16. நிலக்கரி மதிப்பை உயர்த்திக்காட்டி, மின்கட்டணத்தை ஏற்றிய அதானி - மோசடி மன்னன் அதானி

 


மின் நிறுவனங்களின்கொண்டாட்டம் 

அரசும், அதானி குழுமமும்

விசாரணையின்போது அரசு...
அதானி குழுமம் மீது போடப்பட்ட வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகத்தின் வழக்கு விசாரணை, அந்த அமைப்பின் அதிகாரிகளாலேயே நிறுத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டு இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விசாரணையில் கிடைத்த உண்மையான ஆதாரங்களை புறக்கணித்து அதானி குழுமத்தின் மின் உற்பத்தி சார்ந்த பொருட்களை வாங்கியதில் எந்த மோசடியுமில்லை என கூறப்பட்டது. முழுமையான ஆதாரம் கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறினர்.

‘’இஐஎஃப், ஏபிஆர்எல் ஆகிய நிறுவனங்கள் வினோத் அதானிக்கு தொடர்புடையவை என்றாலும் அதன் மதிப்பு, விலை என்பது பாதிக்கப்படவில்லை. பொருட்களின் விலை மதிப்பு ஏற்றம் பற்றிய குற்றச்சாட்டு எழுந்தாலும் அது உண்மையல்ல’’ (ப.278) என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
வழக்கில் தொடர்புடைய, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். (ப.279) வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகத்தின் மற்றொரு பிரிவு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். ஆனால் மேல்முறையீடு அமைப்பான செஸ்டாட், அதானி குழுமத்திற்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்று தீர்மானமாக கூறிவிட்டது. (ப.87)

 அப்போது ஆட்சியில் இருந்த அரசு, அதானி குழுமத்தை சட்டவிசாரணையிலிருந்து காப்பாற்றியதாக கூறப்ப்படது.  காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் இதுபற்றி பேசினார்.

‘’அதானி குழுமம் எப்போது விசாரணையில் சிக்கினாலும், ஆபத்தில் இருந்தாலும் மத்திய அரசு உடனே விசாரணையை நிறுத்தி காப்பாற்றுகிறது. புலனாய்வு ஆணையகம் செய்த மின் உற்பத்திப் பொருள் இறக்குமதி பற்றிய விசாரணை இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே, விசாரணை ஒத்திப்போடப்பட்டு நிலுவையில் உள்ளது’’ என்று கூறினார்.  

விசாரணைக் காலம் 2011-20116

2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகம் மோசடி செய்த நாற்பது நிறுவனங்களைப் பற்றிய ஆவணத்தை தயாரித்தது. இதில் அதானி குழுமத்தின் ஐந்து நிறுவனங்கள் சிக்கின. மேலும் குழுமத்தின் ஐந்து நிறுவனங்கள் நிலக்கரியை வாங்கி அதன் மதிப்பை போலியாக அதிகரித்து விற்ற விவகாரத்தில் மாட்டின. (ப.1,4)

‘’வெளிநாடுகளுக்கு நிதியைக் கொண்டு செல்வது, ஊதிப் பெருக்கப்பட்ட மதிப்பு அடிப்படையில் மின் கட்டணத்தை உருவாக்குவது என இருமடங்காக மதிப்பு கூட்டப்படுவது கூறப்பட்டிருந்தது’’ (ப.1) என ஆவணத்தில் கூறப்பட்டிருந்தது.

அரசு அமைப்பால் அதானி குழுமத்தின் 1,300 நிலக்கரி பரிவர்த்தனைகள் விசாரிக்கப்பட்டன என ஊடகங்கள் தகவல் தருகின்றன.

‘’ஆய்வில் பொருட்களின் மதிப்பு 50 தொடங்கி 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருந்தது’’ (ப.2) என ஆவணம் தகவல் தருகிறது.

நிலக்கரியை ஆய்வு செய்ததில் அதிக தரம் என்று ஆய்வகத்தில் போலியாக கூறியிருப்பதும் தெரிய வந்தது. (ப.2) நிலக்கரியை வெட்டி ஏற்றுமதி செய்து விற்ற மதிப்பு 4.43 பில்லியனுக்கும் அதிகம் (2015-15படி) என ஊடகங்கள் மதிப்பிட்டன.  இதை அடிப்படையாக கொண்டு அதானி குழுமம், மக்களுக்கான மின் கட்டணங்களை உயர்த்தியதாக கூறமுடியாது. உண்மையில் ஏற்றுமதியான நிலக்கரியின் மதிப்பு 7.6  பில்லியன் டாலர்களாக இருக்கலாம்.

இதற்கடுத்த ஊழலாக, நிலக்கரியை இந்தோனேஷியாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்தது கூறப்படுகிறது. நேரடியாக சரக்கை இறக்குமதி செய்தாலும் இடையில் பல்வேறு நாடுகளிலுள்ள முகவர்கள் (சிங்கப்பூர், துபாய், ஹாங்காங், பிரிட்டிஷ் வர்ஜின் தீவு) தொடர்புள்ளதாக கருதப்பட்டது. (ப.1)

இதுதொடர்பான வழக்கு விசாரணையும் பலமுறை தடைபட்டு தாமதப்படுத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டு, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நீதித்துறை அனுமதி பெற வேண்டிருந்ததால், வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகத்தின் முயற்சி மீண்டும் தடைபட்டது.

2020ஆம் ஆண்டு, டிஆர்ஐ தனது வழக்கைத் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது. வெளிநாட்டு விசாரணை அமைப்புகளின் ஒத்துழைப்பைக் கேட்டது. அந்த அமைப்புகளின் பதிலுக்காக காத்திருந்தது. நிலக்கரி விலை அதிகரித்து விட்டதால் அதை காரணமாக வைத்து மின்கட்டணத்தை உயர்த்த அதானி குழுமத்தோடு மற்ற மின் உற்பத்தி நிறுவனங்களும் இணைந்தனர். இந்த நிறுவனங்கள் மக்கள் செலுத்தும் மின்கட்டணத்தை அதிகமாக உயர்த்திக்கொண்டனர்.  

