இடுகைகள்

சினிமா - இலக்கியம் டூ சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இலக்கியங்களைத் தேடும் சினிமா உலகம்!

படம்
சினிமா இலக்கியம்! - ச.அன்பரசு திடீரென வந்த திரைப்பட நிறுவன அழைப்பை சாய்ஸ்வரூபா, நண்பர்கள் யாரோ கிண்டல் செய்வதாகவே நினைத்தார். பிறகுதான், தான் ஆன்லைனில் வெளியிட்ட இ-புக்கின் உரிமைக்கான ஒப்பந்த அழைப்பு என புரிந்துகொண்டு பரவசமானார். இது சின்ன உதாரணம்தான். தற்போது டிஜிட்டல் வடிவில் டிவி சீரியல்களுக்கு நிகராக இணையத்தில் உருவாகும் டஜன் கணக்கிலான நிகழ்ச்சிகள், தொடர்களுக்கு பல்வேறு இணைய எழுத்தாளர்களின் படைப்புகள்தான் முதுகெலும்பு. பல்வேறு இணைய எழுத்தாளர்களின் புதுமையான பரவலாக வாசிக்கப்படும் நாவல்களின் உரிமைகளை வாங்க நெட்ஃபிளிக்ஸ், அமேஸான் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் நீயா?நானா? என போட்டியிட்டு வருகின்றனர். இவ்வாண்டில் வெளியாகி இந்தியாவெங்கும் சூப்பர்ஹிட்டான ‘ராஸி’ திரைப்படம் எழுத்தாளர் ஹரீந்தர் சிக்காவின் காலிங் ஷெமத் என்ற நாவலைத் தழுவியது இதற்கு மிகச்சிறந்த உதாரணம். “இது எழுத்தாளர்களுக்கான பொற்காலம். சினிமாவுக்கான கதையில் நிறைய கதாபாத்திரங்கள், திருப்பங்கள், அடுத்தடுத்த பாகங்களுக்கான விஷயங்கள் இருப்பது அவசியம். குறைந்தபட்சம் கதையில் கதாபாத்திரங்களின் குணாம்சங்களேனும்