இடுகைகள்

வெற்றி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நவம்பரில் வெளியீடு....

படம்
புதிய மின்னூல் வெளியீடு....

காதல் மீட்டர் - சமரசம் செய்து காதலிக்கலாமா?

படம்
  காதல் மீட்டர்  4 இன்று பல்வேறு கலாசாரங்களை சேர்ந்தவர்கள் காதலால் வேறுபாடுகளை மறக்கிறார்கள். ஒன்றாக சேர்கிறார்கள். எனவே, நீங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. எந்தளவு திறந்த மனது கொண்டவராக இருக்கிறீர்கள், நடந்துகொள்கிறீர்கள் என்பதே முக்கியம். இணையர்கள் சமூகத்திற்கு எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவர்களுடைய வாழ்வை முழுமையான திருப்தியோடு வாழ்ந்தால் போதும்.  டேட்டிங் செல்பவர்கள், திருமண வாழ்க்கைக்கு அந்த செயல்பாடு கூட்டிச்செல்லும் என ஈடுபடலாம். சிலர், அதில் பாலுறவிலும் கூட ஈடுபடுகிறார்கள். இதெல்லாம் சரியானதா இல்லையா என்றால் அதை தனிப்பட்ட இருநபர்கள்தான் முடிவு செய்யவேண்டும். இங்கு நான் பல்வேறு ஆலோசனைகளை அறிவுறுத்தல்களைக் கூறலாம். அவற்றை நீங்கள் பகுத்தாய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளலாம். அல்லது மறுக்கலாம். ஒருவர் கூறும் அறிவரையை அப்படியே நம்புவதும் தவறு. தன்னுடைய அறிவை முழுக்க புறக்கணிப்பதும் அழிவையே கொண்டு வரும்.  சமரசம் செய்துகொண்டால் சமாதான வாழ்க்கை என்று சில பழம்பெருச்சாளிகள் அறிவுரை கூறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை தரம், விதிகள் என எதிலும் பின்வ...

ஒரு துறையில் வெற்றி பெற்றவர்களை மக்கள் நம்புவது ஏன்?

படம்
  psychology  mr roni ஜான் வெய்ன் கேசி, ஜெப்ரி டாமர் ஆகிய தொடர் கொலைகாரர்களின் உளவியல் என்ன? குற்றச்சம்பவங்கள் பத்திரிகையில் சிறப்பாக விற்பதால், அதை பிரசுரித்து விற்க நாளிதழ்கள், டிவிகள் போட்டி போடுகின்றன. அந்த வகையில் பிரபலமானவர்கள்தான் மேலேயுள்ள இரு தொடர் கொலைகாரர்களும். கேசி எழுபதுகளில் பிரபலமானவர். டாமர் தொண்ணூறுகளில் பேசப்பட்ட ஆள். கேசி, பாலியல் ரீதியான முப்பது ஆண்களை தாக்கி கொன்றார். அவர் குழந்தை போல ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார். அவரின் ஆளுமையில் இரண்டு பக்கங்கள் இருந்தன. ஒன்று குழந்தை போல ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பது. இரண்டாவது, கொடூரமான கொலைகாரர். டாமர் ஒரு குடிநோயாளி. உளவியல் ரீதியாக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தார். இளம் வயதில் பாலியல் ரீதியான பாதிக்கப்பட்டிருந்தார். டாமர், கேசி ஆகியோர் இருவருமே சிறையில் இருக்கும்போது இறந்துவிட்டனர்.  கெல்லி மைக்கேல் வழக்கு பற்றி தெரியுமா? சிறுவர்களை பாலியல் ரீதியாக சுரண்டிய நர்சரி பள்ளி ஆசிரியர். எண்பது, தொண்ணூறுகளில் கெல்லி பற்றிய விவகாரம் வெளியே வந்தது. அவர் வேலை செய்ய பள்ளியில் 115 புகார்கள், பாலியல் சுரண்டல் தொடர்பாக வ...

இணையத்தை மையமாக கொண்டு தொடங்கும் வணிகத்தில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்!

