சமூகத்திற்கு தன்னை வெளிக்காட்ட வெடிகுண்டே ஒரே வழி
கத்தி, துப்பாக்கி வைத்து கொலை செய்யும் தொடர் கொலைகாரர்கள்
உண்டு. ஆனால் வெடிகுண்டு வைத்து பிரமாண்டமான செலவில் கொலை செய்யும் கொலைகாரர்களை குறைவாகவே
பார்க்க முடியும்.பொதுவாக, தொடர் கொலைகார்களுக்கு
நிலையான வேலை இருக்காது. எனவே, அவர்களால் அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் பிளான் செய்து
கொலைகளை செய்ய முடியாது. ஆனால் பாம் வைத்து கொல்பவர்களே இல்லையா என்றால் இருந்திருக்கிறார்கள்.
இப்போது அவர்களைப் பற்றி பார்ப்போம்.
1940-50 காலகட்டத்தில் அமெரிக்காவில் இதுபோல வெடிகுண்டு
வைத்து மக்களைக் கொல்லும் சம்பவங்கள் நடந்தன. இதற்கு காரணமானவர், அரசு நிறுவனத்தில்
வேலை செய்த ஜார்ஜ் என்பவர். இவருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. வேலைக்குச் சென்ற
இடத்தில் இவரைப் பார்த்து நோய் தொற்றிவிடும் என அனைவரும் பயந்தனர். ஏசினர். தூற்றினர்.
பலரும் டெய்லி புஷ்ப ஊழியர்கள் போல சைக்கோபயல்கள். இதனால் மனதிற்குள் வைராக்கியம் வளர்த்த
ஜார்ஜ், தன்னை துவேஷித்த ஆட்களை கொல்ல முயன்றார்.
இவருக்கு அடுத்து தியோடர் என்ற நபரைக் குறிப்பிடலாம்.
எட்டு மாகாணங்களில் பதினாறு வெடிகுண்டுகளை வைத்தவர்.
1995 – 1978 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தியோடர் வைத்த வெடிகளால் மூன்று பேர்
இறந்தனர். இருபது பேர் படுகாயமடைந்தனர்.
அடுத்து, வால்டர் மூடி. வால்டர் மூடி என்பவர் தபாலில்
வெடிகுண்டுகளை அனுப்பி வைத்து இரண்டு பேர்களை கொன்றார். இவரது கார் மீது டீலர் ஒருவர்
ஆசை கொண்டார் என்பதற்காக அவருக்கு வெடிகுண்டை அனுப்பி வைத்தார். இதனால் இவருக்கு பத்தொன்பது
ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதில் பிணை கிடையாது. 1971களில் வெடிகுண்டுகளை
நீதிபதி, வழக்குரைஞர்கள், கறுப்பின செயல்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைத்து பீதியை ஏற்படுத்தினார்.
ஸிசோபெரெனியா குறைபாடுள்ள நோயாளி என மருத்துவர்கள் கண்டறிந்தனர். தனது மனதில் சேர்த்த
வைத்த கோபத்தை வன்மத்தை சமூகத்தின் மீது துளியும் மிச்சம் வைக்காமல் காட்டியவர் வால்டர்
மூடி.
இனவெறியால்
அமெரிக்காவில் வெடிகுண்டு வைக்கப்பட்டு ஏராளமான தலைவர்கள் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவையெல்லாம் நீதிமன்றத்தின் படி கூட ஏறவில்லை. இதற்கு காரணம் வெள்ளையர்களை மட்டும்
உறுப்பினர்களாக கொண்ட கு கிளக்ஸ் கிளான் எனும் இயக்கம் ஆகும். இவர்களை நாசிர்மா என்று
அழைத்தனர். இதை திருப்பி படித்தால் அமெரிக்கன் என்று வரும்.
சீனாவில் ஜின் ருச்சாவோ என்ற வெடிகுண்டு மனிதர் பிரபலம்.
இவர், 2000ஆம் ஆண்டில் ஒரு பெண்ணைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு
பதியப்பட்டு பத்து நாட்களுக்குப் பிறகு ஜின் நிறைய கட்டிடங்களுக்கு வெடிகுண்டுகளை வைத்தார்.
வெடிகுண்டு வெடித்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர்
இறந்துபோனார்கள். 2001ஆம் ஆண்டே விசாரணையை முடித்துக்கொண்டு மரணதண்டனையை நிறைவேற்றிவிட்டனர்.
ஜின் பற்றிய விசாரணை முழுமையடையவில்லை. அதற்குள் அவருக்கு மரணதண்டனை எதற்கு நிறைவேற்றினர்
என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு விமர்சித்தது. சீன அரசு இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
படம் - பின்டிரெஸ்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக