சீனமொழியின் அடிப்படை வாக்கியங்களை கற்றுத்தரும் நூல்!

 சீனமொழியில் உள்ள 21 எளிய வாக்கியங்கள்
பயணிதரன்
பயணி.காம்
பக்கம் 70
இலவச நூல்

இந்த நூலை பயணி.காமில் மின்னஞ்சல் முகவரி பதிந்து தரவிறக்கி படித்தது. எழுத்தாளர் பயணி சீனமொழி கற்று அங்குள்ள இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சீனமொழி கற்கவென தனி நூல்களை எழுதி வருகிறார். அந்த வகையில் இந்த நூல் சீனமொழிக்கான அறிமுக நூலென்று கூறலாம். 

சீனமொழி கற்பதற்கான அடிப்படை இலக்கண, இலக்கியங்களை பயணி கற்றுத்தரவில்லை. அவர் பொதுவாக உரையாடலுக்கான எளிய நூலை எழுதியிருக்கிறார். மும்பை நாயகிகள் தமிழை இந்தியில் எழுதி வைத்து பேசுகிறார்களே அதுபோல, கொச்சையாக இருந்தாலும் தமிழ் வருகிறதே போதுமல்லவா? அதுபோலத்தான் நீ ஹாவ் என்பது உச்சரிப்பு எப்படி இருந்தாலும் அதை சொன்னாலே சீனர்கள் புரிந்துகொண்டு வேற்று நாட்டவர் என்ற வேற்றுமையை விரோத உணர்வை சற்று தளர்த்திக் கொள்வார்கள். 

பயணி எழுதியுள்ள நூலை ஒருவர் வாசிப்பதன் வழியாக நடைமுறை ரீதியாக கிடைக்கும் நன்மை, அடிப்படையான விஷயங்களை எப்படி கேட்பது, பதில் பெறுவது, அதற்கு நன்றி சொல்வது, பிறகு விடைபெற்றுச்செல்வது ஆகியவற்றை தெரிந்துகொள்வதுதான். எனவே, இலவச நூல் என்பதால் மோசமாக இருக்கும் என்ற கருத்தை தமிழ் மின்னூல் தளங்கள் பலவும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. பயணி தனது நூலை அப்படியாக வடிவமைக்கவில்லை. அவர், தனது வலைத்தளத்தில் மின்னஞ்சல் முகவரியை பதிவிடுபவர்களுக்கு இலவசமாக நூலை வழங்குகிறார். சிறந்த விற்பனை உத்தி அல்லவா? பயணியின் வலைத்தளங்களில் வேறு நூல்களையும் கூட வாங்கி வாசிக்கலாம். 

அடிப்படையில் மொழியை அறிவது, அதன் இயல்பை புரிந்துகொள்வது நல்லதுதான். அந்த மொழியில் மூல படைப்பை படிக்க முடிந்தால் இன்னும் சிறப்புதானே? அத்தனை பேருக்கும் அது முடியாது என்பதால்தான் மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. அந்த வகையில் அடிப்படையாக என்ன்னென்ன விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும், எப்படி சொற்களை உச்சரிக்க வேண்டும் என பயணி கூறுகிறார். அதற்கு அவர் அவருக்கு உரித்த நகைச்சுவை எழுத்து உத்தியை கையாள்கிறார். இப்படியான எழுத்து அத்தனை பேரையும் ஈர்க்காது. இருந்தாலும் பரவாயில்லை. மொழியை தமிழில் கற்கவாவது பொறுத்துக்கொள்ளலாம். 

நிறைய நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. தமிழில் இப்படியான நூல்கள் வெளியாவது அரிது. எனவே, நூலை வாசித்து சீனமொழியை ஓரளவுக்காவது கற்று வைப்பது, கற்க முயல்வது தினசரி வாழ்வை சலிப்பு இல்லாமல் வாழ வைக்க உதவும். வணிக மொழியாக ஆங்கிலம் கற்பது போலவே, சீனமொழியும் பின்னாளில் உதவக்கூடும். அத்தோடு சீனமொழியில் உள்ள இலக்கியங்களும் அம்மொழியைக் கற்பதற்கான உந்துதலை ஏற்படுத்துகின்றன. 


கோமாளிமேடை குழு

தொடர்புக்கு....



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!