இடுகைகள்

டெக் - டிஜிட்டல் டொமைன்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஜிட்டலில் உயிர்பெறும் பிரபலங்கள்!

படம்
புத்துயிர் பெறும் பிரபலங்கள்! அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்சில் 2010 ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் டிஜிட்டல் டொமைன் நிறுவனம், இறந்த பல சினிமா பிரபலங்களை டிஜிட்டல் வடிவில் உருவாக்கி வருகிறது. சினிமா, இசைநிகழ்ச்சிகள் ஆகியவற்றில் இறந்த பிரபலங்களை அச்சு அசலாக உருவாக்கி ஆச்சரியப்படுத்தியது(ட்யூபக் ஷாகுர், கோச்செல்லா). “மனிதர்களின் உடலில் உணர்ச்சிகளை சொல்லும் முகம் முக்கியமானது. அதில் தவறுகள் செய்தால் மக்களுக்கு தெரியாது; ஆனால் உயிர்தன்மை காணாமல் போய்விடும்” என்கிறார் டிஜிட்டல் டொமைன் நிறுவனத்தைச் சேர்ந்த டேரன் ஹெண்ட்லர். அதிதுல்லிய ஸ்கேனர்களைக் கொண்டு நடிகர்களின் உடல்களை பிரதிஎடுக்கின்றனர்.  ரத்த ஓட்டத்தினால் தோலின் நிறம் மாறுவதைக் கூட பதிவு செய்யும் ஸ்கேனர், கண்கள், உதடுகள், கன்னம் ஆகியவற்றை துல்லியமாக பதிவு செய்கிறது. இதற்கான செலவு அதிகமென்றாலும் நமக்கு பிடித்த நட்சத்திரங்களை திரையில் காண்பதோடு அவர்களின் குரலையும் சின்தெசிஸ் முறையில் துலக்கமாக கேட்பது மகிழ்ச்சிக்குரியதுதானே!