தாயிற்கு அஞ்சலி செலுத்த இலவசமாக நாப்கின்களை வழங்கும் மருத்துவக்கல்லூரி மாணவர்!- நியூஸ் ஜங்ஷன்
நியூஸ் ஜங்ஷன்
10.8.2021
ஆஹா!
சைக்கிள் நகரம்
தெலங்கானா மாநிலத்திலுள்ள வாராங்கல் நகரம், சைக்கிள் ஓட்டுவதற்கு வசதியான நகரமாக அறியப்பட்டுள்ளது. 4 கி.மீ. தொலைவுக்கு உருவாக்கியுள்ள சைக்கிள் வழித்தடம் விரைவில் 50 கி.மீ. தொலைவுக்கு விரிவுப்படுத்தப்படவிருக்கிறது. இதற்கு 40 - 50 கோடி ரூபாய் தேவை என மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு, சைக்கிள் ஓட்டுவதற்கான சிறந்த 11 நகரங்களில் வாரங்கலும் இடம்பிடித்துள்ளது. சைக்கிள் ஃபார் சேலஞ்ச் எனும் மத்திய அரசின் போட்டியில் வெல்லும் நகரங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படவிருக்கிறது.
https://www.thenewsminute.com/article/how-warangal-changed-tyre-become-one-indias-top-cycling-cities-153665
அழகோ அழகு!
ஒலிம்பிக் போட்டி நிறைவு நாளன்று நடைபெற்ற வாணவேடிக்கை காட்சி!
இடம் டோக்கியோ, ஜப்பான்
இது புதுசு!
பாதுகாப்பு!
ஆப்பிள் நிறுவனம், தனது ஐக்ளவுட் சேவையை சோதித்து, அதில் குழந்தைகளின் மீதான வன்முறை குற்றங்களைக் கொண்ட புகைப்படங்களை தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த வாரம், ஆப்பிள் பயனர்களின் போன், டேப்லெட் ஆகியவற்றை தானியங்கி முறையில் சோதித்து சட்டவிரோதமாக உள்ள புகைப்படங்களை கண்டுபிடிக்கவுள்ளதாக ஆப்பிள் கூறியது. இந்த வகையில் கூகுள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களும் செயல்பட வாய்ப்புள்ளது. இது பயனர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என டெக் வட்டாரத்தில் விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன.
https://www.reuters.com/technology/apple-says-photos-icloud-will-be-checked-by-child-abuse-detection-system-2021-08-09/
அப்படியா!?
சிங்க தினம்!
உலக சிங்க தினத்தையொட்டி, பிரதமர் மோடி இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை சீரான அளவில் அதிகரித்து வருவதாகவும், இவற்றை பாதுகாக்க பாடுபடுபவர்களின் செயல்பாடுகளை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், குஜராத் முதல்வராக இருந்தபோது கிர் காடுகளில் சிங்கங்களை காக்க செய்த செயல்பாடுகளையும் விளைவுகளையும் குறிப்பிட்டுள்ளார். தைரியமும், கம்பீரமும் நிறைந்த ஆசிய சிங்கங்களின் காப்பிடமாக இந்தியா உள்ளது என்று கூறி சிங்க தினத்திற்காக வாழ்த்துகளை கூறினார்.
https://www.dtnext.in/News/National/2021/08/10091530/1311050/World-Lion-Day-Last-few-years-saw-steady-increase-.vpf
ஓஹோ!
மகத்தான அஞ்சலி!
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள நாகூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேந்திர ரத்தோர். மருத்துவக் கல்லூரி மாணவரான இவர், இலவசமான சானிடரி நாப்கின்களை பெண்களுக்கு வழங்கி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன தனது அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இப்பணியை செய்துவருகிறார். அம்மாவின் கரம் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி, நிதியுதவி தருபவர்களைப் பெற்று நாப்கின்களை வாங்கி பெண்களுக்கு வழங்கி வருகிறார்.
https://www.newindianexpress.com/good-news/2021/aug/08/meet-the-real-life-padmanfrom-rural-rajasthan-2341658.html
This terrifying 'dragon' was Australia's largest flying reptile
https://edition.cnn.com/2021/08/09/world/fearsome-dragon-pterosaur-fossil-scn/index.html
கருத்துகள்
கருத்துரையிடுக