குழந்தைகளை பாதுகாக்க களத்தில் இறங்கும் கூகுள்!

 









இன்று பெருந்தொற்று காலத்தில் வாழ்கிறோம். சமூக வலைத்தளங்கள் வந்தபோதே நம்முடைய வாழ்க்கை பெரும்பாலும் இணையத்தோடு இணைந்துவிட்டது. ஒருவரைப் பற்றி தேட வேண்டுமென்றால் கூட சமூக வலைத்தளங்களின் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். மேலும் சர்ச் எஞ்சின்களில் தேடினால் ஒருவரின் புகைப்படம், குறைந்தபட்சம் அவரின் வேறு தகவல்களையும் கூட பெறலாம். ஒருவகையில் இது சிறப்பானது என நிறுவனங்கள் கூறினாலும், தகவல்களை பிறர் தவறாக எடுத்து பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே கூகுள் பதினெட்டு வயதிற்கு கீழுள்ளவர்களை பாதுகாக்க தனது நிறுவன விதிகளை மாற்றியுள்ளது. 

குழந்தைகள் மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் என அனைவருமே, பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்பதால், விதிகள் மாற்ற்றப்பட்டுள்ளன. இதன்படி மைனர்கள் அனைவருமே தங்கள் புகைப்படங்களை இணையதளங்களிலிருந்து நீக்கிக்கொள்ள கூகுள் கோரியுள்ளது. 

யூட்யூபில் மைனர்கள் பதிவேற்றும் வீடியோக்கள் அவர்களை பாதுகாக்கும் மோடில்தான் இயங்கும். இதில் உள்ள சேஃப் சர்ச் என்ற வசதி முதலில் பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கானது. இப்போது பதிமூன்று வயதுக்குட்பட்டோருக்காக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் குழந்தைகள் வணிக வீடியோக்கள் மற்றும் வயது வந்தோருக்கான வீடியோக்களை பார்க்கும் அவசியம் கிடையாது. 

தற்போது கூகுள் உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ள மென்பொருட்களை டிஜிட்டல் வெல்பீயிங் டூல்ஸ் என்று கூறுகின்றனர். 1998ஆம் ஆண்டு அமெரிக்காவில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான இணையச்சட்டம் உருவானது இதனை மீறியதற்காக கூகுள் 170 மில்லியன் டாலர்களை அபராதமாக கட்டியுள்ளது. எனவே, கூகுள் எதிர்காலத்தில் இப்படியொரு பிரச்னை ஏற்படாமலிருக்க தனது கட்டமைப்புகளை மாற்றி வருகிறது. 

பேஸ்புக் நிறுவனமும் கூட இன்ஸ்டாகிராமில் மைனர்களுக்கான பிரைவேட் பக்கங்களை உருவாக்கி வருகிறது. ஆப்பிள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் சீண்டல் ஆகியவற்றை தடுப்பதற்காக ஐக்ளவுட் வசதியை கண்காணிக்கப்போவதாக முன்னதாகவே அறிவித்துவிட்டது.


இந்தியன் எக்ஸ்பிரஸ் 





கருத்துகள்