ஸ்பெயின் நாட்டு ராணியின் நெக்லஸ், இளம்பெண்ணிடம் சிக்கிக்கொள்ள, அதை எடுக்க முயலும் திருடன் - வேட்டம்
வேட்டம் -மலையாளம் இயக்கம் பிரியதர்ஷன் |
வேட்டம் - திலீப், பாவ்னா பானி |
வேட்டம்
மலையாளம்
திலீப், பாவ்னா
பானி, ஜெகதி, இன்னொசன்ட், ஹனீபா, கலாபவன் மணி
கோபாலகிருஷ்ணன்
விமானத்தில் பயணிக்கிறார். கூடவே ஒரு பொம்மை ஒன்றை கையில் வைத்திருக்கிறார். அதில்
ஸ்பெயின் நாட்டு ராணியின் நெக்லஸ் உள்ளது. அழகான கற்கள் பதித்த மாலை. அது அருங்காட்சியகத்தில்
இருந்து திருடப்பட்டு இந்தியாவிற்குள் வந்துவிட்டது. அதை இந்தியாவில் உள்ள காவல்துறையினரும்
தேடிக்கொண்டிருக்கிறார்கள். கோபு, நெக்லஸை வீணா என்ற பெண்ணின் பேக்கில் வைத்துவிடுகிறார்.
தேவையான நேரத்தில் அதை எடுக்க முடியாமல் அந்த பெண்ணுடன் சேர்ந்து ரயிலில் பயணிக்கிறார்.
அந்த அனுபவங்களில் அவர்களுக்குள் காதல் வர, என்னவானது அந்த காதல், வீணா சென்றுகொண்டிருக்கும்
வேலை சரியாக முடிந்ததா என்பதே மீதிக்கதை
படத்தில்
பாவ்னா ரவி அழகாக இருக்கிறார். இந்திப் பெண்ணை மலையாளப் பெண்ணாக காட்ட முயன்றிருகிறார்கள்.
எனவே, பாவாடை தாவணி அணிந்தே நிறைய காட்சிகளில் வருகிறார். ஒரு பாடலில் மட்டும் தனக்கு
சிறப்பாக நடனமாடத் தெரியும் என நிரூபித்துக் காட்டுகிறார். வீணா, மலையாள பிராமணக் குடும்பத்து
பெண். அவள் பெலிக்ஸ் என்ற வேறு மத இளைஞரை விரும்புகிறாள். அவள் வேறு சாதியில், மதத்தில்
மணம் செய்தால் பிராமணக் குடும்பத்தில் இருந்து விலக்கம் செய்யப்படுவாள். குடும்ப சொத்தும்
கிடைக்காது என்ற நிலை., காதலை நம்பி சொத்து வேண்டாம் என்று கூறிவிடுகிறாள். ஆனால் விரைவிலேயே
பெலிக்ஸ் அவளைத் தவிர்க்கிறான். அவன் கொடுத்த தொடர்புஎண் வேலை செய்வதில்லை. இன்னொரு
தொழிலதிபரின் பெண்ணை அவர் மணக்கவிருப்பதை அறிந்து அதை தடுக்க நினைக்கிறாள்.
படம் பெரும்பகுதி
ஹோட்டலுக்குள் நடைபெறுகிறது. முதல்பகுதி சற்று நெகிழ்ச்சியான இயல்பில் இருக்கும். ஏனெனில்
கோபு, தனது சொத்துகளை இழந்து ஏன் திருடனாக மாறினான் என்பதற்கான கதை கூறப்படும். அவனை
திருடன் என நினைத்த வீணா, மெல்ல அவனை நட்பாக நடத்த தொடங்குவாள். குடும்ப உறுப்பினர்களுக்கு
இடையிலான காட்சி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. தங்கைக்கு வயதானவருடன் நடக்கவிருக்கும்
கல்யாணத்தையும் திலீப் தடுத்து நிறுத்துகிறார். அத்தனை பிரச்னையையும் தீர்க்கும் ஆதாரமாக
பணம் உள்ளது.
ராதாரவி காவல்துறை
அதிகாரியாக வருகிறார். அவர் கோபுவை உடனே கைது செய்யாமல் இருப்பதற்கு சொல்லும் காரணத்தை
சற்று தாமதாக கூறியிருக்காலம். முதலிலேயே சொல்லுவதால், அவர் கோபுவை அடிக்கவோ, கைது
செய்யவோ மாட்டார் என தெரிந்துவிடுகிறது. காட்சிரீதியாக பலவீனத்தை ஏற்படுத்துகிறது.
ஹோட்டலில்
நடக்கும் காட்சிகள் அனைத்துமே ஜாலியான காட்சிகள்தான். ஒட்டுமொத்த நகைச்சுவை நடிகர்களும்
ஹோட்டல் காட்சிகளில் வந்து சிரிக்க வைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நாம் படத்தின் நாயக,
நாயகியான கோபு,வீணாவைக் கூட மறந்து போகிறோம் என்பதே ஆச்சரியமானது.
கல்யாண களேபரம்
என்றுதான் படத்தை தமிழில் கூற வேண்டும். வேட்டம் என்பதற்கு விக்கிபீடியா வெளிச்சம்
என பொருள் தருகிறது. வீணாவை சந்தித்த பிறகுதான் கோபுவுக்கு வாழ்க்கையில் வெளிச்சம்
கிடைக்கிறது. பணமும் கிடைத்து புத்திசாலி மனைவியாக வீணாவும் வருகிறாள்.
படம் இரண்டே
கால் கோடியில் எடுத்து நான்கு கோடி வசூல் செய்தது நகைச்சுவைக்கான படம்.
கோமாளிமேடை
டீம்
இந்த மலையாளப்படத்தின் மூலம் பிரெஞ்ச் கிஸ் என்ற படம். யூட்யூபில் தேடிப்பாருங்கள்.
வேட்டம் என்ற படத்தின் பல்வேறு காட்சிகளை படத்தின் இயக்குநர் பிரியதர்ஷன் தான் இயக்கிய இந்திப்படங்களில் பயன்படுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக