இறந்தவர்கள் பேச மாட்டார்கள்! சைக்கோ டைரி

 






இறந்தவர்கள் பேச மாட்டார்கள்

சீரியல் கொலைகாரர்கள் பொதுவாக வல்லுறவு செய்து இரையை கொன்றுவிடுவதே வழக்கம். வல்லுறவு மட்டும் செய்துவிட்டு விட்டுவிடுவது சாத்தியமாகியிருக்கிறதா என்றால், அதற்கும் வாய்ப்புண்டு. அப்படி செய்திருந்தால் அது கொலைகளை தொடங்கும் முன்னர் செய்யும் ரிகர்சலாக இருக்கும். 

வல்லுறவு செய்வதை விட கொலை செய்வது அதிக இன்பமளிக்கும் செயலாக சீரியல் கொலைகாரர்களுக்கு தோன்றலாம். இப்படி செய்வது சீரியல் கொலைகளுக்கு அச்சாரமாக கூட இருக்கும் வாய்ப்புண்டு. கொலை செய்வது பெரிய விஷயம் கிடையாது. அது வல்லுறவை விட மனதிற்கு மகிழ்ச்சி தரும்படியாக இருந்தாலே போதும். சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை அவர்கள் செய்யும் ஒவ்வொரு கொலையுமே கனவில் ஏற்கனவே இப்படி செய்யவேண்டும் என திட்டமிட்டதுதான். 

உண்மையான பிரச்னை இதற்குப் பிறகுதான் தோன்றுகிறது. கொலை செய்த தடயங்களை மறைக்க வேண்டும். குறிப்பாக உடலை.....இதெல்லாம் கொலை செய்யவேண்டாம் என கொலையாளியை முடிவு செய்ய வைக்கிறது. கொலை என்பதை பொறுத்தவரை தீர்மானித்துவிட்டால் சீரியல் கொலைகார ர்கள் அதற்கான வாய்ப்பைத் தேடி செய்தே தீருவார்கள். இதற்கு காரணம் அவர்களின் மனநிலைதான்.  இப்படி செய்தால் என்னாகும் என்பதும் அவர்களுக்கு தெரியும், ஆனால் அதற்கெல்லாம் பயப்படாத கடவுள் அல்லது சாத்தான் மனநிலைக்கு சென்றுவிடுவார்கள். நான் உன்னைக் கட்டுப்படுத்துவேன் என்று சொல்லும் செயல்கள்தான் வல்லுறவும், கொலையும். 

ரூல்ஸ் கிடையாது!

தலைப்பை போலத்தான் சீரியல் கொலைகாரர்கள் செயல்பட்டு மாற்றிக்கொள்கிறார்கள். திருட்டு செய்து மாட்டிக்கொண்டவர்களை விட சாலை விதிகளை ஒழுங்காக கடைபிடிக்காமல் மாட்டி அதன் மூலம் திருட்டு வெளிப்பட்ட தினத்தந்தி செய்திகள் நம்மூரில் அனேகம். 

சீரியல் கொலைகாரர்கள் கொலைகளுக்கு முன்னதாக கொள்ளை, பெண்களை தாக்குவது, வீடு புகுந்து உள்ளாடைகளை திருடுவது ஆகியவற்றை செய்கிறார்கள். பிறகு, இவற்றை செய்துவிட்டு கொலைகளில் தீவிரமாக இறங்கும்போது, உலகில் தான் மட்டும்தான் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். இதனால் காவல்துறையில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள். போக்குவரத்து விதிமுறைகளை கால்தூசிக்கும் கேவலமாக மதிப்பது முக்கியமான தகுதி. சிக்னல்களை பற்றி கவலைப்படாமல் வண்டி ஓட்டுவது, வண்டிக்குள் ஹார்டுவேர் கடையே வைக்குமளவு கொலைகார ஆயுதங்களை பண்டல் கட்டி வைத்திருப்பது, கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை வைத்திருப்பது. எஃப் 1 ரேசை நெடுஞ்சாலையில் நடத்துவது என ஏடாகூடம் செய்து மாட்டிக்கொள்வது வழக்கம். 

டிரைவிங் உரிமத்தை புதுப்பிக்காமல் இருப்பது, இன்னொருவரின் காரை திருடி ஓட்டி வருவது, கார்களில் விளக்குகள் உடைந்து கிடப்பது என சின்ன விஷயங்களில் மாட்டிக்கொண்டு சிறைக்குள் போவது சீரியல் கொலைகாரர்களுக்கு இயல்பாகிவிட்டது. பெரிய கொலை செய்யும்போது சின்ன விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது என பேட்டி கொடுத்தாலும் கொடுப்பார்கள். ஆனால் இப்படி மாட்டியவர்களால்தான் உலகம் நிம்மதியாக இருக்கிறது.

Pat brown

 





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்