திமுக மூன்று மாதங்களில் சாதித்த வாக்குறுதிகள், சரிந்துபோன செயல்பாடுகள்!
திமுக ஆட்சிக்கு வருவது உறுதியானவுடன் முதல்வரான ஸ்டாலின் கோவிட் பணிகளை மேம்படுத்தும் வேலைகளை தொடங்கிவிட்டார். ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வந்த ஒதுக்கி வைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை புதிய பொறுப்புகளுக்கு நியமிப்பது தொடங்கி பொருளாதார கௌன்சில் வரையில் நிறைய பணிகளை திமுக அரசு செய்துள்ளது.
சாதித்தது எதில், சரிந்தது எதில் என்று பார்ப்போம்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பெரிய முன்னேற்றமில்லை. குடியரசுத்தலைவருக்கு இதுபற்றி கவனத்திற்கு கொண்டுசெல்லும் முயற்சிகள் பலிக்கவில்லை.
குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நிறைவேறவில்லை.
அரசின் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறினார்கள். இன்றுவரை நிறைவேற்றவில்லை.
சிறு, நடுத்தர விவசாயிகளின் விவசாயக்கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவிலை.
உயர்கல்வி பயில மாணவர்கள் வாங்கிய கடனும் தள்ளுபடி ஆகவில்லை.
மாதம்தோறும் மின்சாரத்தை அளவிடும் பணி தொடங்கப்படவில்லை.
சமூக பாதுகாப்பு நிதியாக முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் , இலங்கை அகதிகள் ஆகியோருக்கு 1000 முதல் 1500 ரூபாய் வழங்கப்படும் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
சாதித்தவை
2.07 கோடி அரிசி அட்டைதார ர்களுக்கு கோவிட் நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
பெண்களுக்கு, மாற்றுப்பாலினத்தவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் வசதி.
ஆவில் பால் லிட்டருக்கு மூன்று ரூபாயை குறைத்து விற்கத் தொடங்கியுள்ளது.
வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வேளாண் உற்பத்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் என்ற பெயரில் மக்களின் புகார்களை மாநில அரசு பெறுகிறது. தொடர்புடைய துறைகளுக்கு அதனை அனுப்புகிறது.
நீராதாரங்களை பாதுகாப்பதற்காக தனி அமைச்சகம் உருவாகப்பட்டுள்ளது.
முக்கியமான கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் நோக்கம்
2030இல் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றுவது...
23 லட்சம் கோடி ரூபாயை புதிய தொழில் முதலீடாக பெறுவது...
46 லட்சம் மக்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது....
toi
கருத்துகள்
கருத்துரையிடுக