கோடாரியால் மண்டையை பிளந்து கொலை.. கொலைக்கு முன்னரே குறியீட்டுச் செய்தி - கோடாரி மனிதன்

 
கோடாரி மனிதன்

 

தெலுங்கு படங்களில் அதிகம் பயன்படுத்தும் பொருள் என்ன? பன்ச் டயலாக்குகள் அல்ல. கோடாரி. சிங்கமுகம், சூரியன் என விதவிதமான உருவங்கள் பொறித்த கோடாரிகளை பயன்படுத்தி நல்நோக்கமில்லார்களை நாயகன் வெட்டுவார். அவரும் வெட்டப்படுவார். அதேபோல ஒரு கோடாரி கிரைம் கதைதான் இது. ஆனால் இறுதியாக யார் அந்த கோடாரி மனிதன் என்பதை கண்டறிய முடியவில்லை.

1918ஆம் ஆண்டு மே மாதம், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தவரான ஜோசப் மேகியோ கொலை செய்யப்பட்டார். மேகியோ மட்டுமல்ல, கூடவே அவரது மனைவியும் தலையில் கோடாரியால் வெட்டப்பட்டிருந்தனர். இருவரின் குரல்வளைகளும் அறுக்கப்பட்டிருந்தது மேகியோவின் சகோதரர்கள் கொலைக்கு காரணம் என்று காவல்துறை சந்தேகப்பட்டாலும் பின்னாளில் அவர்கள் விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

மேகியோ வீட்டைவிட்டு சில மீட்டர் தூரத்தில் நடைபாதையில் ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது. அதில் ‘’திருமதி மேகியோ, இன்று திருமதி டோனி போலவே அமர்ந்திருக்கப் போகிறார்’’ என எழுதியிருந்தது.   1911ஆம் ஆண்டு கோடாரியால் வெட்டப்பட்டு மேகியோ கொல்லப்பட்டது போலவே நிறைய கொலைகள் நடந்தன. ஆனால் அதிலும் பிணங்களை மருத்துவமனைக்கு எடுத்துபோக காவல் துறை வந்து உதவியதே தவிர குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை. இந்த உண்மைகளை நியூ ஆர்லியன்ஸ் ஸ்டேட்ஸ் என்ற பத்திரிகை ஆராய்ச்சி செய்து கட்டுரைகளாக எழுதி வெளியிட்டது.

இத்தாலி நாட்டை  பூர்விகமாக கொண்டவர்களான க்ரூட்டி, ரோசெட்டி என்ற காய்கறி கடைகாரர்கள் இருவரும் கோடாரியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டனர். டோனி ஸ்யாம்பரா என்பவரும் இதேபோல வெட்டி கொல்லப்பட்டதைத்தான் கொலையாளியின் குறியீட்டுச் செய்தி சொன்னது. காவல்துறை அந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம் காண்பிக்கவில்லை.

1910ஆம் ஆண்டு ஜோசப் மற்றும் கான்செட்டா ரிசெட்டோ ஆகியோர் மீது கோடாரி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஜோசப் கடுமையாக காயப்பட்டு போராடி உயிர் பிழைத்தார். வீட்டை கொள்ளையடிக்க வந்தவர்களால் தாக்கப்பட்டேன்  என வாக்குமூலம் கொடுத்தார். அதற்குப் பிறகுதான் க்ரூட்டி என்பவர்  தாக்கி கொல்லப்பட்டார். கோடாரி தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் சொன்ன தகவல்களும் கூட குற்றவாளிகளை பிடிக்க உதவவில்லை. இதில் லூயிஸ் பெசுமர் என்ற காய்கறிக் கடைக்காரரை, அன்னா லோவே என்ற பெண்மணி குற்றம் சாட்டினார். அவர்  வேறுயாருமல்ல, அந்த பெண்மணியின் கணவர்தான். அன்னாவும் கோடாரியில் தாக்கப்பட்டவர்தான் ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துவிட்டார்.  ஆனால் ஒன்பது மாதங்கள் நடந்த வழக்கில், அவரை நீதிபதி விடுதலை செய்துவிட்டார்.

பாலின், மேரி ப்ரூனோ என்ற சகோதரிகள் தங்கள் மாமாவின் வீட்டில் ஏதோ போராட்டம் நடைபெறுவது போல சத்தம் கேட்க அங்கு சென்று பார்த்தனர். அங்கு, அவர்களின் மாமா தலையில் வெட்டுபட்டு கீழே கிடக்க அருகில் திடகாத்திரமாக தோற்றத்தில் கருப்பு நிற உடையில் மனிதர் ஒருவர் நின்றிருந்தார். இப்படித்தான் மாமா கொலையில், கொலைகாரனை அடையாளம் சொன்னார்கள். இதை வைத்து கொலைகாரனை எப்படி பிடிப்பது? நியூ ஆர்லியன்ஸில்  உள்ள கிரேட்னா எனும் பகுதியில், வாழ்ந்து வந்த குடும்பத்தை கோடாரி கொலைகாரன் வெட்டிச்சாய்த்தான். முதலில் பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு பிறகே தம்பதிகளைக் கொல்ல முயன்றான். ரோஸ் கார்ட்டிமிக்லியா, இருவர் மீது சந்தேகம் தெரிவித்தார். காவல்துறை இருவரையும் விசாரணை இன்றி சிறையில் அடைத்து வைத்திருந்துவிட்டு பிறகு ஆதாரங்கள் இல்லாத காரணத்தில் வெளியே விட்டுவிட்டனர்.

மர்டர் இன் தி நியூ ஆர்லியன்ஸ் என்ற நூலை, எழுத்தாளர் ராபர்ட் டாலாண்ட் எழுதியுள்ளார். இவர் தனது நூலில், மைக் பெபிடோன் என்பவரின் மனைவி கறுப்பு உடை அணிந்து அவரது கணவரைக் கொன்றதாக கருதப்பட்ட, ஜோசப் மும்ப்ஃரே என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.ஜோசப் என்பவர்தான் கோடாரி கொலையாளியா என தேடிப்பார்த்தனர். அவர் வீடு புகுந்து கொள்ளையடிப்பவர்தான். பலமுறை சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த ஆள்.

ஆனால், உண்மையில் மேற்சொன்னது விசாரணை அதிகாரி ராபர்ட் டாலண்ட் கூறியதுதான். அரசு தனது ஆவணங்களில், மும்ஃப்ரே என்பவர் கோல்டன் ஸ்டேட்டில் 1905 முதல்  2000 வரையிலான காலகட்டத்தில் வாழவே இல்லை என்று கூறுகிறது. இதனால் கோடாரி மனிதன் பற்றிய மர்மம் தீர்க்கப்படாமல் இன்றுவரை நீடிக்கிறது.

 

 படம் 

பின்டிரெஸ்ட்


கருத்துகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை

நான்காவது காட்சி