படம்
  40 ரூல்ஸ் ஃபார் இன்டர்நெட் பிசினஸ் மேத்யூ பால்சன்  கட்டுரை நூல்  ஆங்கிலம் இன்று பெரும்பாலான வணிகம், ஸ்டார்ட்அப்பாக இணையத்தில் தொடங்கப்படுகிறது. முதலீடு பெற்று வளர்ந்தால் அதை பாரம்பரிய வணிகம் போல இடம் பிடித்து அலுவலகம் திறந்து பெரிதாக்குகிறார்கள். ஆனால், இணைய நிறுவனங்கள் வளர்வது முழுக்க வேறுவிதமாக உள்ளது. அலிபாபாவை எடுத்துக்கொள்ளுங்கள். அமேசானின் வணிகத்தைப் போன்று இயங்கும் நிறுவனம். சீனாவில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் உருவாக்கிய மாற்றங்களும் அசாதாரணமானவை. தனது வணிகத்திற்கான அடிப்படை நிதி கட்டமைப்பையே ஒரு நிறுவனம் உருவாக்கி சந்தையைப் பிடிப்பது சாதாரண விஷயமல்ல.  இன்று இணையத்தில் மட்டுமே  ஸ்மார்ட்போன்கள் முதலில் விற்கப்பட்டு பிறகு கடைகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்த வகையில் மக்கள் ஆன்லைனில்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு 9 டு 5 வேலை பிடிக்காமல் போய் ஆன்லைன் வணிகம் தொடங்கினால் அதை எப்படி நடத்துவது, வெற்றி பெறுவது, புகார் கொடுப்பவர்களை சமாளிப்பது, நல்ல வாடிக்கையாளர்களை காப்பாற்றிக்கொள்வது ஆகியவற்றை எப்படி செய்வது என நூலாசிரியர் விரிவாக விளக...

சீனாவில் சாதித்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வெற்றிக்கதை!

 சீனா டிஸ்ட்ரப்டர்ஸ்  சீன டெக் நிறுவனங்களின் கதை கட்டுரை நூல் இந்த ஆங்கில நூல், மேற்குலகு கொண்டிருக்கும் சீனா மீதான மூடநம்பிக்கைகளுக்கு சவால் விடுகிறது. சீன பொருள் என்றால் மட்டமானது. நிறுவனம் என்றால் மோசடி செய்யக்கூடியது என வலுவான பிரசாரத்தை செய்துவருகிறார்கள். அதை உடைத்து வரும் முக்கியமான நிறுவனங்களான அலிபாபா, டென்சென்ட், ஹூவெய், ஷாவ்மி, ஹெங்கன், லெனோவோ, ஹெயர் ஆகிய நிறுவனங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது.  வணிக நிறுவனங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், சீனாவில் உள்ள அரசியல், அதற்கு டெக் நிறுவனங்கள் செய்துகொள்ள வேண்டிய சமரசம் பற்றியும் பேசியுள்ள நூல் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. வணிக ரீதியான விஷயங்களோடு அரசியலும் பின்னிப்பிணைந்துள்ளது. அப்படியல்லாமல் சீனாவில் எந்த வணிக நிறுவனமும் வளர முடியாது. அந்த வகையில் அலிபாபா, ஹூவெய் ஆகிய நிறுவனங்கள் முன்னிலை பெறுகின்றன. அலிபாபா உள்நாட்டில் சிறப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஹூவெய் உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் தனது செயல்திறனை நிரூபித்துள்ளது. அதைபற்றி விவரிக்கும் பகுதி சுவாரசியமாக உள்ளது. இன்று அந்த சீன நிறுவனத்திற்கு ஒரே...

ஹெயர் வெற்றிக்கதை!

