உலக நாடுகள் வெளியேறியவுடனே மாற்றுப்பாலினத்தவரை வேட்டையாடுவதே தாலிபனின் திட்டம் ! - நேமத் சதத்
நேமத்
சதத்
அமெரிக்க எழுத்தாளர்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். தனது ஓரினச்சேர்க்கை தன்மையை வெளிப்படையாக அறிவித்த முதல் ஆப்கானியவர் இவர்தான். 2013ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் ஓரினச்சேர்க்கையாளர் என்று உண்மை தெரிந்ததால்
உடனே ஆசிரியர் பணியை விட்டு விலக்கப்பட்டார். தற்போது ஆப்கானிஸ்தானிலுள்ள மாற்றுப்பாலினத்தவர்களுக்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஆப்கானிஸ்தானிலுள்ள மாற்றுப்பாலினத்தவர்களுக்கு எப்படி உதவப்போகிறீர்கள்?
நான் ஆப்கனிலுள்ள 125 மாற்றுப்பாலினத்தவர்களை பட்டியல் போட்டு வைத்துள்ளேன். அவர்களுக்கு அமெரிக்காவில் அடைக்கலம் தருவதற்கான விசாக்களை ஏற்பாடு செய்து தரவுள்ளேன். இதனை இரு வழிகளில் செய்ய உள்ளேன். முதலாவது ஆப்கனிலுள்ள தன்னாரவ தொண்டு நிறுவனத்தில் மூலம் மாற்றுப் பாலினத்தவர்களை அங்கிருந்து அனுப்பி வைப்பது. மற்றொன்று நாடாளுமன்ற உறுப்பினர், ஸ்காட் பீட்டர் மூலம் சட்டத்துறையில் பேசி மாற்றுப் பாலினத்தவர்கள் பாதுகாப்பாக மீட்பது என முடிவு செய்துள்ளேன். இரண்டு வாரங்களில் அத்தனை பேர்களையும் மீட்பது சவாலானதுதான். குறைந்தபட்சம் ஆயிரம் பேர்களையாவது மீட்டு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து என வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என நினைக்கிறேன்.
அங்கு வாழும் மாற்றுப்பாலினத்தவரின் எண்ணிக்கை எவ்வளவு?
எத்தனை பேர்கள் அங்கு இருப்பார்கள் என்று தெரியவில்லை. தோராயமாக 4 மில்லியன் பேர் இருப்பார்கள் என நினைக்கிறேன். ஆல்பிரடன் கின்ஸியின் ஆய்வுப்படி, பத்து சதவீத மக்கள் தன்பாலின விழைவு உள்ளவர்கள் என்று அவர் கூறியிருந்தார்.
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை பிடித்துவிட்ட பிறகு, மாற்றுப்பாலினத்தவரின் நிலை என்னவாகும்?
கடந்த இருபது ஆண்டுகளாக போராடியும் கூட மாற்றுப்பாலினத்தவர்களுக்காக அங்கீகாரத்தை அரசு வழங்கவில்லை. அதிபர் ஹமீத் கர்சாய் அல்லது அஷ்ரப் கானி ஆகியோரின் ஆட்சிக்காலமும் இப்படித்தான் இருந்தது. மாற்றுப்பாலினத்தவர் என்று தெரிந்தால் அவர்கள் ஆணவக்கொலை செய்யப்படவும், தாக்கப்படுவும், அரசு படைகளால் வல்லுறவு செய்யப்படவும் வாய்ப்புள்ளது. மாற்றுப் பாலினத்தவர்களை அடையாளம் கண்டுபிடித்தால் அவர்களது தொழில் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும். கூடவே வித்தியாசமான அதிர்ச்சியான கதைக்கருக்களை படமாக, நாடகமாக எடுப்பவர்களும், தலைக்கு துணியை வைத்துக்கொள்ளாதவர்களும் அங்கு வாழ்வது இனி கடினமாகவே இருக்கும்.
அங்குள்ள மாற்றுப்பாலினத்தவர்களைப் பற்றி ஏதாவது செய்தி கிடைத்ததா?
அங்குள்ள மாற்றுப்பாலினத்தவரான அகமத்துல்லா தனது நண்பரோடு வெளியே சென்றபோது தன்பாலின ஈர்ப்புள்ளவர் என்று அடையாளம் காணப்பட்டு தாலிபனால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். அதேநாளில்தான் அவருடைய தந்தையும் சகோதரனும் கூட தாலிபன்களால் கொல்லப்பட்டனர். அமெரிக்காவும் பிற நாட்டு ராணுவமும் அங்கிருந்து வெளியேறிய பிறகு அவர்கள் மாற்றுப்பாலினத்தவரை குறிவைத்து வேட்டையாடுவது நிச்சயம். இப்போதே அவர்கள் தெருக்களில் துப்பாக்கியோடு வலம் வர தொடங்கிவிட்டனர். மாற்றுப்பாலினத்தவர் இப்போது கத்தி மீது உட்கார்ந்து கொண்டுள்ளனர் என்றுதான் சொல்லவேண்டும்.
டைம்ஸ் ஆப் இந்தியா
சர்மிளா கணேசன் ராம்
கருத்துகள்
கருத்துரையிடுக