சிங்காரச்சென்னைத் திட்டம் 2.0 - சந்தோஷம் கிடைக்குமா?
சிங்காரச்சென்னை வேண்டுமா? சந்தோஷச் சென்னை வேண்டுமா?
சென்னை மாநகரம் தனது 382ஆம் ஆண்டு பிறந்த தினத்தைத் கொண்டாடுகிறது. இதை இங்கு வாழும் பலரும் நம்புவதற்கு கடினமாகவே இருக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முரர் கிழக்கிந்திய கம்பெனி, மெட்ராஸ் எனு்ம் இந்த துண்டு நிலப்பகுதியை வணிகத்திற்காக வாங்கியது. அதில்தான் இன்று கலை, கலாசாரம், வணிகம் என அனைத்தும் வளர்ந்துள்ளது.
நவீன காலத்தில் சென்னையை மேம்படுத்த பலரும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள். பெரும்பாலும் திமுக அரசு என்று உறுதியாக சொல்லலாம். இந்த கட்சிக்கு சென்னை என்பது தொப்புள்கொடி உறவு என்று கூறலாம். முன்னர் ராபின்சன் பூங்கா இப்போது அறிஞர் அண்ணா பூங்காவில்தான் சி.என்.அண்ணாதுரை திமுகவைத் தொடங்கினார். கட்சி பெயரை குடந்தை நீலமேகம் அறிவித்தார்.
1949ஆம்ஆண்டு செப்டம்பர் 17 அன்று கட்சி தொடங்கப்பட்டது. சென்னையை அழகுபடுத்தும் திட்டமாக சிங்காரச்சென்னை என்பது 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது தொடங்கப்பட்டது. இப்போது ஆட்சித்தலைவராக உள்ள ஸ்டாலின் தனது பழைய திட்டத்திற்கு புத்துயிர் ஊட்டியுள்ளார்.
சிங்காரச்சென்னை 2.0 என்பதை யாரும் தடுக்க போவதில்லை. அகலமான குப்பை இல்லாத சாலைகள், ஓ்வியம் வரைந்த சுவர்கள், தூய்மையான ஆறுகள்(கூவம், அடையாறு), பசுமையான தோற்றம், அனைத்து வீடுகளிலும் குழா்ய் வழி குடிநீர், அகலமான பிளாட்பார்ம்கள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இந்த திட்டத்தில் தனியார் நிறுவனங்களும், மக்களுக்கும் இணையவேண்டும். ஏனெனில் மாநகராட்சி, சிறுநீர் கழிப்பிடங்களை கட்டி வைக்கலாம்.. ஆனால் மக்கள்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். பிளாட்பார்ம்களை அரசு கட்டினாலும் அதில் கடை வைக்காமல், வண்டிகளை நிறுத்தாமல் மக்கள் நடக்க மக்கள்தானே குடியிருப்புவாசிகள்தானே அனுமதிக்கவேண்டும்.
திட்டங்கள் சரியான போக்கில் சென்றால் சென்னை அடிப்படை கட்டமைப்புகளை சிறப்பாக அமைத்த நகரங்களின் பட்டியலில் நிச்சயமாக இடம்பிடிக்கும். நான் மூன்று தலைநகரங்களில் வசித்திருக்கிறேன். ஆனால் சென்னையில் 22 ஆண்டுகள் வா்ழ்ந்திருக்கிறேன். தனது பாரம்பரியமான விஷயங்களை இந்த நகரம் இன்னும் வணிகப்படுத்த வில்லை என்று நினைக்கிறேன். இங்கு முதலில் பிராமணர்கள் மட்டும் என்ற போர்டுகளை வைக்க்ப்பட்டிருக்கும். அவை இப்போது சைவம் சாப்பிடுபவர்கள் மட்டும் என்று மாறியிருக்கிறது. காஸ்மோபாலிடன் நகரமாக சென்னையில் அனைத்து மதம், மொழி, இனத்தினர் தங்களது வீடு போல நினைத்து வாழ்கிறார்கள். சீக்கியர்தான் சென்னை மாநகராட்சியின் தலைவர் கூட என்பதையும் நினைத்துக்கொள்ளுங்கள். தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், ராஜஸ்தான், குஜராத் மாநில மக்கள், சீக்கியர்கள் என அனைவரையும் சென்னை அரவணைத்திருக்கிறது.
மகிழ்ச்சிக்கு நண்பர்கள் தேவையில்லை. ஆனால் சோகத்திற்கு துணையாக எப்போதும் வறுமை உள்ளது. மாநகரை அழகாக்க வேண்டுமென்றால், அதற்கு வறுமையை ஒழிப்பது முக்கியம். இரவில் தங்குமிடங்கள், இலவச உணவு ஆகியவற்றை அரசு ஏற்பாடு செய்தால் வறுமையை ஒழிக்கமுடியும். அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை அரசு அளித்து அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளை வழங்க முடியும். வறுமையை நகரில் முழுமையாக அழிக்க முடியாதபோதும், மக்களுக்கு ஒரே மாதிரியான உணவை வழங்கலாம். கூவம் ஆற்றில் கரையில் உள்ள பெ்ஞ்சில் அமர்ந்து புத்தகத்தை வாசிக்கலாம். பின்னணியில் பறவையின் குரல் கேட்க நாம் வாழ்க்கை அழகானது என்று உறுதியாக சொல்லமுடியும்தானே?
அருண்ராம், ஆசிரியர்
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக