மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் எக்ஸோ அப்ஸ்!

 







விபத்து அல்லது புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்போது, மருத்துவ சிகிச்சைகள் உதவுகின்றன. நேரடி விளைவாக உயிர் மிஞ்சினாலும் கூட உடலின் இயக்கங்கள் ஒரு கட்டத்தில் தேக்கமாகி விடுகின்றன. இதனால் வீல்சேரில் வாழ்க்கை நடைபெறும் நிலையாகிறது. நிரந்தரமாக இப்படி ஒருவர் சிகிச்சை பெற்று வருவது என்பது பிறருக்கும் பாரம் என ஏதாவதொரு சூழலில் நினைக்கத்தோன்றும். இதற்கு தொழில்நுட்பம் உதவுகிறது. 


சியோல் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எக்ஸோ ஆப்ஸ் என்ற கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கருவியைப் பயன்படுத்தினால், வாதம் வந்து செயலிழந்து போனவர்களைக் கூட பேச, பாட, வைக்க முடியும். வயிற்றுப்பகுதியில் ஒருவர் அழுத்தம் கொடுத்தால் போதும். அதனை வைத்து மூச்சுவிடுவது, பாடுவது, இருமுவது ஆகியவற்றை ஒருவர் எளிதாக செய்ய முடியும். 


தென்கொரியாவில் 2012ஆம் ஆண்டு கிம் ஹியூக் குன் என்ற பாடகர் கார் விபத்தில் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக அவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து போனது. கிராஸ் என்ற பேண்ட் குழுவில் பாடகராக இருந்தவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து போனதால் பாட முடியவில்லை. இவருக்கு உதவுவதற்காகத்தான் முதலில் எக்ஸோ ஆப்ஸ் முயற்சி தொடங்கியது. ஒருவரின் முதுகெலும்பு பாதிக்கப்பட்டுவிட்டால் அவரால் மூச்சுவிடுவது கூட கடினமாகவே இருக்கும். மூச்சு விடுவதில் நுரையீரல், வயிறு என இரு பகுதிகளின் பங்களிப்பு முக்கியமானது. இதனை அப்படியே செய்ய உதவும்படி பயோரோபோட்டிக்ஸ் ஆய்வகம் முயன்றது. இந்த ஆய்வகம் சியோல் பல்கலைக்கழகத்தின் ஓர் அமைப்பு. 


விபத்து,மூளை நரம்பியல் குறைபாடுகள் ஆகிய பிரச்னைகளால் ஒருவர் நடமாட முடியாமல் முடங்குவது, மூச்சுவிடுவதில் பிரச்னை ஆகியவற்றை முழுக்க தீர்க்க முடியாது. மூச்சுவிடுவதற்கு வெண்டிலேட்டர் மாஸ்க் போன்றவற்றை இப்போது பயன்படுத்துகிறார்கள். எக்ஸோ அப்ஸ் பயன்பாட்டிற்கு வரும்போது, வெண்டிலேட்டரை ஒருவர் பயன்படுத்தும் தேவை குறையும். 

முதுகில் பின்புறம் பொருத்திக்கொள்ளலாம் அல்லது வீல் சேரில் கூட வைத்துக்கொள்ளலாம். சட்டைக்கு உள்ளாக இதனைப் பொருத்தமுடியும். இது முதுகில் அழுத்தம் கொடுப்பதால் சுவாசிப்பது எளிதாகிறது. ஆனால் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. அதிக நேரம் இதனை அணிந்தால் சிறுநீரில் ரத்தம் வருவது, குடல் வெளித்தள்ளப்படுவது ஆகிய பிரச்னைகள் உள்ளன. புதிய எக்ஸோ அப்ஸ்  எடை குறைவாக இருப்பது சிக்கலைக் குறைக்கும் வாய்ப்பை அளிக்கிறது. 


மூலம் 

https://www.wired.com/story/device-helps-paralyzed-people-breathe-sing/?bxid=5bd67a8d3f92a41245de1eaa&cndid=44971915&esrc=Wired_HPTO_newslette&mbid=mbid%3DCRMWIR012019%0A%0A&source=EDT_WIR_NEWSLETTER_0_DAILY_ZZ&utm_brand=wired&utm_campaign=aud-dev&utm_mailing=WIR_Daily_081221&utm_medium=email&utm_source=nl&utm_term=list1_p3





கருத்துகள்