆம் ஆண்டு அறிக்கைகளையும் படங்களையும் பயன்படுத்திக்கொண்டி...

மெக்டொனால்டை உலகம் முழுக்க கொண்டு சென்ற ரே கிராக்! - சூப்பர் பிஸினஸ்மேன்

படம்
              சூப்பர் பிஸினஸ்மேன் ரே கிராக்   இன்று உலகம் முழுக்க துரித உணவுகளுக்கு அடையாளமாக இருப்பது மெக்டொனால்ட் கடைகள்தான் . சாண்ட்விட்ச் , பர்கர் , பிரெஞ்ச் பிரைஸ் என விதவிதமாக விற்று வரும் இந்த கடைகளை உருவாக்கியவர் ரே கிராக் . இவர் அமெரிக்காவில் 1902 ஆம் ஆண்டு பிறந்தவர் . தனது கடைகளுக்கான சிந்தனையை இவர் பெற்றபோது வயது 50 ஆகியிருந்தது . பலரும் வேலை செய்து களைத்து ஓய்வெடுக்கலாமா என்று யோசிக்கும் வயது . அப்போதுதான் மெக்டொனால்ட் உணவக ஐடியாவை பிடித்திருக்கிறார் ரே கிராக் . 1917 ஆம் ஆண்டு தனது வயதை மறைத்து உலகப்போரில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலைபார்த்தார் . பிறகு , காகித பொருட்களில் தயாரிக்கும் பல்வேறு பொருட்களை விற்கும் நிறுவனத்தில் வேலை செய்தார் . எர்ல் பிரின்ஸ் என்பவர் , மில்க்‌ஷேக்குகளை ஒன்றாக கலக்கும் மெஷினை உருவாக்கினார் . இதனை வணிகத்திற்கான வாய்ப்பாக ரே கிராக் பார்த்தார் . நாடெங்கும் சென்று பல்வேறு உணவகங்கள் , பார்மசிகளில் மெஷின்களை விற்றார் . ஆனாலும் கூடன 1950 இல் இந்த மெஷின்களின் விற்பனை சரிந்துபோனது . ரே கிராக்கினு...