படம்
  ஹெயர் வெற்றிக்கதை 1949ஆம் ஆண்டு பிறந்தவர் ஸான் ருய்மின். இவர் பிறந்த ஆண்டில்தான் சீனாவில் மக்கள் சீன குடியரசு உருவானது. இவர் வளர்ந்து வந்த காலத்தில்தான் சீனாவில் கலாசார புரட்சி, மிகப்பெரிய முன்னேற்ற பாய்ச்சல் நடவடிக்கைகள் நடைபெற்றன. இவை அவரின் கல்வி, சமூகத்தைப் பார்க்கும் பார்வை ஆகியவற்றை பாதித்திருக்கலாம்.  ருய்மினுக்கு நிறுவனத்தை நடத்தும் மேலாண்மை திறன் எப்படி வந்தது என ஒருவர் சந்தேகம் கொள்ளலாம். அவருக்கு இந்த வகையில் ஆதர்சம், ஜப்பானிய நூல்கள். ஜப்பானிய மேலாண்மை நூல்களை படித்தே தனது நிர்வாக அறிவை பெருமளவு வளர்த்துக்கொண்டார். அவையெல்லாம் குயிங்டாவோ குளிர்பதனப்பெட்டி தொழிற்சாலைக்கு அரசு அனுப்பி பணியாற்றச் சொன்னபோது பயன்பட்டது. தொடக்கத்தில் அங்கு ருய்மின் சென்றபோது, குளிர்பதனப்பெட்டிகளை தயாரித்தாலும் அதில் நிறைய தவறுகள் இருந்தன. மோசமான வடிவமைப்பு காரணமாக அதை குறைந்த விலைக்கு மக்களுக்கு விற்றனர். மக்களுக்கு அதை வாங்கினாலும், குளிர்பதனப்பெட்டி அடிக்கடி பழுதானதால், விரக்தி அடைந்தனர்.  ருய்மின், தொழிலாளர்களிடம் குளிர்பதனப்பெட்டி பற்றி கேட்டார். செய்யும் போது பிழை ஏற்பட்டாலும...

வேலை சார்ந்த மூடநம்பிக்கைகளை ஒழித்துக்கட்டி வெற்றி பெறுவது எப்படி?

படம்
  ரீவொர்க் 37 சிக்னல்ஸ் நிறுவனர்கள் சுயமுன்னேற்ற நூல் ஒரு தொழிலை எப்படி நடத்துவது, அதற்கான தகுதிகள், விளம்பரம் செய்வது, வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது என ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் சுவாரசியமாக கூறியிருக்கிற நூல்தான் ரீவொர்க்.  நூலில் நிறைய மூடநம்பிக்கைகளை உடைத்து எறிந்திருக்கிறார்கள். பொதுவாக நம்பும் பழக்க வழக்கங்கள்தான் அவை. குறிப்பாக, நிறுவனத்தை பெரிய நிறுவனமாக்கவேண்டும் என்ற கருத்து. அப்படி செய்யும்போது என்னென்ன பிரச்னைகளை வருகிறது என சுருக்கமாக விவரித்த பாங்கு அருமை. அடுத்து, திட்டமிடுதல். அப்படி திட்டமிடுதல் கடந்த காலத்தில்தான் இருக்கும். நடைமுறைக்கு எதிர்காலத்தில் வரும் பிரச்னைகளை தீர்க்க உதவாது என அழகாக சுருக்கமாக விளக்கியிருக்கிறார்கள்.  மென்பொருளை உருவாக்கும்போது உணர்ந்த அனுபவங்களையே நூலாக எழுதியிருக்கிறார்கள். நூல்களை எழுத வேண்டுமென எழுதவில்லை என்பது இன்னும் ஆச்சரியம் தருகிறது. இதுபற்றி அவர்களே தனி அத்தியாயம் ஒன்றை எழுதி விளக்கியுள்ளனர். வாய்ப்பு கிடைப்போர் படியுங்கள். சுவாரசியமாக இருக்கும்.  பொதுவாக தொழில் சார்ந்த அறிவுரைகளை படித்தவர்கள், இந்த நூலை ...

நம் அருகில் வசிப்பவர்களின் பொருளாதார வெற்றி, நம்மை பாதிக்குமா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மகிழ்ச்சியை தீர்மானிப்பது எது? லாட்டரியில் பணம் கிடைப்பது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி எதுவரை உங்களுக்கு இருக்கும். உங்களைத் தேடி பணம் கேட்டு உறவுகள், நண்பர்கள் வரும்வரை மட்டும்தான். அதேசமயம், விபத்துகள் துரதிருஷ்டங்களை சந்திக்கிற மனிதர்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். அவர்களாக எதையும் தேடுவது என்றில்லை. அதுவாகவே கூட அவர்களைத் தேடி வந்து போட்டுத்தாக்கும். மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவில் ஆரஞ்சுகளோடு சென்று பார்க்கும் நிலையில் ஆண்டு முழுவதும் இருப்பார்கள். இப்படி வாழ்க்கை போட்டு சக்கையாக பிழிந்துகொண்டிருக்க மனதில் மகிழ்ச்சி இருக்குமா என்றால், இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் பிலிப் பிரிக்மன், டான் கோட்ஸஃ, ரோனி ஜேன் ஆப் புல்மன் ஆகியோர் 1978ஆம் ஆண்டு செய்த ஆய்வில் அடையாளம் கண்டுள்ளனர். லாட்டரி விழுந்தவருக்கு எதிர்காலம் பற்றிய மகிழ்ச்சி உள்ளது. விபத்துக்குள்ளானவருக்கு நிகழ்காலம் நரகம்தான். ஆனால் கடந்த காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தோம் என யோசித்தார்.  இதெல்லாம் மனம் தொடர்பானது. மும்பையில் பார்ப்பன முதல்வர், மக்களின் பிரச்னைகளை கவனிக்காமல...

