இந்தியாவின் பெருமையான சாதனைகள்! India@75

 









இந்தியாவின் பெருமையான சாதனைகள்!

இந்திய அரசியலமைப்பு

இந்தியாவின் அரசியலமைப்பு நாட்டைக் கட்டமைத்ததில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், சமத்துவம், நீதி, சுதந்திரம் ஆகியவற்றை இதில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் குடிமக்களுக்கு வழங்குகின்றன. அனைத்து மாநிலங்களுக்கான உரிமைகளை உள்ளடக்கிய ஒன்றிய அரசு என்பதை அரசியலமைப்புச் சட்டங்களே உறுதிப்படுத்துகின்றன. இன்று அதனை உடைக்க மதவாத கும்பல் முயன்றாலும், அது உருவாக்கப்பட்ட காலத்திலும் இன்றும் வலிமையான ஒன்றாக எளிய மக்களுக்கும் உதவுகிறதாகவே உள்ளது. 

அனைவருக்கும் வாக்குரிமை

பாலினம், வகுப்பு, கல்வி, சாதி, மதம்  என எந்த பாகுபாடுமின்றி அனைத்து வயது வந்தோர்களுக்கும் வாக்குரிமையை இந்தியா சாத்தியப்படுத்தியுள்ளது. பல்லாண்டுகளாக காலனித்துவ நாடாக இருந்த நாடு இந்தியா. பணக்கார ர்கள் ஏழைகளுக்கான இடைவெளி இன்றும் இருக்கிறது. ஆனாலும் அனைத்து மக்களுக்குமான வாக்குரிமையை இந்தியா சாத்தியப்படுத்தியது மகத்தான சாதனை. 

ராணுவ ஒழுக்கம்

இந்தியாவில் அருகில் உள்ள பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம் ஆகிய நாடுகளில் ராணுவ கலகம் நடந்துள்ளது. இன்றுவரை பாகிஸ்தானில் ராணுவம்தான் மறைமுக ஆட்சியாளராகவே உள்ளது. ஆனால் இந்தியாவில் அப்படிப்பட்ட கலகங்கள் நடைபெறவில்லை. இதற்கு காரணம், ராணுவம் அரசியல் விவகாரங்களில் உள்ளே வரக்கூடாது என சட்டம் உள்ளதுதான். இதனால் இங்கு அரசியல் ரீதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட ராணுவம் அதில் தலையிடாமல் பாதுகாப்பு பணியை மட்டுமே கவனித்துக்கொண்டிருக்கும். இதனால் நாட்டில் கலகங்கள், ராணு வ ஆட்சி ஏற்படாமல் அமைதியாக உள்ளது. 

நன்றாக சாப்பிடுங்க!

1966 - 1978 காலகட்டத்தில் வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் அதிக விளைச்சல் தரும் பயிர் ரகங்களை ஆராய்ச்சி செய்து அறிமுகப்படுத்தினார். அப்போது இந்தியாவில் ஊட்டச்சத்து பற்றாக்குறை இருந்தது. உணவும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை. வேளாண்துறைக்கான பொருட்களும் கிடைப்பது தட்டுப்பாடாக இருந்த து.  சுவாமிநாதனின் பசுமை புரட்சி நாட்டையே மாற்றியது. உணவு உற்பத்தியில் தன்னிறை பெற அவரின் ஆலோசனைகள் முக்கியமானவை. 

சட்டம் அனைவருக்குமானது!

சட்டம் என்பது அனைவருக்குமானது என்பது இன்று மதவாத கும்பலின் அட்டகாசம் காரணமாக இல்லாமல் போய்க்கொண்டிருக்கலாம். ஆனால் பல்வேறு பிரச்னைகளுக்காக பொது வழக்குகளை போட்டு அதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தது முக்கியமான சாதனை. 1979ஆம் ஆண்டு பொதுவழக்குகளை தொடுப்பதற்கான சட்டம் அமலானது. இதன்மூலம் கங்கை ந தியை அழித்து வந்த தொழிற்சாலைகளின் கதவுகளை மூட முடிந்தது. வேலை செய்யும் இடத்தில் பெண்களின் மீதான பாலியல் துன்புறுத்தல்களை கேள்வி கேட்க முடிந்தது என நிறைய உதாரணங்களை காட்டலாம். 

