இந்தியாவின் முக்கியமான நிகழ்ச்சிகள்! இந்தியா 75

 









இந்தியாவின் முக்கியமான நிகழ்ச்சிகள்

இந்தியா 75

டெலிவரிக்கு ரெடி! 

உலகம் முழுக்க இன்று இந்தியாவின் சமையல் பொருட்களை பயன்படுத்தி வருகின்றன. இப்போது அந்த பொருட்கள் இல்லாமல் ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.  2020ஆம் ஆண்டு 275. 5 பில்லியன் மதிப்பிலான பொருட்களை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா. இதில் பெட்ரோல், எண்ணெய், வைரம், அரிசி, மருந்துகள், நகை, கார்கள் ஆகியவை உள்ளடங்கும். அமெரிக்கா, சீனா, அரபு நாடுகள் நமது முக்கியமான வாடிக்கையாளர்கள். 

எல்லோருமே எஞ்சினியர்கள்தான்

இப்படி கிண்டல் செய்தாலும் கூட ஆசியாவில் சிறந்த பொறியாளர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அரசு மானிய விலையில் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்து இருப்பதுதான். இதற்கான கட்டமைப்பு, நிதி ஆதாரம் எல்லாமே 1940 முதல் 50 களில் திட்டமிடப்பட்டது என்பதை யாரும் மறக்க கூடாது. வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் பெருமையை வெள்ளையர்களுக்கு புரிய வைத்து வென்றிருக்கிறார்கள் நமது எஞ்சினியர்கள். 

ஐடி ஆட்கள் ப்ரோ!

ஐடி சார்ந்த சேவைகளை குறைந்த விலையில் அதிக தரத்துடன் செய்துகொடுப்பது இந்தியாதான். 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு டிசிஎஸ் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 12 லட்சம் கோடி என்றால் அதன் வர்த்தகம் எப்படியிருக்கும் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு திறன்களை இந்தியா வளர்த்துக்கொண்டுள்ளது. இதனால் நாம் நமக்கான மென்பொருட்களை தயாரிக்க கூட நேரமில்லாமல் உலகிற்கான மென்பொருள் கோடிங்குகளை எழுதி வருகிறோம். 

தாராளமயமாக்க கர்த்தா!

பணவீக்கம் அதிகரித்து வந்த நிலை, அரசிடம் ஊழியர்களுக்கு பணம் தரக்கூட காசு இருக்குமா என தடுமாற்றம்  இருந்தது. தங்கத்தை அடகு வைத்து பணம் பெறும் நிலை வந்தது. அதனை திறமையாக சமாளித்து இந்தியப் பொருளாதாரத்தின் கட்டுக்களை தளர்த்தினார் நிதி அமைச்சர் மன்மோகன் சிங். இதன் விளைவாக தொழில்துறை சார்ந்த கட்டுப்பாடுகள் குறைந்தன. இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கப்பட்டன. இதனால்  வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. சந்தைகள் பெரிதாக மாறின. தாராளமயமாக்கல் கொள்கை காரணமாகத்தான் நிசான் காரில் பயணித்து ஸ்பேனிஸ் உடை நிறுவனத்திற்கு சென்று உடை வாங்க முடிகிறது இத்தாலி பாஸ்தாவை ஆர்டர் செய்து ஜெர்மன் பீரை துணைக்கு வைத்து சாப்பிட முடிகிறது. இந்தியாவை மாற்றியமைத்ததில் அன்றைய பிரதமர் நரசிம்மராவ், நிதி அமைச்சர் மன்மோகன் சிங் மற்றும் அவரது குழுவினருக்கு முக்கியமான பங்குண்டு. 

ஸ்டார்ட் அப் மந்திரம்

உலகளவில் 628 யுனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 52 இந்தியாவைச்சேர்ந்தவை. ஒட்டுமொத்த மதிப்பில் 1 பில்லியன் என உள்ளன. இந்தியாவில் டெக்னாலஜி சார்ந்து 42 ஆயிரம் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது பிரதமர் மோடி தொடங்கிய திட்டம் என்பதை விட அவரது கட்சி பாஜக  என்பதை நீங்கள் அறிந்துகொள்வது அவசியம். 

வைரமே வைடூரியமே 

குஜராத்திலுள்ள சூரத்தான் வைரங்களை பட்டம் தீட்டி விற்பதில் முக்கியமான நகரம். உலகில் விற்கும் 75 சதவீத வைரங்கள் இங்குதான் பாலீஸ் செய்யப்படுகின்றன. இத்துறை மூலம் 7 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வருமானமாக ரூபாய் 1.8 கோடி  வருகிறது. 

எரிபொருளைத் தேடி..

1956ஆம் ஆண்டு எண்ணெய், இயற்கை எரிவாயுவுக்கான கமிஷன் தொடங்கப்பட்டது. முதன்முறையாக இந்தியா தனது பெட்ரோலிய வளங்கள் மீது கவனம் செலுத்த தொடங்கியது. அறுபதுகளிலேயே அசாம், குஜராத்தில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. மும்பை ஹைபீல்டு இடத்தில் எண்ணெய் வளம் இருப்பதை எழுபதுகளில் கண்டுபிடித்தது. இந்தியா ஆசியாவிலேயே எண்ணெய் சுத்திகரிபில் இரண்டாவது நாடு.  உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக எரிபொருட்களை இறக்குமதி செய்வதில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது நமது இந்தியா. 

ஒரே வரி!

2017ஆம் ஆண்டு நாடு முழுக்க ஒரே வரி என்று சொல்லி கொண்டு வரப்பட்ட வரி ஜிஎஸ்டி. இப்படி சொன்னாலும் இதில் வரி சதவீதம் நான்கு அளவில் இருந்தது. அனைத்து வரிகளையும் எளிதாக ஒன்றாக்கிய வரி என்று சொன்னாலும் இதனால் மத்திய அரசுக்கு கிடைத்த அளவுக்கு வரி மாநிலங்களுக்கு கிடைக்கவில்லை. வரிகள் சீர்திருத்தத்தில் இது முக்கியமான வரி என்பது உண்மை. 

மக்களே செல்வம்!

மேற்சொன்ன அத்தனை விஷயங்களையும் தாங்கி நிற்பது வேறுயார் மக்கள்தான். எழுபத்தைந்து ஆண்டுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. 1950ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ந்து வருகிறது. 2050இல் இதன் அளவு 1.68 பில்லியனைத் தொடும் என்கிறார்கள். பிறகு படிப்படியாக மக்கள்தொகை குறையும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்து என்னவாகும்? நானும் அதை எழுத காத்திருக்கிறேன். 

ஹெச்டி 

ரேச்சல் 








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்