நம்பிக்கையூட்டும் ஸ்டார்ட்அப்கள்

படம்
          நம்பிக்கையூட்டும் ஸ்டார்ட்அப்கள் ஏரோஸ்ட்ரோவிலோஸ் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், மைக்ரோ கேஸ் டர்பைன்களைத் தயாரித்து வருகிறது. கழிவுப்பொருட்களில் இருந்து கிடைக்கும் பல்வேறு வித எரிபொருட்களை கேஸ் டர்பைன்கள் பயன்படுத்தி இயங்குவதாக வடிவமைத்துள்ளனர். வாகனத்துறைக்கான டர்பன்களைத் தயாரித்த நிறுவனம், பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. தற்போது ஜெனரேட்டர்களுக்கான பகுதிப்பொருட்களைத் தயாரித்து வருகிறது. 2017ஆம் ஆண்டு சென்னையில் உருவாக்கப்பட்ட ஏரோஸ்ட்ரோவிலோஸ், மைக்ரோ கேஸ் டர்பைன்களை தயாரித்து வருகிறது. இதன் நிறுவனர்கள், ரோகித் குரோவர், பிரதீப் தங்கப்பன்,சத்யநாராயணன் சக்ரவர்த்தி. பெற்ற முதலீடு, 0.5 மில்லியன் டாலர்கள். பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் 2015ஆம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. நிறுவனர்கள், ரோகன் கணபதி, யாஸ்காஸ் கரணம், விண்வெளி போக்குவரத்து, விண்வெளி டாக்சி ஆகிய பிரிவுகளில் கவனம் செலுத்துகிறார்கள். தற்போது வரை 11.3 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றிருக்கிறார்கள். 2024ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இதழ் தலைமைத்துவ விருதை வென்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் இது.  கடந்த...

விரைவில்...அமேசான் வலைத்தளத்தில் ---- பச்சை சிவப்பு பச்சை - தீரன் சகாயமுத்து

படம்
       

தோல்வி அடைந்தாலும் வெற்றியை பெற சிம்பன்சிகள் செய்த முயற்சி!

படம்
  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்,ஜெர்மனியைச் சேர்ந்த உளவியலாளர்கள் பழைய உளவியல் கோட்பாடுகள் பற்றி சந்தேகத்தை எழுப்பினார்கள். இவர்கள் புனித தன்மை கொண்ட அறிவியல் முறையிலான நிரூபணம் செய்யப்பட்ட சோதனை முறைகளை மட்டுமே நம்பினார். இதை கெஸ்சால்ட் என்று அழைத்தனர். இந்த முறையை வோல்ஃப்கேங் கோஹ்லர், மேக்ஸ் வெர்தீமர், கர்ட் காஃப்கா ஆகியோர் உருவாக்கி செயல்படுத்தினர். இதற்கும் கெஸ்சால்ட் தெரபிக்கும் குழப்பிக்கொள்ள வேண்டாம். இதை கெஸ்சால்ட் சைக்காலஜி என்று குறிப்பிட்டனர். இதில் பார்வைக்கோணம், கற்றல், அறிவாற்றல் ஆகிய அம்சங்கள் முக்கியமானவையாக கருதப்பட்டன.  உளவியலில் குண இயல்புகள் பற்றிய பிரிவை மிகவும் எளிமையானதாக இயற்கையின் கோணத்தில் மாறும் இயல்புடையதாக கருதுகின்றனர் என கோஹ்லர் கருத்து கொண்டிருந்தார். இவர், ஆந்த்ரோபாய்ட் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான பிறகு, தான் நம்பிய கொள்கைகளை அங்கு சிம்பன்சிகளை வைத்துசோதித்தார். சிம்பன்சிகளை கூண்டில் அடைத்து அதன் முன்னர் உணவை வைத்து அதை அடையும் வழிகளை சிக்கலாக்கிவிட்டார். முதலில் உணவை எளிதாக பெற முடியாமல் சிம்பன்சிகள் திணறின என்பது உண்மைதான். ஆனால் பிறகு ...

