நம் அருகில் வசிப்பவர்களின் பொருளாதார வெற்றி, நம்மை பாதிக்குமா?



 அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

மகிழ்ச்சியை தீர்மானிப்பது எது?

லாட்டரியில் பணம் கிடைப்பது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி எதுவரை உங்களுக்கு இருக்கும். உங்களைத் தேடி பணம் கேட்டு உறவுகள், நண்பர்கள் வரும்வரை மட்டும்தான். அதேசமயம், விபத்துகள் துரதிருஷ்டங்களை சந்திக்கிற மனிதர்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். அவர்களாக எதையும் தேடுவது என்றில்லை. அதுவாகவே கூட அவர்களைத் தேடி வந்து போட்டுத்தாக்கும். மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவில் ஆரஞ்சுகளோடு சென்று பார்க்கும் நிலையில் ஆண்டு முழுவதும் இருப்பார்கள். இப்படி வாழ்க்கை போட்டு சக்கையாக பிழிந்துகொண்டிருக்க மனதில் மகிழ்ச்சி இருக்குமா என்றால், இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் பிலிப் பிரிக்மன், டான் கோட்ஸஃ, ரோனி ஜேன் ஆப் புல்மன் ஆகியோர் 1978ஆம் ஆண்டு செய்த ஆய்வில் அடையாளம் கண்டுள்ளனர். லாட்டரி விழுந்தவருக்கு எதிர்காலம் பற்றிய மகிழ்ச்சி உள்ளது. விபத்துக்குள்ளானவருக்கு நிகழ்காலம் நரகம்தான். ஆனால் கடந்த காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தோம் என யோசித்தார். 

இதெல்லாம் மனம் தொடர்பானது. மும்பையில் பார்ப்பன முதல்வர், மக்களின் பிரச்னைகளை கவனிக்காமல் என்றோ செத்துப்போன சர்வாதிகார இஸ்லாமிய மன்னரின் கல்லறையைத் தோண்டி பழிவாங்கவேண்டும் என துடித்தார் அல்லவா? அதே கதைதான். சிலருக்கு கடந்தகாலத்தில் மகிழ்ச்சி உள்ளது. அப்படி இருந்ததாக நம்புகிறார்கள். சிலருக்கு எதிர்காலத்தில் மகிழ்ச்சி இருப்பது, நிகழ்கால சம்பவங்கள் மூலம் தெரிகிறது. 

நம் அருகில் வசிப்பவர்களின் பொருளாதார வெற்றி, நம்மை பாதிக்குமா?

அதை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும். பணம் இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை. பணம் இருந்தால் நிறைய வசதிகளை உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால், எந்தளவு பணம் இருக்கவேண்டும். தேவை என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். ஒருவர் தார்ச்சு கட்டிடம் கட்டியிருக்கிறார். நீங்கள் ஆஸ்பெஸ்டாஸ் ஓடு போட்டிருக்கிறீர்கள். பிறரின் ஒப்பீடு எப்படியிருக்கும்? உங்களிடம் தார்ச்சு கட்டிடம் கட்டியவர் அளவுக்கு பணம் இல்லையென்று கூறுவார்கள். இப்படியான கருத்து உங்களை பாதிக்குமா என்றால் அது உங்கள் மனவலிமையைப் பொறுத்தது. வெற்றி என்பது காரில் போவதால், மோட்டார் சைக்கிளில் போவதா என ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும் அல்லவா? ஐடி ஆட்கள் வேலை செய்யும் பகுதியில் வீட்டு வாடகை அதிகமாக இருக்கும். பேரங்காடிகள்தான் அதிகம் இருக்கும். இப்படியான சூழலில் நீங்கள் அங்கே வேலையில்லாமல் அல்லது குறைந்த சம்பளத்தில் வேலை செய்துகொண்டு இருந்தால் வாழ்க்கை எளிதாக இருக்காது. 

மகிழ்ச்சியை பாதிக்கும் அல்லதுசெல்வாக்கு செலுத்தும் காரணிகள் என்னென்ன?

மரபணு, நிலப்பரப்பு, மனித உறவுகள், பணம், வாழ்க்கையை அணுகும் முறை, உணர்வுகளின் மீதான கட்டுப்பாடு என இதெல்லாமே உங்களது மகிழ்ச்சியின் மீது தாக்கம் ஏற்படுத்துபவை. ஒருவரின் மரபணுக்கள் பங்கு ஐம்பது சதவீதமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சக ஊழியர்கள், வாழ்க்கைச் சூழல், வருமானம், சமூக அந்தஸ்து, வயது, சாதி, மதம், இனம் ஆகியவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 

வாழ்க்கை சார்ந்த அணுகுமுறையின் பங்களிப்பு என்ன?

வாழ்க்கையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், அணுகுகிறீர்கள் என்பதில் நாற்பது சதவீத மகிழ்ச்சி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. உளவியலாளர் மார்டின் செலிக்மன் பாசிடிவ் சைக்காலஜியில் இதுபற்றி எழுதியிருக்கிறார். மனித உறவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். உறவுகளின் ஆதரவு கிடைத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். மன அழுத்தம், பதற்றம் குறையும், நோய்கள் வருவது குறையும். 

பணம் மகிழ்ச்சியைத் தருமா?

பணம் இருந்தால் நீங்கள் ஒருவருக்கு அதாவது உங்களுக்கு தேவைப்படுகிறவருக்கு பொருளை வாங்கிக் கொடுக்கலாம். அதனால் அவர் மகிழ்ச்சி அடைவார். அது வாங்கிக் கொடுக்கிற உங்களுக்கு மகிழ்ச்சி தரலாம். அடிப்படையில் மகிழ்ச்சி என்பது பிறருடன் ஒன்றை பகிர்ந்து கொள்வதால் வருவது. பணம் இருந்தால் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை வெற்றிகரமாக உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கே தடுமாறினால், மீதி விஷயங்கள் எல்லாம் இன்னும் பெரிய போராட்டமாக இருக்கும். எல்லாவற்றையும் முதலில் இருந்து தொடங்குவது எளிதானதல்ல. இரு காதலர்கள் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார்கள். ஆனால் இருவருமே கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது திருமணத்தை பெற்றோர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? பொருளாதாரம் இல்லை. அதை கொடுக்க வேலைக்கு செல்லவேண்டும். பொருளாதார இடர்பாட்டால் அந்த உறவு எப்போது வேண்டுமானாலும் உடையலாம். இன்று மகிழ்ச்சி என்பது பணத்தை அடைவது கிடையாது என சாமியார்கள் கூறுகிறார்கள். ஜெர்மனி தயாரிப்பு காரில் வந்து இறங்கி பல்லாயிரம் மதிப்புள்ள பிராண்டு துணிகளை உடுத்தி, சொல்வதை கேமிராவில் படம்பிடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இப்படியாக வாழ்க்கை தத்துவத்தை சொல்லவே பணம், அந்தஸ்து, செல்வாக்கு தேவைப்படுகிறதே? 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!