ஆனால், 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உயர்த்திய மின்கட்டண உயர்வை நிறுத்திவைத்தது. அப்போது அதானி குழும மதிப்பு 3.5 பில்லியன் டாலர்களாக இருந்தது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம், ராஜஸ்தான் மின் உற்பத்தி நிறுவனத்திடம், இந்தோனேஷியாவிலிருந்து தரம் உயர்ந்த நிலக்கரியை இறக்குமதி செய்தததற்கான நிலுவைத் தொகையை வழங்க கூறியது. 2013ஆம் ஆண்டு தொடங்கி 2014 வரை அதானி குழுமத்திற்கு வரவேண்டிய தொகையாக 60 பில்லியன் டாலர்களைக் குறிப்பிடுகிறார்கள். இதுபற்றி அதானி பவர் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ப.88)

அதானி குழுமத்திற்கு, ராஜஸ்தான் மாநில அரசுடன் ஏற்பட்ட சண்டையில் நிதி சார்ந்த வெற்றியாக உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கொள்ளலாம். ஆனால், அதிக விலைமதிப்பு கொண்ட விவகாரத்தில் அதானி குழுமம் முழுமையாக விடுபடவில்லை.

2020ஆம் ஆண்டு அதானி குழுமத்திற்கும் ராஜஸ்தான் மின்வாரியத்திற்கும் சட்டரீதியான வழக்குகள் நடைபெற்று வந்தன. டிஆர்ஐ வழக்கு நடந்து வருவதால், இப்போதைக்கு இந்தோனேஷிய நிலக்கரி பற்றி இறுதியான முடிவுக்கு வரமுடியாது என்று கூறிவிட்டது.

அதானி குழுமத்தில் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் தொடர்பான முறைகேடுகளுக்கான விசாரணைகள் நடந்துகொண்டே இருந்தன. மோசடியான நடவடிக்கைகள் குழுமத்தில்  தொடர்ந்து நிற்காமல் நடந்துகொண்டே இருந்தன.
2019ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட அதானி ட்ரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் துணை நிறுவனம்,,  நிலக்கரியை வாங்க முடிவு செய்தது. நிலக்கரி விற்பனை நிறுவனங்களிடம் அதற்கான விலையைக் கேட்டது. இறுதியில் பான் ஆசியா கோல் ட்ரேடிங் என்ற நிறுவனத்தை நிலக்கரியை வாங்குவதற்காக தேர்ந்தெடுத்தனர்.

ஹிண்டன்பர்க் அமைப்பு, பான் ஆசியா கோல் ட்ரேடிங் நிறுவனத்தை சோதித்தது. பிற நிலக்கரி விற்பனையாளர்களை விட ஆறு சதவீதம் குறைவான விலை என்பது யோசிக்க வைப்பதாக இருந்தது. பான் ஆசியா கோல் ட்ரேடிங் என்பது, உலக சந்தையில் அவ்வப்போது நிலக்கரியை வாங்கி விற்கும் வல்லுநர்களைக் கொண்டது என தெரிய வந்தது. ஆனால், அதன் வலைத்தளத்தில் தொடர்புடைய ஒரு நபரின் பெயரைக் கூட பார்க்க முடியவில்லை.

நிலக்கரி விற்பனை என்ற இடத்தில், விரைவில் என்ற வார்த்தை மட்டுமே இருந்தது. சிங்கப்பூர் நாட்டு பெருநிறுவன ஆவணங்களின்படி, நிறுவனத்தின் தலைவர், பங்குதாரர் என சேத்தன் குமார் த/பெ, முல்சந்த் அம்பாலால் பரிக் என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் அதானி வில்மர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்தான் சேத்தன் குமார்.லிப்ரா ஷிப்பிங் பிடிஇ எனும் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனத்தின் முன்னால் தலைவர், சேத்தன் குமார். இதுபற்றிய தகவலை 2008ஆம் ஆண்டு அதானி என்டர்பிரைசஸ் மற்றும் சிங்கப்பூர் பெருநிறுவன ஆவணங்களும் தெரிவிக்கின்றன. (ப.18)

2019ஆம் ஆண்டு பான் ஆசியா கோல் ட்ரேடிங் நிறுவனம், 30 மில்லியன் டாலர்களை அதானி குழுமத்தின் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கடனாக வழங்கியுள்ளது. இதுபற்றிய தகவலை சிங்கப்பூர் பெருநிறுவன ஆவணங்கள் தெரிவிக்கின்றன. (ப.30-31,34) வினோத் அதானிதான் கடன்பெற்ற தனியார் நிறுவனத்தின் தலைவர். பிரிட்டிஷ் தீவில் உள்ள அந்த நிறுவனத்தை, அதானி குடும்ப அறக்கட்டளை கட்டுப்படுத்துகிறது. (ப.3, 30)

2021ஆம் ஆண்டு பான் ஆசியா நிறுவனம், 10 மில்லியன் டாலர்களை கடனாக அதானி குழும தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது. அதானி குழுமம், தனது நிறுவனங்கள் மூலமாகவே பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலிருந்து நிதியைப் பெற்று வணிகம் செய்திருப்பதோடு, போலியாக உயர்த்திய மதிப்பின்படி மக்களிடம் அநியாய மின் கட்டணத்தையும் பெற்றிருக்கிறது.

 நன்றி 

திரு.இரா.முருகானந்தம்

டெனர்.காம்கருத்துகள்