மனதில் வெறுமை நிலை உருவாவது எப்படி? - ஜே கிருஷ்ணமூர்த்தி
ஜே கிருஷ்ணமூர்த்தி |
எப்படி முடிவெடுப்பது?
நீங்கள் தேர்வுகளின்
அடிப்படையில் வாழ்கிறீர்கள். நீங்கள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால்
எதற்காக ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்ன தேவை, எந்த விசை உங்களை தேர்ந்தெடுக்க
உந்துகிறது? நான் ஒருவரை இப்படி உந்தும் விசையை, ஒருவரின் உள்ளே உள்ள வெறுமை நிலை அல்லது
தனிமை என்று கூறுவேன். இந்த முழுமை இல்லாத
நிலை ஒருவரை தேர்ந்தெடுக்க தூண்டுகிறது.
இப்போது கேள்வி,
வெறுமை நிலையை எப்படி நிரப்புவது என்பதல்ல. அதற்கு பதிலாக வெறுமை நிலையை எது உருவாக்குகிறது
என்பதுதான். தேர்வுகளின் செயல்பாட்டால் வெறுமை நிலை உருவாகிறது , செயலின் முடிவில்
என்ன கிடைக்கிறது என்பதை நோக்கி செல்வதால் வெறுமை உருவாகிறது என்கிறேன்.
வெறுமை நிலை
உண்டாகும்போது, ஒரு கேள்வி உருவாகிறது, எப்படி இந்த வெறுமை நிலையை நிரப்புவது, தனிமை
நிலையை, நிறைவுறாத நிலையை அழிப்பது எப்படி?
என்னைப் பொறுத்தவரை வெறுமை நிலையை நிரப்புவது என்பது ஒரு பதில் கிடைக்கும் கேள்வியாகவே
தெரியவில்லை. ஏனெனில் வெறுமையை எதனாலும் நிரப்பவே முடியாது.
ஆனால் பெரும்பாலான மக்களை அதை நிரப்பவே முயன்று வருகிறார்கள்.
இதை செய்ய உணர்வு நிலை, ஆச்சரியம், எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி, நினைவு, மறதி என பல்வேறு
வகையில் முயல்கிறார்கள். இதெல்லாம் வெறுமை நிலையை உணர்வை குறைக்கும் முயற்சிகள்தான்.
இதை அவர்கள் தேர்வு செய்தல் எனும் செயல் மூலம் செய்கிறார்கள்.
தேர்வு என்ற
செயல் இருக்கும் வரை வெறுமை நிலை என்பது இருக்கும். இதில்தான் விருப்பு, வெறுப்பு,
ஈர்ப்பு, வெறுப்பு ஆகிய உணர்வுகள் உருவாகின்றன. ஒன்றைத் தேர்ந்தெடுக்க நீங்கள் விரும்புகிறீர்கள்.
அதற்கு என்ன காரணம், உங்களுக்கு பிடித்திருக்கிறது; அதே சமயம் பிடிக்காமலும் இருக்கிறது.
உங்களுக்கு பிடிக்கவில்லை; அதேசமயம் பிடித்தும் இருக்கிறது. அல்லது உங்களுக்கு ஒன்றை
நினைத்து பயமாக இருக்கிறது. அதிலிருந்து தப்பித்து ஓட நினைக்கிறீர்கள்.
பெரும்பாலானோருக்கு
விருப்பு, வெறுப்பு, பயம் ஆகிய உணர்வுகள், தேர்வு என்பதில் இருக்கும்.
இப்போது நீங்கள்
செய்யும் விரும்பாத, வெறுக்கும் செயலால் என்ன நடைபெறுகிறது? விருப்பு வெறுப்பு ஆகியவற்றை
அடிப்படையாக கொண்டு சில விஷயங்களை செய்கிறோம். இதன் விளைவாக நாம் நினைத்தததற்கு எதிர்மறையான
விஷயங்களே நடக்கிறது.
தேர்வுகளை
நீங்கள் வைத்திருக்கும் அளவுக்கு, தேர்வுகளுக்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கும்.
நீங்கள் அவசியமான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாக நினைப்பீர்கள். ஆனால், உங்கள் தேர்வு விருப்பு,
வெறுப்பு , பயம் ஆகியவற்றின் காரணமாகவே தேவையில்லாத விஷயமாக ஒன்றை உருவாக்குகிறது.
The
patheless
Dec
2022- Mar 2023
கருத்துகள்
கருத்துரையிடுக