இடுகைகள்

கொரில்லா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்னை பசுவாக உணரும் மனநிலை! - உண்மையா? உடான்ஸா?

படம்
  கொரில்லா மகிழ்ச்சியாக இருந்தால் ஏப்பம் விடும்! உண்மை. இரையாக கிடைத்த உணவில் அதிக பங்கு கிடைத்தால் கொரில்லா குழுவில் உள்ள  கொரில்லாக்கள் ஏப்பம் விடுகின்றன. ஏப்பம் விடுவது நாம் தொண்டையை சரி செய்துகொள்வது போலவே இருக்கும். ஏப்பம் விடும்போது, உம்..உம் என்ற ஒலிதான் வரும். கூட்டத்தலைவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபிறகு, மற்ற கொரில்லாக்களும் அதை அப்படியே பின்பற்றும். மனிதர் தன்னை பசுவாக கருதுவது மனநல குறைபாடு! உண்மை. மனிதர் தன்னை பசு அல்லது எருதாக கருதுவதை போன்த்ரோபி (Boanthropy) என்ற மனநல குறைபாடாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். கல்லீரலில் ஏற்படும் போர்பைரியா(Porphyria),சைபிளிஸ் ( syphilis) ஆகிய நோய்கள் போன்த்ரோபி குறைபாட்டை ஊக்குவிப்பதாக மருத்துவர்கள் விளக்கம் தருகின்றனர். போன்த்ரோபி குறைபாடு ஒருவருக்கு ஏற்படுவது மிகவும் அரிதானது.  https://thedailywildlife.com/do-gorillas-burp-when-they-are-happy/  https://www.thefactsite.com/100-strange-but-true-facts/

அணுகுண்டு தயாரிப்பு, கொரில்லா பாதுகாப்பு, ஹெச்ஐவி வைரஸ் கண்டுபிடிப்பு, டிஎன்ஏவின் உருவ அமைப்பு கண்டறிந்த சாதனைப் பெண்கள்!

படம்
                    சியன் சுங் வு இயற்பியல் ஆராய்ச்சியாளர் சீனாவைத் தாயகமாக கொண்ட அமெரிக்க இயற்பியலாளர் இவர் . அணு இயற்பியலாளராக உலகின் முதல் அணுகுண்டைத் தயாரிக்க பங்களிப்பை அளித்தவர் . 1949 ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டது . இதன் காரணமாக அமெரிக்கா , சீனா உறவு பாதிக்கப்பட்டது . 1973 ஆம் ஆண்டு வரையில் சியன் தனது தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்லமுடியாது தவித்தார் . சீனாவில் உள்ள நான்ஜியாங் என்ற பல்கலைக்கழகத்தில் கணிதம் , இயற்பியலை கற்றுத்தேர்ந்தார் . பிறகு அமெரிக்காவில் கதிர்வீச்சு பற்றி படிக்க சென்றார் . இவரது பேராசிரியர் எர்னஸ்ட் லாரன்ஸ் , அணு துகள்களை தூண்டும் கருவி ஒன்றை உருவாக்கினார் . சியன் அதனைப் பயன்படுத்தி அணுக்களை பிரித்து கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்கினார் . இவற்றில் புரோட்டான்கள் ஒரே எண்ணிக்கையிலும் நியூட்ரான்கள் வேறுபட்ட எண்ணிக்கையிலும் இருக்கும் . 1940 இல் சியன் தனது படிப்பை நிறைவு செய்தார் . கதிரியக்கம் பற்றி மேலும் அறிய அமெரிக்காவில் தங்கியிருந்தார் . அப்போதுதான் அவருக்கு மான்ஹாட்டன் எனும் திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கி

மனிதர்களின் முன்னோடி விலங்குகளின் பழக்கம், வாழ்க்கைமுறை!

படம்
                              முன்னோர்களின் பழக்கங்கள்… . பாலூட்டி இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் , தங்களது பழக்கவழக்கங்களை எப்படி பெற்றார்கள் ? இதற்கான விடையை மானுடவியலாளர்கள் பல்வேறு ஆய்வுகளின் வழியாக தேடி வருகிறார்கள் . சிம்பன்சி , ஏப் , உராங்குட்டான் , கொரில்லா . போனபோ ஆகிய விலங்குகளின் நம்மின் மரபணுக்களோடும் , பழக்கங்களோடும் ஓரளவு நெருக்கமாயிருக்கின்றன . சாப்பிடுவது , தூங்குவது , குடும்பத்தலைவர் , அதற்கு கீழ் உள்ள அதிகாரப் படிநிலை , குழுக்களின் செயல்பாடு , தினசரி வாழ்க்கை சவால்கள் என பலதையும் இதில் நாம் பார்க்கலாம் . சிம்பன்சி வம்சாவளிப்பிரிவில் நெருங்கிய உயிரினமாக உள்ளது . நாம் இந்த விலங்கின் மரபணுக்களோடு 98 சதவீதம் ஒத்துப்போகிறோம் ., தனது ஐம்பது ஆண்டுகால வாழ்க்கையில் குட்டிகளை பராமரிப்பதிலும் பெரும் குழுக்களாக வாழ்வதிலும் திறன் பெற்றவைகளாக உள்ளன . பதிமூன்று வயது தொடங்கி சிம்பன்சிகள் கருத்தரிக்கத் தொடங்குகின்றன . குட்டிகளை இரண்டு வயது வரை கண்ணும் கருத்துமாக தோளில் தூக்கி வைத்து பராமரிக்கின்றன . ஆண் சிம்பன்சிகள் முதிர்ச்சியடைய அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன . இவ