கேள்வி கேளு!

முன்னாள் துணை குடியரசுத்தலைவர் ஹமித் அன்சாரி,  ஆர்டிஐ சட்டத்தை சுதந்திர இந்தியாவின் முக்கியமான சட்டம் என்று சொன்னார். இந்த சட்டம் மூலம் நாட்டில் நடந்த ஏராளமான ஊழல்கள், பிரச்னைகள், செயல்படாத பணிகள் வெளியே தெரிய வந்தன. இதனை கொண்டு வந்த காங்கிரஸ் அரசே இதில் மாட்டிக்கொண்டு பின்னாளில் ஆட்சியையும் இழந்தது வேடிக்கையானது. இன்று இதனை நீர்த்துபோகச்செய்யவும், கேள்வி கேட்பவர்களை கொல்லவும் மதவாத கும்பல் தீர்மானித்து செயல்பட்டு வருகிறது. 

காடு நம் வீடு!

1927ஆம் ஆண்டு காடுகளை பாதுகாக்க உருவான சட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருந்தன. அதனை சரிசெய்து 1980ஆம் ஆண்டு புதிய சட்டம் உருவானது. இது முழுக்க நேர்த்தியான சட்டம் என்று கூறிவிட முடியாதுதான். ஆனாலும் இந்த சட்டம் காடுகள் அழிவதையும், நீராதாரங்களை தொழில்துறையினர் சிதைப்பதையும் ஓரளவு தடுத்தது. 

தேர்தல் வன்முறை 

இன்று திட்டமிட்டு தேர்தல் வன்முறைகளை செய்து அதனை அரசு தேர்வில் கூட கேள்வியாக கேட்க வைத்து அதற்கு மாணவர்களை பதில் சொல்ல வைக்கும் குரூரம் ஒன்றிய அரசிடம் உள்ளது. ஆனால் தேர்தல் முதன்முறையாக 1951ஆம் ஆண்டு நடைபெறும்போது எந்த வன்முறையும் நடைபெறவில்லை. அமைதியான முறையில் வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்தன. ஆட்சிமாற்றமும் கட்சிகளிடையே இயல்பாக நடந்தது. 

எலக்ட்ரானிக் வாக்குபதிவு

எலக்ட்ரானிக் முறையில் வாக்குப்பதிவு தொடங்கியபிறகு கள்ள வாக்கு என்பது குறைந்துவிட்டது. இன்றும் கூட இதன் நம்பிக்கைத் தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டு திரும்ப வாக்குச்சீட்டிற்கு போய்விடலாமா என நினைக்கும் பழமை வாத கட்சிகள் உள்ளனர். ஆனால் அது எளிதல்ல. இன்று வாக்குப்பதிவு வேகமாக நடத்தவும், அதனை எண்ணி முடிவை அறிவிக்கவும் எலக்ட்ரானிக் மெஷினே உதவுகிறது. 

இட ஒதுக்கீடு

இந்தியாவில் அமலான இட ஒதுக்கீடு, பல்லாண்டுகளாக ஒடுக்குமுறைக்கு உள்ளான பல்வேறு சாதிகளை கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முக்கியமான இடங்களுக்கு கொண்டு வந்தது. பட்டியலின மக்கள், ஆதிதிராவிடர்கள் ஆகியோர் இதனால் பயன்பெற்றனர். தேர்தலில் கூட இட ஒதுக்கீடு, தீண்டப்படாத சாதியினரை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது பாராளுமன்றத்தில் இன்னும் அமலாகவில்லை. அப்படியிருந்தாலும் கூட ஆட்சி நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை அரசியல் கட்சிகள் உணர்ந்துள்ளன. அதற்கேற்ப தொகுதிகளில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. 


HT

Rachel lopez









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்