கலைத்துறையில் சாதித்த இந்தியா! இந்தியா 75

 












கலைகளில் சாதனை

சாகித்திய அகாதெமி, இந்தியாவில் நூல்களை பல்வேறு மொழிகளில் வெளியிட்டு வரும் நிறுவனம். இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை சாகித்திய அகாதெமி ஒன்றிணைக்கிறது. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்திருக்கிறது. ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இளைய எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களை கௌரவித்து வருகிறது. போடோ, டோக்ரி, கொங்கணி போன்ற மொழிகளிலுள்ள இலக்கியப் பொக்கிஷங்களையும் அனைவரும் அறியும்படியாக மொழிபெயர்க்கும் பணியை சாகித்திய அகாதெமி செய்கிறது. 

தூர்தர்ஷன் அறிமுகம்

இன்று அனைவரும் ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்க்கவும், இணையத்தில் உள்ள வெப் சீரிஸ்களையும் பார்த்து வருகிறோம். ஆனால் இந்தியாவில் தொடக்கத்தில் தூர்தர்ஷன்தான் அனைவருக்கும் ஒரே டிவியாக இருந்தது. 1959ஆம்ஆண்டு தூர்தர்ஷன் தொடங்கப்பட்டது. பல்வேறு தொலைக்காட்சிகளை தொடங்கி மூடினாலும் கூட தூர்தர்ஷனிடன்  21 சேனல்கள் உள்ளன. இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமங்களில் தூர்தர்ஷன் மட்டுமே ஒரே டிவியாக முதலில் இருந்தது. இதில் வரும் செய்திகள், சினிமா பாடல்கள், படங்கள், விருது பெற்று படங்களின் ஒளிபரப்பு என கண்விழித்து பார்த்தவர்கள் அநேகம் பேர். தனியார் தொலைக்காட்சிகள் வந்தபிறகு வலுவான கட்டமைப்பு இருந்தாலும் கூட மோசமான  நிகழ்ச்சிகளால் தூர்தர்ஷன் தனது பார்வையாளர்களை இழந்துவிட்டது. 

இசைப்புயலே 

இந்தியாவிலும் கிராமி  விருது பெற்றவர்கள் இருந்தனர். தபேலா கலைஞர்களான ஜாகிர் உசேன், டிஹெச் விநாயக்ராம், கிடார் கலைஞர் விஷ்வ மோகன்  பட் ஆகியோர் இந்த விருதைப் பெற்றார்கள்.  2014ஆம் ஆண்டு ரிக்கி கேஜ், விண்ட்ஸ் ஆப் சம்ஸ்காரா ஆல்பத்திற்காக விருது பெற்றார். ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக, இரண்டு கிராமி விருதுகளை வென்றார். ரவி சங்கர், நான்கு கிராமி விருதுகளோடு வாழ்நாள் சாதனைக்காக விருதையும் பெற்றார்.  காந்தி(1982) படத்திற்கான உடை வடிவமைப்பிற்காக பானு அத்தையா முதல் ஆஸ்கர் விருதைப் பெற்றார்.  சத்யஜித்ரேவின் திரைப்படங்களுக்காக 1992ஆம் ஆண்டு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. 

பொருளாதார சாதனை

அமர்த்தியா சென்னுக்கு 1998ஆம்ஆண்டு பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. அண்மையில் மேற்கு வங்கத்தை பூர்விகமாக கொண்ட அபிஜித் பானர்ஜிக்கு, அவரது பொருளாதார ஆய்வுகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர்கள் தவிர சிவி ராமன், சுப்பிரமணிய சந்திரசேகர், ஹர் கோபிந்த் குரானா ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டு அன்னை தெரசா செய்த சமூகப்பணிகளுக்காக அவருக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. அமைதிக்கான பரிசை குழந்தைகள் செயல்பாட்டாளர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானைச் சேர்ந்த செயல்பாட்டாளர் மலாலா யூசுப் ஆகிய இருவருக்கு 2014ஆம் ஆண்டு பகிர்ந்துகொண்டனர். 

கலைஞர்கள் ஜங்ஷன்

கொச்சியில் நடைபெறும் ஓவியக்கலைஞர்களின் பியன்னாலே விழா அனைவரும் அறிந்ததுதான். 2012ஆம் ஆண்டு முதல் இந்த விழா கொச்சியில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதற்காகவே ஏராளமான வெளிநாட்டு கலைஞர்கள் இங்கு வந்து கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். இதில் நளினி மலானி, அதுல் தோடியா, கேம்ப் எனும் கலைக்குழு கலந்துகொண்டு பார்வையாளர்களை படைப்புகளால் மகிழ்விக்கின்றனர். 

இந்திய எழுத்துகள் 

1971ஆம் ஆண்டு விஎஸ் நைபால், எ ஃப்ரீ ஸ்டேட் என்ற நூலுக்காக புக்கர் பரிசைப் பெற்றார். சல்மான் ருஷ்டி எழுதிய மிட்நைட் சில்ரன் என்ற நூல் சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் நடைபெற்ற விஷயங்களை பேசுகிற முக்கியமான நாவல். 1981ஆம் ஆண்டு இந்த நூல் புக்கர் பரிசைப் பெற்றது. 1997ஆம் ஆண்டு அருந்ததிராயின் காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ் என்ற நூலுக்கு புக்கர் பரிசும், 2006ஆம் ஆண்டு தி இன்ஹெரிடன்ஸ் ஆஃப் லாஸ் என்ற நூலுக்கும், 2008ஆம் ஆண்டு அரவிந்த் அடிகாவிற்கு தி வொயிட் டைகர் என்ற நூலுக்கும் விருது கிடைத்தது. 

கலை விற்பனை

1987ஆம் ஆண்டு கிரிஸ்டி ஏல நிறுவனத்தில் மாடர்ன் இந்தியா கலைப்படைப்பு ரூ.16 லட்சத்திற்கு விலைபோனது.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சோத்பை நிறுவனத்தில்  இந்திய படைப்பு 38 லட்சத்திற்கு விற்பனையானது. 2002ஆம் ஆண்டு டையிப் மேத்தாவின் செலிபரேஷன் படைப்பு, முதன்முறையாக ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையானது. இந்த ஆண்டு சப்ரோன் ஆர்ட் என்ற நிறுவனத்தில் விஎஸ் கைடோண்டோவின் படைப்பு 39 கோடிக்கும், அம்ரிதா சேர் கில்லின் படைப்பு 37 கோடிக்கும் விற்றது. 

ஹெச்டி 

ரேச்சல் 








 






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்