செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - மைக்ரோசாஃப்ட், பைடு, சாம்சங்
பைடு, சீனா ஜேபி மோர்கன் சேஸ் சிஏடிஎல், சீனா லேண்ட் ஓ லேக்ஸ் லைவ் நேஷன் என்டர்டெயின்மென்ட் சத்யா நாதெள்ளா, மைக்ரோசாஃப்ட் இயக்குநர் மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவு உலகின் வாசல் மைக்ரோசாஃப்ட் டெக் உலகில் இருக்கிறதா இல்லையா என பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இன்று அதையெல்லாம் இயக்குநர் சத்யா நாதெள்ளா மாற்றியிருக்கிறார். ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி அதை தன் வசப்படுத்தியிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இதன்மூலம் டெக் உலகில் கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்களை விலக்கி தன்னை முன்னிலைப்படுத்தியுள்ளது. மைக்ரோசாஃப்ட், சாட் ஜிபிடியை தனது அனைத்து மென்பொருட்களுக்கும் விரிவுபடுத்தி வருகிறது. அதாவது, அதன் இணைய உலாவியான பிங் தொடங்கி ஆபீஸ் வரையில் அனைத்துமே இனி மாறிவிடும். மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்கும். டெக் வல்லுநர்கள் பயன்படுத்தி வந்த கிட்ஹப்பும் கூட மைக்ரோசாஃப்ட் வசம் சென்றுவிட்டது. எனவே, இதிலும் சாட்ஜிபிடியின் ஆதிக்கம் தொடங்கும். இதில் கோடிங் எழுதுவதற்கு பயன்படுத்தும் கோபைலட் என்ற கருவியை செயற்கை நுண்ணறிவு கொண்டு மேம்படுத்தவிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை கோடிங் எழு