மக்களுக்கு நேரும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது அநீதி! கோக்கோ காஃப்

படம்
      கோக்கோ காஃப் கோகோ காஃப், அமெரிக்க டென்னிஸ் வீரர் மக்களுக்கு நேரும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது அநீதி! இப்படி சொன்னது யாராக இருக்கும் என நினைக்கிறீர்கள்? மதவாத கும்பலால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மனித உரிமை போராளி என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் இந்த கட்டுரையில் வாய்ப்பில்லை. அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் வாழும் வளரும் டென்னிஸ் நட்சத்திர வீரரான கோகோ காஃப்தான், மேலே தலைப்பில் உள்ளதை சொன்னவர். கோகோவுக்கு வயது பத்தொன்பதுதான். இப்போதே அவர் கறுப்பின மக்களுக்கான போராட்டம், துப்பாக்கிச்சூடுகளுக்கு எதிரான செயல்பாடு என்ன குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார். டென்னிஸ் வீரர், தனது விளையாட்டை ஒழுங்காக   அமைதியாக விளையாடினால் போதும் என்று சிலர் கூறியதற்கு , அதை அநீதி என்று கூறும் துணிச்சலும் மனதிடமும் கோகோவுக்கு உண்டு. அவரது பாட்டி, 1961ஆம் ஆண்டு பள்ளியில் படித்தபோது பேஸ்கட்பால் வீரராக இருந்தார். ஆனால் பள்ளியில் படித்த ஒரே கறுப்பின பெண் அவர்தான் என்பதால், விதிகள் கேள்விகள் அதிகம் இருந்தன. இனவெறியின் உச்சமாக அவர் கழிவறையைப் பயன...

உங்களை தலைவராக்கும் விதிகளைக் கொண்ட நூல்!

படம்
  21 இர் ரெப்யூடபிள் லாஸ் ஆஃப் லீடர்ஷிப் ஜான் சி மேக்ஸ்வெல் 336 பக்கம் ஹார்ப்பர் கோலின்ஸ்   தலைமைத்துவத்தை ஒருவர் எப்படி வளர்த்துக்கொள்வது என்பதை ஏராளமான அமெரிக்க நாட்டு உதாரணங்களோடு எழுத்தாளர் எழுதி விளக்கியுள்ளார். பிறரது வாழ்க்கை அனுபவங்களோடு, தான் தேவாலயத்தில் பாதிரியாக பொறுப்பேற்று செயல்பட்டபோது செய்த சரி, தவறு, அதனால் நேர்ந்த விளைவுகள் அனைத்தையும் தான் பேசும் தலைமைத்துவ மையப்பொருளுக்கு இணைத்திருக்கிறார். நூலில் இந்தியாவைப் பற்றி மோசமான விவரிப்புதான் உள்ளது. அதைப்பற்றி பெரிதாக கவலைப்பட ஏதுமில்லை. காந்தி, இந்தியா போன்ற ஒரு தேசத்தில் சுதந்திரம் பெற்றுத்தர எப்படி உழைத்தார், மக்களை தொடர்புகொண்டார் என்பதை சிறப்பாக விளக்கியுள்ளார். ஒரு நிறுவனத்தில் ஊழியர்களின் நம்பிக்கையைப் பெறுவது, எதிர்ப்புகளை வெல்வது, பிறருக்கு உதாரணமாக முன்னே நின்று தடைகளை எதிர்கொள்வது, எதிரிகளை வெல்வது, தொலைநோக்காக யோசிப்பது, நெருக்கடியில் வேகமாக சிந்தித்து செயல்படுவது என ஏராளமான விஷயங்களை உதாரணங்களுடன் மெல்ல விவரித்து எழுதியிருக்கிறார். சில இடங்களில் எழுத்தாளர் தான் நடத்தும் பயிற்சி வகுப்பு ...

