இடுகைகள்

தியான்மன் சதுக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தியான்மன் சதுக்கத்தில் நடைபெற்ற வரலாற்று களங்கத்தை இந்தியா பார்க்கும் பார்வை! - புதிய நூல்கள்

படம்
                இந்தியா அண்ட் ஆசியன் ஜியோபாலிடிக்ஸ் சிவ்சங்கர் மேனன் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை மாறிவரும் வெளிநாட்டு கொள்கை பற்றி பேசுகிறது இந்த நூல் . ஆசிய நாடுகளுக்கு இடையில் இந்தியா எப்படி வெளிநாட்டுக்கொள்கைகளை கடைபிடிக்கிறது . அதன் விளைவுகள் என்ன என்பதை நூலைப் படித்து அறிந்துகொள்ளலாம் . தி ஃபெயில் சேப் ஸ்டார்ட்அப் டாம் எல்சென்மன் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் உலகில் அதிகம் தொடங்கப்படுவது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்தான் . ஆனால் மிகச்சில ஆண்டுகளிலேயே தோல்வியுற்று மூடப்படுவதும் அதுதான் . ஏன் இப்படி நடக்கிறது என டாம் ஆராய்ச்சி செய்து நூலை எழுதியுள்ளார் . ஹார்வர்டு பல்கலைக்கழக ஆசிரியரான இவர் , தோல்வி அடையும் வகையில் இல்லாத ஸ்டார்ட்அப்பை எப்படி தொடங்குவது என பல்வேறு ஆலோசனைகளை நம்முன் வைக்கிறார் . தியான்மென் ஸ்கொயர் விஜய் கோகலே ஹார்பர் கோலின்ஸ் சீனாவில் நடைபெற்ற தியான்மென் ஸ்கொயர் சம்பவம் வரலாற்றில் மறக்காமுடியாத ஒன்று . இச்சம்பவம் 1989 ஆம் ஆண்டு நடைபெற்று சீனாவின் அரசியலை மாற்றி அமைத்தது

படுகொலையை நினைவுபடுத்தும் விளம்பரம்

படம்
ஜெர்மன் கேமரா கம்பெனி லெய்கா புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அண்மையில் வெளியிட்ட விளம்பரத்தில் சீனாவின் தியான்மென் சதுக்க வன்முறைக்காட்சியை கேமராவில் படம்பிடிப்பது போல விளம்பரத்தை உருவாக்கி வெளியிட்டது. ஜூன் 4 வரை சீனாவில் தியான்மன் சதுக்க படுகொலைகளைப் பற்றிய செய்தியை யாரும் பார்க்க முடியாதபடி தடுப்பது கம்யூனிச அரசின் வழக்கம். லெய்காவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி உருவான விளம்பரம் இது. ஹன்ட் என்ற பெயரில் உலகம் முழுக்க நடந்த வன்முறை நிகழ்வுகளை புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்திருந்தனர். அதில் 1989 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று தியான்மன் சதுக்க படுகொலைகள் புகைப்படமும் ஒன்று. இதில் போராடிய மாணவர்களை ஒடுக்க சாலைகளில் டாங்குகள் செல்கின்றன. இந்த விளம்பரம் பிரேசிலில் அண்மையில் வெளியானது. விளம்பரப்படத்தை நாஸ்கா - சாச்சி அண்ட் சாட்சி என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த விளம்பரம் வெளியானதும், சீனர்கள் தேசியவாதத்தில் குதித்தனர். இது சீனாவுக்கு பெரிய அவமானம். ஹூவெய் போன் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்ட லெய்கா கேமரா நிறுவனம் இப்படி செய்யலாமா எனவும் பல கருத்துகள் இணையத்தில் குவியத் தொடங்கின