சீரியல் கொலைகாரர்களுக்கு பிடித்த புத்தகம்!

 






பிடித்த புத்தகம்


சீரியல் கொலைகார ர்கள் பொதுவாக தாங்கள் செய்யும் அனைத்து அட்டூழியங்களுக்கும் குரான், பைபிள், இந்து இதிகாசங்கள் என அனைத்தையும் காரணம் காட்டுவார்கள். அதற்காக இவர்கள் மத நூல்களை கரைத்து குடித்தவர்கள் என்று நினைக்கவேண்டாம். நீதிமன்றத்தில் தண்டனை குறைவாக கிடைக்க இப்படி பேசுவார்கள். மதம் சார்ந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு இதை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். 

தான் நினைப்பது சரி, பிறர் செய்வதும், நினைப்பதும் தவறு, உலகமே மோசமாக இருக்கிறது என்பதுதான் சீரியல் கொலைகார ர்கள், வல்லுறவு செய்பவர்களின் நினைப்பு. இந்த வாதத்தை சரிகட்டத்தான் அவர்கள் பைபிள், குரான், இதிகாச புராணங்கள் , பாத்திர ங்களை தேடி நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள். 

தாங்கள் எடுத்துக்காட்டாக கூறும் பல நூல்களை சீரியல் கொலைகாரர்கள் படித்திருக்கவே மாட்டார்கள். கேட்சர் இன் தி ரை என்ற நாவலில் சீரியல் கில்லர் பாத்திரம் ஒன்றை ஜே.டி. சாலிங்கர் உருவாக்கியிருக்கிறார். இப்பாத்திரம், தான் செய்வது சரி, பிறர் செய்வது தவறு என உறுதியாக நம்பி செயல்படும். ஓரளவுக்கு தன்னைத்தானே விரும்பும் சுயநலமான சீரியல் கில்லர் பாத்திரத்திற்கு கால்பீல்டு எனும் பாத்திரம் நல்ல உதாரணம். தி கலெக்டர் என்ற நாவலில் பெண் ஒருத்தி தன்னை கடத்திய சீரியல் கொலைகாரரை காதலிப்பாள். இதில் கடத்தல் சம்பவங்கள் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சீரியல் கொலைகாரன் எப்படி தான் செய்யும் விஷயங்களுக்கு பிறரை பலிகடாவாக்குகிறான் என்பதை நன்றாக பதிவு செய்துள்ளனர். 

சீரியல் கொலைகார ர்களை நாவல்களோ , திரைப்படங்களோ முழுமையாக பிரதிபலித்துவிட முடியாது. காரணம், அவர்கள் தங்களுக்காக தாங்களே தனி உலகை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதனை பிறர் புரிந்துகொள்வது கடினம். 


அதி நாயகன்

அதிநாயகன் என்றால் எத்தனை பேருக்கு புரியும். ஆம் நாம் பேசுவது சூப்பர் ஹீரோ பற்றித்தான். சீரியல் கொலைகார ர்கள்  வல்லுறவு, சித்திரவதை, கொலை செய்பவர்கள். இவர்கள் பிறருக்கு பயத்தை ஊட்டி அவர்கள் அலறுவதை உயிருக்காக கெஞ்சுவதை பார்க்க கேட்க நினைப்பவர்கள். இவர்கள் ஹீரோ எப்படி ஆக முடியும். இவர்கள் பிறரைக் கொல்வதற்கான காரணத்தை தாங்களே உருவாக்கிக் கொண்டவர்கள் என்பதால், பிறரை ரோல்மாடலாக எடுத்துக்கொள்வது குறைவு. 

ஆங்கிலப் படங்களில் பார்த்திருப்பீர்கள். உலகை அழிக்க வந்த அயலானை புஜபல பராக்கிரசாலியான நாயகன் துப்பாக்கியை வைத்து சாதுரியமாக போராடி அழிப்பான். ஏறத்தாழ ஒருகட்டத்தில் அயல் கிரக வாசியைப் போலவே 75 சதவீதம் நாயகனும் கொலைகாரனாக மாறி விடுவான்தான். ஆனால் அவர் தன்னோடு பிற உயிர்களையும் ஏன் உலகையும் காப்பாற்றி வன்முறையில்லாத சமூகத்தை உருவாக்க போராடுகிறார் என்று படத்தை முடித்து வைப்பார்கள். இதைப்பார்ப்பவர்கள் இரண்டு பேரை தேர்ந்தெடுக்கலாம். ஒன்று, அயலான், இன்னொன்று நம்ம நாயகன். இதைப் பார்க்கும் குழந்தைகள், ஆகா, நம்ம நாயகன் எத்தனை பேரை போட்டுத்தள்ளுகிறான். ரத்த த்தை பீறிட வைக்கும் இவன்தான் நம்ம நாயகன் என சொன்னால் அது அபாய அறிகுறி. உடனே தெரபி கொடுக்கும் மருத்துவரிடம் குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடவேண்டும். கவனம். 

பாட் ப்ரௌன்




 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்