சரியான கட்சியை வழிநடத்திச் சென்ற சரியான மனிதர்தான் வாஜ்பாய் - எழுத்தாளர் அபிஷேக் சௌத்ரி

படம்
  வாஜ்பாய் பற்றிய நூல்   வாஜ்பாய் தி அசன்ட் ஆஃப் தி இந்து ரைட் 1924-1977 அபிஷேக் சௌத்ரி பிகாடர் இந்தியா விலை ரூ.899 வாஜ்பாய் பற்றிய புதிய சுயசரிதை நூல் வெளியாகியுள்ளது. இதில், பழமைவாதம், தாராளவாதம் ஆகிய இருவித கருத்தியல்களைக் கொண்ட காலத்தில் பிரதமராக இருந்த வாஜ்பாய் பற்றிய பல்வேறு கருத்துகளை விவாதித்திருக்கிறார்கள். காங்கிரசும், சங் பரிவாரும் ஒரே மாதிரியாக இணைந்து கருத்தியல் அளவில் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என நூலாசிரியர் அபிஷேக் கூறுகிறார். அதைப்பற்றிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வாசிப்போம். “தவறான கட்சியில் இடம்பெற்ற சரியான மனிதர்” என வாஜ்பாயை கூறுகிறார்களே? அந்தக் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லை. சரியான கட்சியில் இருந்த   சரியான மனிதர் என்றுதான் அவரைக் கூறுவேன். அதுமட்டுமல்ல, அவர்தான் கட்சியை முன்னெடுத்துச் சென்றார். 1980ஆம் ஆண்டு ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தபோது தவறான கட்சியில் இருந்த சரியான மனிதர் என்ற சுலோகன் பிரபலமாக கூறப்பட்டு வந்தது. அந்த சுலோகன் கூறப்பட காரணம் என்ன? இங்கிலாந்தில் வெளியிடப்படும் எனது நூலின் தலைப்பு ...

கிரியேட்டிவிட்டி பற்றி சாதனையாளர்கள் கூறும் கருத்துகள்!

படம்
  கிரியேட்டிவிட்டி பற்றி பிரபலங்கள் கூறிய கருத்துகள்… உங்களின் உள்ளுணர்வை நம்புங்கள். நான் பிறர் கூறுவதை கவனமாக கேட்பேன். ஆனால் நாளின் இறுதியில், என்னுடைய   முடிவை   நானே தீர்மானிப்பேன். இப்படி செயல்படுவது, பின்னாளில் நீங்கள் உருவாக்காத முடிவுக்காக வருத்தப்படுவதை விட சிறந்ததுதான். -உடை வடிவமைப்பாளர் பீட்டர் டூ சில சமயங்களில் நமக்குள்ளிருந்து இயற்கையாக, வேகமாக வெளியே வரும் விஷயங்களை சிறந்த படைப்பு என கொள்ளலாம். அதுதான் உங்களுக்கு கிடைத்த பரிசு. அதை நம்புங்கள். -பத்திரிகையாளர் ஜோ ஹோல்டர் உங்களின் உள்ளுணர்வை நம்பி சவால்களை எதிர்கொள்ளுங்கள். அது அன்றைய சூழலுக்கு எதிராக கூட இருக்கலாம்.   பரவாயில்லை. நீங்கள் வேலை செய்யும் முறையைக் கவனியுங்கள். அங்குதான் உண்மையான மாயம் நடக்கிறது. வேலையின் முடிவை விட அதன் செயல்முறையில் கவனம் வைத்தால் நாம் இலக்கை நோக்கிய பயணத்தை விரைவில் அடையும் வழிகள் கிடைக்கும். -யூரி சோய், துணை நிறுவனர், சவில் ரோ டெய்லர் யூரி அண்ட் யூரி உங்கள் உள்ளுணர்வை ஓட்டியிருங்கள். நான் ஆராய்ச்சி செய்யும்போது சுதந்திரமாக அதை செய்யும்போதுதான் சிறப்பாக இ...

கிரியேட்டிவிட்டியை அடையாளம் காண்பது எப்படி? - சில அறிவுறுத்தல்கள்....

