நீதிபதியிடம் பிணத்தின் இடதுகாலை ஸ்னாக்ஸாக சாப்பிடக் கேட்ட குற்றவாளி

 









மனித இறைச்சியை உண்பது என்பது டெலிகிராம், டெய்லி புஷ்பம் நாளிதழ்களில் கலோக்கியலாக எழுதப்படுவதாக் பரபரப்பாகிறது. ஆனால் இதெல்லாம் வரலாற்றுக்கு புதிதல்ல. பல்வேறு மக்களின்  இனக்குழுக்களில் கன்னிபாலிசம் எனும் மனித இறைச்சி உண்ணும் பழக்கம் உண்டு. தொடர் கொலைகாரர்களைப் பொறுத்தவரை பாலியல் ரீதியாக, செக்ஸ் ரீதியாக தீவிரம் கொண்டவர்களுக்கு மனித இறைச்சி உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது. இதற்கான எடுத்துக்காட்டுகளை குற்றம் சார்ந்த செய்திகளில் எளிதில் பார்க்கலாம்.  

மெக்ஸிகோ நாட்டில், ஆஸ்டெக் இனக்குழுவினர் பதினைந்தாயிரம் மக்களுக்கும் மேல் பலியிட்டு, அதை உணவாக உண்டிருக்கிறார்கள். பேரரசர் மாக்டெஸூம்பா தான் தேர்ந்தெடுத்து உடலுறவு கொண்ட சிறுவர்களைக் கொன்று உணவாக்கி சாப்பிட்டிருக்கிறார்.அதை விருந்தாக படைத்திருக்கிறார். இப்படி இறந்தவர்களை தியாகிகளாக அந்த மக்கள் கருதினர். சங்க காலத்தில் கூட போரில் வெற்றி பெறுவதற்காக கழுத்தை அறுத்து கொன்று கொல்வதை உறுதிமொழியாக ஏற்கும் வீரர்கள்  தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றனர். மேட் மேக்ஸ் ப்யூரி ரோட்டில் கூட தலைவருக்காக வீரமரணம் என ஒரு கூட்டம் நாயகனை கொல்வதற்காக வரும். தியாகிகளை அந்த ரகத்தில் சேர்த்தலாம்.   

1930ஆம் ஆண்டு ரஷ்யாவில் வறுமை பொறுக்க முடியாமல் பசியால் பிள்ளைகளைக் கொன்று தின்ற பெற்றோர்கள் உண்டு. அரசு இவர்களை நரபலியாளர்கள் என அடையாளப்படுத்தி ஆயுள்தண்டனை அல்லது சிறை தண்டனை வழங்கியது. இதன் மூலம் இவர்கள் சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். ரஷ்யாவில் நடைபெற்ற நரபலி, உணவு சம்பவம், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் மாவோவின் ஆட்சியின்போது நடைபெற்றது. அவர் உருவாக்கிய கலாசார புரட்சி, மக்களை நினைத்துப் பார்க்க முடியாத இருண்ட காலத்தில் தள்ளியது.

1997ஆம் ஆண்டு நைஜீரியாவில் நடைபெற்ற சம்பவம் சற்று வேடிக்கையானது. காவல்துறையினர், ஷாண்டே ஷெர்வாடா என்பவரை, நரமாமிசம் சாப்பிடுவதாக கூறி கைது செய்தது. ஷாண்டேவின் மனைவிதான் புகாரைக் கொடுத்தார் என்பது அடுத்த வினோதம். ‘’இறந்துபோன உடல்களிலிருந்து மாமிசத்தை எடுத்து வீணாக்காமல் சாப்பிட்டேன்’’ ஏன ஷாண்டே ஒப்புக்கொண்டார். அவரது முழு குடும்பமே மனித இறைச்சி சாப்பிடும பழக்கமுடையது. ‘’நான் பரவாயில்லை. எனது சகோதரர் டஜன் கணக்கில் பிணங்களை தோண்டி எடுத்து சாப்பிடுவார்’’ என விசாரணையில் ஷாண்டே சொன்னார். இறந்த பிணங்களை ஒருவர் தோண்டியெடுத்து சாப்பிடுவதை கொலை குற்றச்சாட்டாக கொள்ள முடியாது. ஆனாலும் நீதிபதிக்கு ஷாண்டே சொன்ன உண்மை மனதைக் காயப்படுத்தியது. எனவே, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். சிறைக்காலத்தில் ஸ்னாக்ஸ் வேண்டுமே? எனவே ஷாண்டே விசாரணையில் காவல்துறையினர்  பறிமுதல் செய்த இடது காலை தனக்கு கொடுக்கவேண்டுமென நீதிபதியிடம் கேட்டு பீதி ஏற்படுத்தினார். ஷாண்டேவின் ஒரே கவலை, எதற்கு அந்த இறைச்சி வீணாக வேண்டும் என்பதுதான்.

அதிசய சக்தி, இரும்பு தங்கமாகவேண்டும், சித்திகளை அடையவென நரபலிகள் கொடுக்கப்படுகின்றன. இப்படி இறந்தவர்களின் உடல் பாகங்களுக்கு தின்பது தாந்திரீக சடங்குகளாக உள்ளன. நரபலி என சொல்லாமல் கடத்தி வந்து கொல்லப்படுபவர்கள் ஆசிய கண்டத்தில் நிறையப் பேர் உண்டு.  அறிவியலில் நவீனமாக முன்னேறியுள்ள அதே வகையில் தாந்த்ரீக சடங்குகளை கடைபிடிப்பவர்களும் உலகில் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

gif -tenor.com

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்