2021இல் சிறந்த கேட்கெட்ஸ்! - மானிட்டர், சவுண்ட்பார், ஹெட்போன்கள், இயர்போன்கள்

 

 

 

 

 

LG Gram 17 (2020) review: A portable and long-lasting 17 ...

 

 

சிறந்த டிஜிட்டல் சாதனங்கள் 2021


LG UltraGear 34GN850-B, un nuevo gran monitor gaming


எல்ஜி அல்ட்ராகியர் 34ஜிஎன்850


கொஞ்சம் வளைந்த உடலோடு உள்ள உள்ள மானிட்டர் மேம்பட்ட அனைத்து அனுபவங்கள் மற்றும் வசதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. ஒரு நிமிடம் ரெஸ்பான்ன்ஸ் டைம், 160ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் விளையாட்டுகளை இந்த மானிட்டரில் இணைத்து விளையாடலாம். பெரிய திரை உங்களுக்கு விளையாட்டு அனுபவத்தை அற்புதமாக்குகிறது.



Pocketnow Daily: EVERYTHING We're Getting from Samsung's ...


சிறந்த போன்


சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா


சிறந்த போன் என்பதற்கான போட்டி எப்போதும் கடுமையானதுதான். சாம்சங் நிறுவனம் உருவாக்கியதில் சிறந்த போன் இதுதான் என உறுதியாக கூறலாம். 120 ஹெர்ட்ஸ் டபிள்யூக்யூஹெச்டி, ஹெச்டிஆர் 10 பிளஸ் திரை ஆகியவை அபாரமாக உள்ளன. பின்புறத்தில் 108எம்பி சென்சார், 40எம்பி முன்புற கேமராக்கள் சிறப்பாக உள்ளன. பிற டிஜிட்டல் சாதனங்களுடன் போனை எளிதாக இணைத்துக்கொள்ள முடிகிறது.



காசுக்கான மதிப்பு


சீன போன்கள் இன்று தங்களது தரத்தில் முன்னேறி வருகின்றன. ஒன் பிளஸ் போன், இதற்கான முக்கியமான சான்று. விலைக்கு தகுந்த ஏராளமான அம்சங்களை உள்ளடக்கிய காசுக்கான சரியான மதிப்பு கொண்ட போன் இது. நல்ல கேமரா, 90 ஹெர்ட்ஸ் திரை, சிறப்பான கட்டுமானம் என அனைத்து அம்சங்களிலும் சவால் விடும் போன் என்பதோடு வாங்குபவர்களுக்கு திருப்தியையும் தருகிறது.


Disney Plus review | TechRadar


சிறந்த வெப் ஸ்ட்ரீமிங்


வந்த புதிதில் இதுவும் மற்றொரு வெப் ஒளிபரப்பு சேவை என பலரும் நினைத்தார்கள். ஆனால் டிஸ்னி படங்கள், பிக்சார் அனிமேஷன், பாக்ஸ் டிவி நிகழ்ச்சிகள், ஸ்டார் டிவி குழும நிகழ்ச்சிகள் என அனைத்தையும் ஒன்றாக ஒருங்கிணைத்துள்ளது இந்த சேவை. இதனால் ஒரே ஆப்பில் அனைத்து படங்களையும், நிகழ்ச்சிகளையும் பார்க்க முடிகிறது. சிறப்பான பொழுதுபோக்கு அனுபவத்தை டிஸ்னி பிளஸ் ஆப் வழங்குகிறது.


சிறந்த லேப்டாப்


எல்ஜி கிராம் 17


எல்ஜி தனது திறமையையெல்லாம் சேகரித்து செய்துள்ள லேப்டாப் இது. 17 இன்ச் பேனலில் திரை அளவில் 16.10 ரேஷியோவும், 11வது இன்டெல் கோர் ஐ7 சிப்பும் இதில் உள்ளது. பொதுவாக இணைய உலாவுதல், கிரியேட்டிவிட்டி பொங்கும வேலைகளுக்கு பொருத்தமான லேப்டாப் இது.


GIGABYTE AORUS 15G WB-8US2130MH, 15.6" FHD 240Hz, Gaming ...

கணினி விளையாட்டுகளுக்கான லேப்டாப்


ஜிகாபைட் ஆரோரஸ் 15ஜி


240 ஹெர்ட்ஸ் திரை, விளையாட்டுகளை விளையாடும்போது அதற்கேற்ப குளிர்விக்கும் வசதிகளைக் கொண்ட லேப்டாப் இது. சந்தையில் உள்ள பிற நிறுவனங்களின் லேப்டாப்களோடு ஒப்பிடும்போது திறனுடன் செயல்படுகிறது.


சிறந்த 4 கே மானிட்டர்


பிலிப்ஸின் தரமான மானிட்டர். 32 இன்ச் சைசில் உங்கள் மானிட்டர்களை மாற்ற வேண்டுமென்றால் தாராளமாக மாற்றிக்கொள்ளலாம். எடை, திறன் என அனைத்து அம்சங்களிலும் பிலிப்ஸ் ஆச்சரியப்படுத்தியுள்ளது. வெளிச்சத்தை சென்சார் மூலம் அறைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் தொழில்நுட்பம், வெப்கேம் வசதியும் உள்ளது

 

SAMSUNG HW-Q800T/EN soundbar cena karakteristike komentari ...