படம்
  புதுமைத்திறன் உலகம் கிரியேட்டிவிட்டியை உருவாக்கிட பிறருக்கு தெரியாத கலை வடிவம் ஏதும் கிடையாது என எழுத்தாளர் ரிக் ரூபின் கூறுகிறார். இவர் இதுபற்றி, தி கிரியேட்டிவ் ஆக்ட் – எ வே ஆஃப் பீயிங் என்ற நூலை எழுதியிருக்கிறார்.’’ நீங்கள் கிரியேட்டிவிட்டியை நாடகம் போல எடுத்துக்கொண்டு முன்னேறி செல்லுங்கள். நிஜ உலகைப் போலவே அனைத்து விஷயங்களையும் உருவாக்குங்கள். அது சிறியதாக அல்லது   வினோதமாக கூட இருக்கலாம். புதிய பரிசோதனை முயற்சிகளை செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் உருவாக்கியதை காட்ட நினைத்தால் உலகில் அதை வெளியிடலாம்.’’ என்பது இவரது கருத்து. தனி பார்வை ‘’உங்களுக்கென தனி பார்வையை உருவாக்கிக்கொள்ளுங்கள்’’ என ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் கூறுகிறார். இவர் 50 திரைப்படங்களைப் பார்த்து அதன் வழியாக தனக்கான கிரியேட்டிவிட்டி பாதையை உருவாக்கிக்கொண்டார். தன்னை வழிநடத்திய திரைப்படங்களாக எ பியூட்டிஃபுல் மைண்ட் தொடங்கி 1917 என்ற திரைப்படங்கள் வரை குறிப்பிடுகிறார்.’’யாரையும் நகல் செய்யாதீர்கள்’’ என்றும் குறிப்பிட மறக்கவில்லை. ஆற்றலின் பிரதிபலிப்பு ‘’நான் திரைப்படங்களுக்கான நடிகர...

பயம் ஏற்படுத்தும் மோசமான விளைவுகள் - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி தி ரைட் கைண்ட் ஆஃப் எஜூகேஷன் நூலில் இருந்து… தமிழாக்கம் வெற்றியும் பயமும் பள்ளி, கல்லூரியை நிறைவு செய்பவர்கள் அதுவரை படித்துக்கொண்டிருந்த நூல்களை தூக்கிப் போட்டுவிடுவார்கள். இனிமேல் எதையும் படிக்கவேண்டாம் அல்லது கற்க வேண்டாம் என மனதில் நினைக்கிறார்கள். மீதியுள்ளவர்கள் பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய புத்தகங்களைப் படித்து அறிவுக்கே அடிமையாகிறார்கள். எவ்வளவு நாட்கள் ஒருவர் அறிவைத் தேடுகிறாரோ அந்தளவு அவர் வெற்றியை நோக்கி செல்கிறார். போட்டியிடும் மனப்பான்மை உருவாக, வேகமாக   முன்னே செல்கிறார். இதனால் மக்களுக்கு இடையில் உணவைப் பெறுவதற்கான கடும் போராட்டம் தொடங்குகிறது. வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு என நினைக்கும் வரை நம் மனதிலுள்ள பயத்தை நம்மால் அழிக்க முடியாது. வெற்றி பெறுவதற்கான வேட்கை ஏற்படுவதே தோல்வி பயத்தால்தான். எனவே, இளைஞர்கள் வெற்றி பெறுவதைக் குறிக்கோளாக கொள்ளக் கூடாது. வெற்றி பெறும் நோக்கம் என்பது பல்வேறு வடிவங்களைக் கொண்டது. அது டென்னிஸ் விளையாடும் மைதானம் தொடங்கி தொழில்துறை, அரசியல் என மாறிக்கொண்டே இருக்கும். நாம் அனைவரும் வரிசையில் முதல...

உதயமாகும் பேரரசன் - ஆனந்த் மகிந்திரா - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  ஆனந்த் மகிந்திரா வாகனத்துறையில் வேகமாக முன்னேறி வரும் தொழிலதிபர். தொடக்கத்தில் இரும்பு உற்பத்தி ஆலையாக தொடங்கப்பட்ட மகிந்திரா இன்று 20க்கும் மேற்பட்ட துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. உள்நாடு, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் வருமானத்தை பெருக்கும் பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இதற்கு பின்னால் உள்ளவர்தான், ஆனந்த் மகிந்திரா. ட்விட்டரில் தொடர்ச்சியாக மக்களிடம் உரையாடி அவர்களின் எண்ணங்களை தெரிந்துகொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறார். அவரின் சிந்தனைகள் எப்படியானவை, நோக்கம் என்ன, வெற்றி சூத்திரங்கள் என்ன என்பதை அறிய நீங்கள் இந்த நூலை வாசித்தே ஆகவேண்டும்.. அமேசான் வலைத்தளம் https://www.amazon.in/dp/B0BSLYLGBB