பதில் சொல்லுங்க ப்ளீஸ் 3 - புதிய மின்னூல் வெளியீடு

 
பதில் சொல்லுங்க ப்ளீஸ் 3, தொடர்வரிசை நூலாக வெளிவருவது திட்டமிடாத ஒன்று. இந்த நூலில் தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு வேடிக்கையான கேள்வி பதில்கள் உள்ளன. அதை ஒருவர் வாசிக்கும்போது, அதற்கான அறிவியல் விளக்கத்தை எளிதாக புரிந்துகொள்ள முடியும். 

கேள்வி பதில் என்றாலும் அதன் வடிவம் மூடநம்பிக்கை, அதற்கான அறிவியல் விளக்கம் என்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவரின் மனதில் ஆராயாமல் நம்பும் விஷயத்தை தவறு என்று சொல்ல அறிவியலில் நிச்சயமாக ஆதாரங்கள் தேவைதானே? அந்த அடிப்படையில் அறிவியல் ஆதாரங்கள் எழுதப்பட்டுள்ளன. பிபிசி, நியூ சயின்டிஸ்ட், கார்டியன், டிஸ்கவரி, நியூ சயின்டிஸ்ட், பாப்புலர் சயின்ஸ் என பல்வேறு அறிவியல் இதழ்களிலிருந்து பெறப்பட்ட அறிவியல் தகவல்களின் சேகரம்தான் இது. நூலை வாசியுங்கள். பிடித்திருந்தால் நண்பர்களுக்கும், அறிவியலை நேசிப்போருக்கும் பகிருங்கள்.


நூலைத் தரவிறக்கி வாசிக்க...

https://www.amazon.in/dp/B0BXF3HGTF


அட்டைப்படம் 

பின்டிரெஸ்ட் 

வடிவமைப்பு 

AU STUDIO

கருத்துகள்