சிறந்த சவுண்ட்பார்


சாம்சங் ஹெச்டபிள்யூ க்யூ800


கடந்த ஆண்டு வெளியான சவுண்ட்பாரை சாம்சங் தரம் உயர்த்தியுள்ளது. இதனால் வேறு சவுண்ட் பார்களை வாங்கும் எண்ணம் இருந்தால் அதை ஒத்திப்போட்டு வலைத்தளங்களில் சாம்சங்கின் விலையை ஒப்பிட்டு பாருங்கள். பிற அம்சங்களையும் கூடத்தான். விலையை ஒப்பிட்டுப்பார்த்தால் இதில் வரும் ஒலியின் அளவும் வசதிகளும் கூடுதலாகவே இருக்கிறது.



சிறந்த போர்ட்டபிள் ஸ்பீக்கர்


பேக் அண்ட் ஆலுஃப்சென் ஏ1வி 2


பொதுவாக சிறியதாக உள்ள ஸ்பீக்கர்கள் ஒலி என்று வரும்போது ஏமாற்றம்தான் தரும். ஆனால் இந்த பிராண்ட் ஸ்பீக்கர் பாடல்களை ஒலிக்கவிட்டு கேட்கும்போது எந்த திணறலும் இல்லாமல் இனிமையான இசையை வெளியிடுகிறது. நீர், தூசி என எதுபட்டாலும் பிரச்னை இல்லை என்று கூறிவிட்டதால் இதனை வெளியே கொண்டுபோய் பயன்படுத்தலாம்.


சிறந்த வயர்லெஸ் ஸ்பீக்கர்


நைம் மூ சோ 2


450 வாட் ஆம்பிளிபையர் சக்தி கொண்டதால் இதில் கேட்கும் ஒலி சக்தி வாய்ந்ததாக உள்ளது. வெப்பில் வரும் தொடர்களைப் பார்க்க பயன்படுத்தும் தன்மை கொண்ட வயர்லெஸ் ஸ்பீக்கர் இது.


Bowers & Wilkins P15 and P17 true wireless headphones are ...

சிறந்த இயர்போன்கள்


போவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் பி17


2021இல் இயர்போன்களில் என்ன எதிர்பார்ப்பார்கள். பிழையில்லாத அருமையான ஒலிதானே? தனது ட்ரைவர்களை மேம்படுத்தி ஒலியை அற்புதமாக வெளியிட்டு நம்மை மயக்குகிறது இந்த இயர்போன்கள். பாடலில் வரும் சிறு துளி இசையை கூட தவறவிடாமல் கேட்க வைப்பதில் வெற்றிபெறுகிறது

 

 

Focal "Clear" MG Audiophile Open Back Headphones | Audio Geeks

சிறந்த வயர் ஹெட்போன்கள்


போகல் கிளியர் எம்ஜி


பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பு. அழகான வடிவமைப்பு, அதற்கு நியாயம் செய்யும் இசை திறன் என இரண்டும் கொண்ட ஹெட்போன்கள் இவை. இசை கேட்கும் அனுபவத்தை சிறந்த தரத்திற்கு போகல் உயர்த்துகிறது.


இரைச்சலை குறைக்கும் ஹெட்போன்கள்


சோனி டபிள்யூ ஹெச் 1000எக்ஸ்எம்4


சோனியின் தயாரிப்பு. நான்காவது தலைமுறை ஹெட்போன்கள் சிறப்பான ஒலித்தரத்தில் வந்துள்ளன. இந்த வகையில் போட்டி அதிகம் நிலவினாலும் சோனியின் வடிவமைப்பு, இரைச்சலை குறைக்கும் தன்மை ஆகியவற்றால் இந்த ஹெட்போன்கள் சிறந்த இரைச்சல் குறைக்கும் ஹெட்போன்களாக வென்றுள்ளது.



பணத்திற்கான மதிப்பு


கேம்பிரிட்ஜ் ஆடியோ மெலோமேனியா 1 பிளஸ்


இவர்கள் கொடுக்கும் விலைக்கு வயர்லெஸ் இயர்போன்கள் சிறப்பாக இயங்குகின்றன. தரமும், வடிவமைப்பும் அட்டகாசம் என்று சொல்ல வைக்கின்றன. துப்பாக்கியின் தோட்டா வடிவமைப்பு உங்கள் காதுக்கு பொருந்தினால் வாங்கலாம்

 

Beats Powerbeats Pro true wireless earphones unveiled - CNET

உடற்பயிற்சி இயர்போன்கள்


பீட்ஸ் பவர்பீட்ஸ் புரோ


இவற்றின் சிறப்பம்சம் உடற்பயிற்சி செய்யும்போது இதனை பயன்படுத்த முடியும் என்பதுதான். இதன் அர்த்தம், இதில் தூசி, வியர்வை பட்டாலமு் எந்த பாதிப்பும் ஏற்படாது. இசையின் தரமும் சிறப்பாகவே உள்ளது.




கருத்துகள்