எலன் மஸ்கின் குணங்கள், பழக்கங்கள், சர்ச்சைகள், தொழில்நிபுணத்துவத்தை சொல்லும் நூல்! - புத்தக அறிமுகம்

 









புத்தக அறிமுகம்

பவர் பிளே

டிம் ஹிக்கின்ஸ் 

பெங்குவின் ராண்டம் ஹவுஸ்

புத்தகம் முழுக்க நவீன தொழில்துறை மேசியாவான எலன் மஸ்கைப் பற்றி விவரிக்கிறது. அவர்ரை சிலர் ஜீனியஸ் என்றாலும் சிலர் மோசமான முதலாளி என்கின்றனர். தனது மனதில் தோன்றுவதை பேசி நிறுவனத்தில் பங்குகள் சரிந்தாலும் அதை அடுத்த ஐடியா மூலம் சரிக்கட்டும் திறமை கொண்டவர் எலன்மஸ்க். விண்வெளி ஆய்வு, மின்சார கார் ஆகியவற்றை நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. 





மோத்

மெலடி ரசாக்

ஹாசெட்

1946ஆம் ஆண்டு மா, பப்பு என இரண்டு பேரும் உள்ளூர் பல்கலை ஒன்றில் ஆசிரியர்களாக உள்ளனர். இவர்களின் பதினான்கு மகள் அய்மாவுக்கு விரைவில் திருமணமாகவிருக்கிறது. அவளைப் பற்றியும் திருமணம் பற்றியும் அவளது சகோதரி ரூப் சொல்லும் கதைகளை நூல் கொண்டுள்ளது. இதயத்தின் கருப்பான பக்கங்களையும் காதல், இழப்பு ஆகியவற்றையும் விரிவாக பேசியுள்ளது. 




டிஸ்கார்டன்ட் நோட்ஸ் 1 அண்ட் 2

ரோஹிங்டன் ஃபாலி நாரிமன்

பெங்குவின் ராண்டம் ஹவுஸ் 

இந்தியாவில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டு பல்வேறு சிக்கலான, முரண்பாடுகளைக் கொண்ட வழக்குகளை நூல் இருபகுதிகளாக் பிரித்துப் பேசுகிறது. சட்டம் படிப்பவர்கள், வழக்குரைஞர்களாக இருப்பவர்களுக்கு அதிக பிரயோஜனப்படும் நூல் எனலாம். 




 ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்

க்வான்டின் டரன்டினாவோ

ஹாச்செடெ

இதேபெயரில் டரன்டினாவோ படம் ஒன்றை எடுத்துள்ளார். இந்த நாவல் படிக்க சுவாரசியமாக இருந்தாலும் சில இடங்களில் குரூரமாகவும் உள்ளது. டரன்டினாவோ மீது விருப்பம் கொண்டவர்கள் நூலை வாங்கி படிக்கலாம். 




லெட்ஸ் கோ டைம் டிராவலிங் எகெய்ன்

சுபத்ரா சென் குப்தா

பெங்குவின் ராண்டம் ஹவுஸ் 

தொலைநோக்கி இல்லாமல் நம் முன்னோர்கள் கோள்களை பார்த்தார்களா?, மகாபாரதத்தை

யார் பல்வேறு நாடுகளிலும் பிரபலப்படுத்தியது? என நினைக்க முடியாத பல்வேறு கேள்விகளை உள்ளடக்கியது இந்த நூல். கடந்தகாலம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நூல் நினைவுபடுத்துகிறது. 

ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் 




கருத்துகள்