ஹிட்லர் இந்தியாவைப் பற்றி என்ன நினைத்தார் என்று அறிய உதவும் நூல்! - நூல் அறிமுகம்

 





சொல்லப்படாத கதை

ஹிட்லர் அண்ட் இந்தியா

வைபர் புரந்தாரே

ரூ.399

வெஸ்ட்லேண்ட்


இந்தியாவில் ஹிட்லர் இந்தியாவைப் பற்றி என்ன கருத்துக்களை கொண்டிருந்தார் என்பதை அறியாமலேயே அவரை ஆராதித்து கொடி பிடிக்கும் ஆட்கள் அதிகம். ஹிட்லரின் எஸ்எஸ் படையை அடியொற்றியே ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருத்துக்களை மையமாக வைத்து நூல் எழுதப்பட்டுள்ளது. ஹிட்லர் இந்தியாவை பற்றியும், அதன் மக்களைப் பற்றியும் என்ன கருத்துகளை கொண்டிருந்தார் என தெளிவுபடுத்துகிற நூல் இது. 

---------------------------------





இந்தியன் பொட்டானிக்கல் ஆர்ட்

மார்ட்டின் ரிக்ஸ் 

ரூ.1495

ரோல் புக்ஸ் 

பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியாவை பூர்விகமாக கொண்ட தாவரங்களை ஆவணப்படுத்துகிற நூல். இதிலுள்ள நிறைய படங்களை வேறு எங்குமே நீங்கள் பார்க்க முடியாது. தற்போது உயிரியல் சார்ந்து இயங்கும் கலைஞர்களின் பல்வேறு படைப்புகளோடு நூல் நிறைவடைகிறது. 

--------------------------------------------------------------






வாட்டர்  எலிமெண்ட் ஆப் லைஃப்

யுத்திகா அகர்வால், கோபால் கிருஷ்ண அகர்வால்

599, ப்ளூம்ஸ்பரி

அரசியலமைப்புச் சட்டப்படி நீர் என்பது அனைவருக்குமானது. அரசின் கொள்கைகளால் நீர் அனைவருக்கும் சென்று சேர்ந்திருக்கிறதா என்பதை ஆய்வு நோக்கில் அலசுகிறது இந்த நூல். சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீரை எளிதாக அணுக முடிகிறதா என்று ஆய்வு செய்திருப்பதை நூலை முக்கியமானதாக்குகிறது. 

HT





கருத்துகள்