மனைவியை வல்லுறவு செய்து கொன்றவர்களை, உயிர்த்தெழுந்து பழிவாங்கும் இசைக்கலைஞன் - தி குரோ

 தி குரோ

பிராண்டன் லீ - தி குரோ

தி குரோ

இயக்கம் அலெக்ஸ் புரோயாஸ்

பிராண்டன் லீ

அமெரிக்காவில் உள்ள இசைக்கலைஞர், அவரது மனைவி ஆகியோர் அவர்களது வீட்டில் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இசைக்கலைஞரின் மனைவி நான்கு பேரால் வல்லுறவு செய்யப்பட்டு பிறகே இறக்கிறார். குற்றுயிராக இருக்கும் இசைக்கலைஞர், கடும் வேதனைக்குப் பிறகு மருத்துவமனையில் உயிரை விடுகிறார். இறந்த பிறகு கல்லறையில் இருந்து காகத்தின் உதவியால் வெளியே வந்து, வல்லுறவு கயவர்களின் மண்டையை உடைத்து மாவிளக்கு ஏற்றுவதுதான் கதை.

சூப்பர்மேன் தனமான கதைதான். பெரும்பாலும் படக்காட்சிகள் இரவில்தான் நடக்கின்றன. நாயகன், பக்கெட் ஹெட் எனும் கிடார் இசைக்கலைஞர் போலவே இருக்கிறார். வில்லன்களை அடித்து நொறுக்குகிறார். காக்கையின் படத்தை தரையில், சுவரில் வரைந்துவிட்டு செல்கிறார். ரத்தம், நெருப்பு என கிடைத்த பொருட்களை பயன்படுத்துகிறார். பார்க்கும் காவல்துறை மிரண்டு போகிறது. ஏதாவது செய்கிறார்களா என்றால் எதுவும் செய்வதில்லை. ஏனெனில் அந்த ஊரில் போதை மாஃ|பியா தலைவர் இருக்கிறார். அவருக்கு பயந்துகொண்டுதான் காவல்துறையே இயங்குகிறது.

இசைக்கலைஞரின் பாத்திரம் இயேசுவை ஒத்த தன்மையில் உள்ளது.  அவரது அன்பிற்கு பாத்திரமான பக்கத்துவீட்டு சிறுமியின் தாயை கொல்லாமல் விட்டு, அவளது உடலிலிருந்து போதை மருந்து மட்டும் வெளியே எடுத்துவிட்டு பேசும் சிறு உரையாடல் மேற்சொன்னதை நிரூபிக்கிற காட்சி.

உயிர்த்தெழும் இசைக்கலைஞர், மனம் முழுக்க வலியால் நிரம்பியவர். இறப்பும் வேதனையைக் கொண்டதாக இருக்க, வலி நிரம்பிய இசையை கிடாரில் வாசித்துவிட்டு அதை உடைத்தெறிந்துவிட்டு வல்லுறவு செய்தவர்களைக் கொல்லுவதற்குச் செல்கிறார். காகத்திற்கும் இசைக்கலைஞருக்குமான ஆன்மிகத் தொடர்பு, வலி நிரம்பிய கடந்தகாலம் இவற்றை காட்சி ரீதியாக இயக்குநர் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். காவல்துறை அதிகாரி, முதலில் இசைக்கலைஞரை கைது செய்ய நினைக்கிறார். ஆனால் பிறகு, நீதியைப் புரிந்ததுகொண்டு நாயகனுக்கு உதவி செய்யத் தொடங்குகிறார். ஆனால் இவருக்கு துறையிலேயே எதிரியும் இருக்கிறார். அதை அவர் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

படத்தின் கதையைப் போலவே, இதில் நாயகனாக நடித்த பிராண்டன் லீயும் படக்காட்சி ஒன்றில் நிஜத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துபோனார். படத்தையும் தாண்டிய மர்மம் அது. பின்பகுதி காட்சிகளை நகல் கலைஞர் ஒருவரை வைத்து நிறைவு செய்திருக்கிறார்கள்.

படத்தை இயக்கியுள்ள அலெக்ஸ் புரோயாஸ் நிறைய அறிவியல் படங்களை சமரசமின்றி எடுத்து சாதித்தவர். வில் ஸ்மித் நடித்த ஐ ரோபாட் இவர் எடுத்த திரைப்படம்தான். மேட்ரிக்ஸ் படத்தை விட சிறப்பாக எடுக்கப்பட்ட டார்க் சிட்டி வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால், படம் நேர்த்தியாக இருக்கும் மெட்டாமங்கி விஜய் வரதராஜ் கூறுகிறார். வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.

பாவத்தின் சம்பளம்

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை

நான்காவது காட்சி