பறவையின் மூளை இயக்கங்களை பாடல்களாக மாற்றி மனிதர்களுக்கு உதவலாம்! - புதிய ஆராய்ச்சி

 










பறவைகளின் மூளையில் ஒரு பாடல்

பறவையியல் ஆராய்ச்சியாளர்கள், அதன் மூளை இயக்கத்தை ஆராய்ந்து அதனை பாடலாக மாற்றியிருக்கிறார்கள். பாட்டு எப்படியிருக்கும் என்று இப்போது நீங்கள் கேட்க கூடாது. எதற்கு இப்போது இந்த ஆராய்ச்சி என்று கேட்டால் கட்டுரையை நீங்கள் தாராளமாக வாசிக்கலாம். 

அமெரிக்காவின் சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பறவைகளின் மூளை இயக்கத்தை பாடலாக மாற்றும் ஆராய்ச்சியை செய்துள்ளனர். இதன்மூலம் பேச முடியாத மக்களுக்கு குரல் அமைப்புகளை வடிவமைக்க முடியும் என்பதுதான் அவர்கள் சொல்லும் சேதி. 

தற்போதுள்ள மருத்துவக்கருவி மூலம் ஒரு நிமிடத்திற்கு இருபது வார்த்தைகளை பேச முடிகிறது. 

யோசித்துப் பாருங்கள். நீங்கள் பேசுவதை கூறும் கருவியை விட என்ன பேசலாம் என்று நினைப்பதை பிராஸ்தெடிக் கருவி மூலம் பிறருக்கு தெரிய வைத்தால் பிரமாதமாக இருக்குமே என்கிறார் உளவியல் மற்றும் நரம்பு உயிரியல் பேராசிரியர் டிமோத்தி ஜென்ட்னர். 

ஸீப்ரா ஃபின்ச் என்ற பறவைகளின் உடலில் எலக்ரோடுகளைப் பொருத்தி, செயற்கை நுண்ணறிவு மூலம் அதன் மூளை இயக்கங்களை படம்பிடித்துள்ளனர். இதன்மூலம் மூளை எப்படி குரல்  தசைகளை இயக்க ஆணைகளை பிறப்பிக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். இதன் வழியாக பாடும்போது மூளை எப்படி செயல்படுகிறது, குரல் தசை இயக்கம், உடலின் அசைவு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. மனிதர்களின் பேச்சுக்கும், பறவைகள் பாடுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன என்பது உண்மை. ஆனால் இதைத்தாண்டி  உள்ள ஒற்றுமைகள்தான் ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. 

மூளை நரம்பியல் அமைப்புகள், ஒலியின் தன்மைகள் என நிறைய சவால்களை சந்தித்துள்ளது ஆராய்ச்சிக் குழு. கணித மாடல் ஒன்றை அடிப்படையாக வைத்து பாடலை உருவாக்கியுள்ளனர். பாடும்போது, ஸீப்ராவின் குரல்வளை, தசை  எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்துள்ளனர். 

பாடல்களை தொழில்நுட்பம் மூலம் மாடல் செய்து அறிந்தபிறகு அதனை நிகழ்காலத்தில் எப்படி வேகமாக சாத்தியப்படுத்தி மாற்றுவது என்பதில் கவனம் செலுத்தியுள்ளனர். நாற்பது ஆண்டுகளாக பறவைகள் பற்றிய மூளை, பாடல் ஆராய்ச்சியை செய்து வருகிறோம். இந்த குரல் கருவி, ஒருவரது எண்ணங்களை குரலாக வெளிப்படுத்துவதோடு குறிப்பிட்ட ஒலியை எழுப்பினால் கூட அதனையும் வார்த்தையாக மாற்றும் . இதன்மூலம் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகள் பிறருடன் தொடர்பு கொள்வது எளிமையாக மாறும். இச்செயல்பாடு அர்களின் விருப்பமாகவும் மாறும்.  என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இக்கட்டுரை கரன்ட் பயாலஜி இதழில் வெளியாகியுள்ளது. 

சயின்ஸ் போகஸ்











கருத்துகள்